ரேஞ்சர் 1 (Ranger 1) என்பது அமெரிக்காவின் நாசாவால் ரேஞ்சர் திட்டத்தில் ஏவப்பட்ட விண்கலன்களில் ஒன்றாகும். இவ்விண்கலம் ஆகஸ்ட் 23, 1961 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. இந்த ஏவுதலின் முதன்மைக் குறிக்கோள் நிலவுப் பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கருவிகளையும் நிலவுப் பயணம் தொடர்பான பிற தரவுகளையும் தெரிந்து கொள்வதாகும். மேலும், துணை குறிக்கோளாக விண்வெளியின் தன்மையை அறிவதும் அடங்கும். செலுத்துதலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாய் இவ்விண்கலம் பூமியின் தாழ் வட்டப்பாதையை விட்டு வெளியே செல்ல இயலவில்லை. எனவே இத்திட்டம் பகுதி அளவே வெற்றியடைந்த திட்டமாகும்.[1]

ரேஞ்சர் 1
ரேஞ்சர் 1
திட்ட வகைதொழில் நுட்பம்
இயக்குபவர்நாசா
Harvard designation1961
சாட்காட் இல.173
விண்கலத்தின் பண்புகள்
ஏவல் திணிவு306.2 கிலோகிராம்கள் (675 lb)
திட்ட ஆரம்பம்
ஏவுகலன்அட்லஸ் எல்.வி 3
திட்ட முடிவு
தேய்வு நாள்30 August 1961 (1961-08-31)
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிபூமியின் தாழ் வட்டப்பாதை
வட்டவிலகல்0.019939
அண்மைgee179 கிலோமீட்டர்கள் (111 mi)
கவர்ச்சிgee446 கிலோமீட்டர்கள் (277 mi)

வடிவம்

தொகு

விண்கலமானது அறுகோண வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது. இதில் 5.4 மீட்டர் நீலமுடைய இரண்டு சூரிய மின் தகடுகள் இருந்தன. விண்கலத்தின் கீழ்ப் பகுதியில் அதிதிறன் ஒலிவாங்கி/செலுத்தி (ஆண்டெனா) இணைக்கப்பட்டிருந்தது. இவ்விண்கலம் பூமியை 60,000 - 11,00,000 கிலோமீட்டர் நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்துமாறு செலுத்தத் திட்டமிடப்பட்டது.

தாமதம்

தொகு

தொழில் நுட்பக் காரணங்களால் இவ்விண்கலத்தை செலுத்தும் நிகழ்வு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 26, 1961- ல் ஏவுவதாய் திட்டமிடப்பட்ட இத்திட்டம் கடைசியில் ஆகஸ்ட் 23, 1961- ல் ஏவப்பட்டது.

ஏவுதல்

தொகு

ஆகஸ்ட் 23, 1961- ல் ஏவப்பட்ட போது இதன் முதல் நிலை சரியாக இயங்கியது. விண்கலத்தின் உயரத்தை அதிகரிக்க இயலாமல் போனதால் விண்கலம் செலுத்து வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 30, 1961 அன்று பூமியை அடைந்தது. இதன் மூலம் மிகக் குறைந்த அளவு தகவல்களே பெறப்பட்டன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ranger 1#nssdc1961-021A|National Space Science Data Center, Ranger 1, NSSDC ID: 1961-021A
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஞ்சர்_1&oldid=2919082" இலிருந்து மீள்விக்கப்பட்டது