நன்னீர்
நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

வரைவிலக்கணம்தொகு
ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.[1]. இந்தியாவில் 19 மாநிலங்களில், குடிநீரில் புளோரைடு உப்புகள் 10.5 விழுக்காடு உள்ளதால், அவை குடிக்கத் தகுதியற்ற நன்னீராக உள்ளது[2]. ஏரிகள், ஆறுகள், சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் மழையாகும்.
கடலுக்கருகில் நன்னீர்தொகு
கடலுக்கருகில் கிணறு தோண்டினால் உவர்நீரே கிடைக்க வேண்டும் என்று கருத வாய்ப்புண்டு. ஆனால் கடற்கரையிலும் நிலத்தடி நன்னீர் இருக்குமாயின் கடற்கரையிலும் நன்னீரைப் பெற முடியும். இதற்கான காரணம், நன்னீரின் அடர்த்தி உவர் நீரை விடக் குறைவாதலால் அது கடல் நீருக்கு மேலே மிதப்பதாகும்.
குறிப்புகள்தொகு
- ↑ "Groundwater Glossary". 2006-03-27. 2006-04-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-05-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ இந்தியாவின் 19 மாநிலங்களில் அபாயகரமான குடிநீர்