பனிமலை
பனிமலை (Iceberg) என்பது நன்னீரைக் கொண்ட பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்ட அமைப்பாகும்.[1][2]. இந்த பனிமலைகள் திறந்த நீர்நிலைகளில் தாமாக மிதந்தபடி இருக்கும். அத்துடன் பனிமலைகள் பனியடுக்கு அல்லது பனியாற்றிலிருந்து வருவதனால், ஆரம்பத்தில் இருந்தே நன்னீரைக் கொண்டதாக இருக்கும். இதனை கடல் பனியுடன் ஒப்பிடும்போது, கடல் பனி ஆரம்பத்தில் உப்பைக் கொண்டிருந்து, பின்னர் அதன் தோற்ற மாற்றச் செயல்முறையின்போது, உப்பை இழந்து நன்னீராக மாற்றமடையும்.
தூய்மையான பனியின் அடர்த்தி கிட்டத்தட்ட 920 கி.கி/மீ³ ஆகவும், கடல் நீரின் அடர்த்தி 1025 கி.கி/மீ³ ஆகவும் இருப்பதனால், பனிமலையின் கனவளவின் ஒன்பதில் ஒரு பங்கு மட்டுமே நீருக்கு மேலாகக் காணப்படும். நீரின் கீழாக இருக்கும் பனிமலையின் தோற்றத்தை, நீரின் மேற்பரப்புக்கு மேலாக இருக்கும் தோற்றத்தைக் கொண்டு தீர்மானிப்பது கடினம். இதனால் நீரின் கீழான அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், பனிமலைகளின் அருகே செல்வது ஆபத்தானதாக இருக்கின்றது.
பனிமலைகள் கடல் மட்டத்திற்கு மேலாக 1 இலிருந்து 75 மீட்டர் உயரம், 100000 இலிருந்து 200000 மெட்ரிக் தொன்கள் எடை வரை வேறுபடும். வட அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் தெரிந்த, மிகப்பெரிய பனிமலையானது கடல் மட்டத்தில் இருந்து 168 மீட்டர் உயரத்தைக் கொண்டிருக்கின்றது. இது மேற்கு கிரீன்லாந்தில் உள்ள பனியாறுகளில் இருந்து பெறப்பட்டது. இந்த பனிமலையின் உள்ளே வெப்பநிலை -15 இலிருந்து -20 °C (5 to -4 °F) வரை வேறுபடும்.[ [3]
பழைய ஆவணங்களின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய பனிமலையானது அண்டார்ட்டிக்கா வில் இருந்தது. அதன் பரப்பளவு 31000 சதுர கிலோமீட்டர் (335 கி.மீ. x 97 கி.மீ.) ஆகும். பெல்ஜியம் நாட்டின் பரப்பளவை விட இது அதிகமாகும். இது தெற்கு பசுபிக் பெருங்கடலில், Scott Island இற்கு மேற்காக 240 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. USS Glacier இனால் 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 12 இல் கண்டறியப்பட்டது. பனிமலைகளின் வெவ்வேறு அளவிற்கேற்ப அவை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படும்.
அண்மையில் அறியப்பட்ட பெரிய பனிமலைகள்
தொகு- பனிமலை B-15 - 11,000 km2 (4,200 sq mi), 2000
- பனிமலை A-38, about 6,900 km2 (2,700 sq mi), 1998[4]
- பனிமலை B-15A, 3,100 km2 (1,200 sq mi), broke off 2003
- பனிமலை C-19, 5,500 km2 (2,100 sq mi), 2002
- பனிமலை B-9, 5,390 km2 (2,080 sq mi), 1987
- பனிமலை D-16, 310 km2 (120 sq mi), 2006
- வடக்கு கிரீன்லாந்திலுள்ள Petermann பனியாறு 2010, ஆகஸ்ட் 5 இல் உடைந்து உருவாகிய பனிமலையே 100 km2 (39 sq mi), 1962 ஆம் ஆண்டிற்குப் பிறகு அறிந்த பெரிய பனிமலையாகக் கருதப்பட்டது[5]. கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின்னர் இந்தப் பனிமலை Joe Island இல் மோதி இரண்டாக பிளவுபட்டது[6]. 2011 ஜூன் மாதத்தில், Labrador கரையோரத்தில் Petermann பனித் தீவுகள் அவதானிக்கப்பட்டன[7].
- பனிமலை B-17B - 140 km2 (54 sq mi), 1999 - இந்தப் பனிமலை காரணமாக, கப்பல்களுக்கு பாதை மாற்ற அறிவிப்பு 2009 டிசம்பரில் வழங்கப்பட்டது[8].
படத்தொகுப்பு
தொகு-
ஒரு பனிமலை எவ்வாறு இருக்கலாம் என்பதை விளக்கக் கூடிய படம்
-
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் A22A எனப்படும் பனிமலை
-
டைட்டானிக் கப்பல் கவிழக் காரணமானது என சந்தேகப்பட்ட பனிமலை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Definitions of the word "Iceberg"". Google. பார்க்கப்பட்ட நாள் 2006-12-20.
- ↑ "Common Misconceptions about Icebergs and Glaciers". Ohio State University.
Icebergs float in salt water, but they are formed from freshwater glacial ice.
- ↑ "Facts on Icebergs". Canadian Geographic. Archived from the original on 2006-03-31. பார்க்கப்பட்ட நாள் 2010-12-08.
- ↑ "Iceberg A-38B off South Georgia". Visible Earth. Archived from the original on 2008-10-05. பார்க்கப்பட்ட நாள் 2011-03-09.
- ↑ "Huge ice sheet breaks from Greenland glacier". BBC. 2010-08-07. http://www.bbc.co.uk/news/science-environment-10900235. பார்த்த நாள்: 2011-03-09.
- ↑ "Massive Iceberg Crashes Into Island, Splits in Two".
- ↑ "Massive ice island heading for southern Labrador". CBC News. 2011-06-23. http://www.cbc.ca/news/canada/newfoundland-labrador/story/2011/06/23/nl-ice-labrador-623.html.
- ↑ "Shipping alert issued over giant iceberg". Associated Press. 12-11-2009. http://www.msnbc.msn.com/id/34380916/ns/world_news-world_environment/.