1789
1789 (MDCCLXXXIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1789 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1789 MDCCLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1820 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2542 |
அர்மீனிய நாட்காட்டி | 1238 ԹՎ ՌՄԼԸ |
சீன நாட்காட்டி | 4485-4486 |
எபிரேய நாட்காட்டி | 5548-5549 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1844-1845 1711-1712 4890-4891 |
இரானிய நாட்காட்டி | 1167-1168 |
இசுலாமிய நாட்காட்டி | 1203 – 1204 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 9Kansei 1 (寛政元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2039 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4122 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 7 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
- ஜனவரி 23 - ஐக்கிய அமெரிக்காவின் முத்லாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 4 - ஜோர்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். ஜான் ஆடம்ஸ் துணைத் தலைவர் ஆனார்.
- மார்ச் 4 - நியூயோர்க் நகரில் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் கூடி நாட்டின் புதிய அரசியலமைப்பை அதிகாரபூர்வமாக்கியது.
- ஏப்ரல் 28 - "பவுண்டி" என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகள் கப்டன் [[வில்லியம் பிளை என்பவனுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- ஏப்ரல் 30 - ஜோர்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- ஜூன் 14 - பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
- ஜூலை 13 - பாரிஸ் நகரைப் பாதுகாக்க மக்கள் ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
- ஜூலை 14 - பிரெஞ்சுப் புரட்சி (1789-1799) ஆரம்பம்: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
- ஆகஸ்ட் 4 - பிரான்சில், சட்டசபை உறுப்பினர்கள் நாட்டில் நிலமானிய முறையை ஒழிக்க சபதம் எடுத்தனர்.
- ஆகஸ்ட் 28 - வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் துணைக்கோளான என்செலாடசைக் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 22 - ரஷ்ய-துருக்கி போர், 1787-1792: அலெக்சாண்டர் சுவோரொவ் ரிம்னிக் என்ற நகரில் 100,000 துருக்கியர்களைத் தோற்கடித்தார்.
- டிசம்பர் 11 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- வேலு நாச்சியார் சிவகங்கையின் தலைமையை தனது மருமகன் சக்கந்தி வேங்கண் தேவருக்குக் கொடுத்தார்.
- கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாக கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணத்தின் முதன்மை கத்தோலிக்கத் தேவாலயமான சென் மேரீஸ் தேவாலயம் அமைக்கப்பட்டது.
தொடர் நிகழ்வுகள்
தொகுஅரசர்கள்
தொகு- புதுக்கோட்டை:
- இராயரகுநாத தொண்டைமான் 1769-1789
- இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807