தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா

தேசிய நல கழகம் (National Institutes of Health, NIH), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மனித நல மற்றும் சேவை துறையின் முகமை நிறுவனமாகும். இக்கழகம், உயிரி மருத்துவம் மற்றும் உடல் நல சம்பந்தமான ஆய்விற்கான ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மை பொறுப்புள்ள நிறுவனமாகும். தனித்தனியாக இந்நிறுவனம் 27 மையங்களைக்கொண்டுள்ளது. முதலில் இந்நிறுவனம், 1887 - ஆம் ஆண்டு சுகாதார ஆய்வகமாகத்தொடங்கப்பட்டது[1][2]. இக்கழகம், இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது: வெளி பிரிவு (Extramural) மற்றும் உள் பிரிவு (Intramural). வெளி பிரிவு, தேசிய நல கழகத்திற்கு வெளியில் நடக்கும் உயிரி மருத்துவ ஆய்வுக்கு வழங்கும் உதவிதொகைக்கும், உள் பிரிவு, தேசிய நல கழகத்தில் நடக்கும் பணிகளுக்கும் பொறுப்பானவையாகும்.

தேசிய நல கழக சின்னம்

மேற்கோள்கள் தொகு

  1. "A Short History of the National Institutes of Health (1 of 13)". history.nih.gov. பார்க்கப்பட்ட நாள் May 25, 2011.
  2. "SIC 9431 Administration of Public Health Programs". Referenceforbusiness.com. பார்க்கப்பட்ட நாள் May 25, 2011.

இணைய தளங்கள் தொகு