சனவரி 30
நாள்
(ஜனவரி 30 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 30 (January 30) கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
- 1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின.
- 1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1]
- 1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள்.
- 1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
- 1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.
- 1661 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக பொதுநலவாய இங்கிலாந்தின் காப்பளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் அவர் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் வைபவரீதியாகத் தூக்கிலிடப்பட்டது.
- 1789 – தாய் சொன் படைகள் சிங் சீனருடன் சண்டையிட்டு தலைநகர் அனோயை விடுவித்தன.
- 1820 – எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார்.
- 1835 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
- 1889 – ஆத்திரியா-அங்கேரியின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- 1908 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
- 1930 – குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது.
- 1933 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: அம்போன் சமரில், சப்பானியப் படைகள் டச்சுக் கிழக்கிந்தியாவின் அம்போன் தீவைத் தாக்கி 300 கூட்டுப் படைகளின் போர்க்கைதிகளை கொன்றன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கிக் குண்டினால் தாக்கப்பட்டு பால்டிக் கடலில் மூழ்கியதில் 9,500 பேர் உயிரிழந்தனர்.
- 1948 – லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.
- 1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றான்.
- 1959 – ஆன்சு எட்டொஃப்ட் என்ற பிரித்தானியக் கப்பல் தனது முதலாவது பயணத்தில் பனிமலை ஒன்றுடன் மோதி மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.
- 1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
- 1964 – தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1972 – வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1972 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.
- 1976 – தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
- 1979 – அமெரிக்காவின் வாரிக் போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று டோக்கியோவில் இருந்து புறப்பட்டு 30 நிமிடத்தில் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது.
- 1995 – அரிவாள்செல் சோகை நோய்க்கான சிகிச்சை வெற்றியளித்ததாக அமெரிக்க .தேசிய நல கழகம் அறிவித்தது.
- 2000 – கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.
- 2003 – பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
- 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
- 2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது.
பிறப்புகள்
- 1865 – திரிகுணாதீதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1915)
- 1882 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945)
- 1889 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர் (இ. 1937)
- 1904 – வை. பொன்னம்பலம், தமிழகப் புலவர் (இ. 1973)
- 1910 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
- 1913 – அம்ரிதா சேர்கில், இந்தியப் பெண் ஓவியர் (இ. 1941)
- 1919 – பிரெட் கோரெமாட்சு, அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 2005)
- 1925 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2013)
- 1929 – இசாமு அக்காசாக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
- 1929 – அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய மெய்யியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 2009)
- 1930 – இரா. இளங்குமரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)
- 1938 – இசுலாம் கரிமோவ், உசுபெக்கிசுத்தானின் 1-வது அரசுத்தலைவர் (இ. 2016)
- 1941 – டிக் சேனி, அமெரிக்க அரசியல்வாதி
- 1950 – மு. க. அழகிரி, தமிழக அரசியல்வாதி
- 1951 – பிரகாஷ் ஜவடேகர், இந்திய அரசியல்வாதி
- 1957 – பிரியதர்சன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
- 1967 – பூர்ணிமா ராவ், இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை
- 1968 – எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
- 1971 – தியா குமாரி, இந்திய அரசியல்வாதி
- 1972 – இரகுமான் அப்பாசு, புனைகதை எழுத்தாளர்
- 1974 – கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய நடிகர்
- 1980 – வில்மெர் வால்டெர்ராமா, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1990 – மிட்செல் ஸ்டார்க், ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
- 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600)
- 1832 – ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்
- 1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1804)
- 1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)
- 1891 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)
- 1948 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர், மெய்யியலாளர் (பி. 1869)
- 1948 – ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)
- 1960 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியல் அறிஞர் (பி. 1892)
- 1968 – மாகன்லால் சதுர்வேதி, இந்தியக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1889)
- 1971 – சோல்பரி பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இலங்கை ஆளுநர் (பி. 1887)
- 1981 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)
- 1991 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)
- 1998 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், (பி. 1921)
- 2007 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
- 2012 – இடிச்சப்புளி செல்வராசு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- 2015 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
- ஆசிரியர் நாள் (கிரேக்கம்)
- தியாகிகள் நாள் (இந்தியா)
வெளி இணைப்புகள்
- ↑ Bryant, Edward; Haslett, Simon (2002). "Was the AD 1607 Coastal Flooding Event in the Severn Estuary and Bristol Channel (UK) Due to a Tsunami". Archaeology in the Severn Estuary (13): 163–167. பன்னாட்டுத் தர தொடர் எண்:1354-7089. http://ro.uow.edu.au/cgi/viewcontent.cgi?article=1100&context=scipapers.