பாஸ்டில் நாள்

பிரஞ்சு நாட்டின் தேசிய தினம்

பாஸ்டில் நாள் (Bastille Day) என்பது பிரான்சு நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ஆம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் "Fête Nationale" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது "quatorze juillet" ("14ஆம் நாள் சூலை") என்று அழைக்கப்படுகிறது. 1789 ஆம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ஆம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்சு ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.

பாஸ்டில் நாள்
Fireworks at the ஈபெல் கோபுரம், Paris,
Bastille Day 2014
The aerobatic team of the French Air Force
பிற பெயர்(கள்)பிரான்சு தேசிய நாள்
(Fête nationale)
14 சூலை
(Quatorze juillet)
கடைபிடிப்போர்பிரான்சு
வகைதேசிய நாள்
முக்கியத்துவம்Commemorates the beginning of the பிரெஞ்சுப் புரட்சி with the Storming of the Bastille on 14 July 1789, and the unity of the French people at the Fête de la Fédération on 14 July 1790
கொண்டாட்டங்கள்Military parades, வானவெடி, concerts, balls
நாள்14 சூலை
நிகழ்வுஆண்டுதோறும்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டில்_நாள்&oldid=3447820" இலிருந்து மீள்விக்கப்பட்டது