பனியடுக்கு
பனியடுக்கு (Ice shelf) என்பது பனியாறு, பனிவிரிப்பு என்பன கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்று, பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனித் திணிவாகும். அண்டார்க்டிக்கா, கிரீன்லாந்து, கனடா ஆகிய இடங்களிலேயே இவ்வாறான பனியடுக்குகள் காணப்படுகின்றன. பனியடுக்குகளின் தடிப்பம் 100 இலிருந்து 1000 மீட்டர் வரை வேறுபடும். பனியாறு நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்து, பின்னர் நிலத்திலிருந்து விடுபட்டு பனியடுக்காக மிதக்கத் தொடங்கும் எல்லையானது தரையிறக்கக் கோடு (Grounding Line) எனப்படும்.
இதற்கு மாறாக கடல் பனியானது நீரிலேயே உருவாவதுடன், பொதுவாக 3 மீட்டரைவிடத் தடிப்பம் குறைந்ததாகவும் இருக்கும். இவ்வகையான கடல் பனியானது ஆர்க்டிக் பெருங்கடலில் மிக அதிகளவில் காணப்படும். அண்டார்க்டிக்காவைச் சுற்றியிருக்கும் தென் பெருங்கடலிலும் கடல்பனி காணப்படும்.
படங்கள்
தொகு-
Ross பனியடுக்கின் பரந்த தோற்றம்
-
அண்டார்ட்டிக்காவில் உள்ள பனியடுக்கில் நிகழும் செயற்பாடுகள்
-
பனியாறு, பனியடுக்கிற்கிடையிலான இடைவினைகள்