நவம்பர் 28
நாள்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 28 (November 28) கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.
- 1660 – கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர்.
- 1814 – இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.[1]
- 1821 – பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
- 1843 – அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
- 1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.[1] இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1885 – செர்பிய-பல்கேரியப் போரில் பல்கேரியா வென்றது.
- 1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
- 1899 – இரண்டாம் பூவர் போர்: மோடர் ஆற்று சமரில் பிரித்தானியா பெரும் தோல்வியைச் சந்தித்தது.
- 1905 – அயர்லாந்து தேசியவாதி ஆர்தர் கிறிஃபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் பெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
- 1908 – பென்சில்வேனியாவின் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 154 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
- 1912 – அல்பேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1920 – அயர்லாந்து விடுதலைப் போர்: ஐரியக் குடியரசு இராணுவத்தினர் பிரித்தானியப் படை முகாம் ஒன்றைத் தாக்கி 17 பேரைக் கொன்றனர்.
- 1942 – அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியையும், யப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில், உருசியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
- 1958 – சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
- 1960 – மூரித்தானியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
- 1965 – வியட்நாம் போர்: தென் விடநாமிற்குப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிலிப்பீன்சு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோஸ் அறிவித்தார்.
- 1966 – மிக்கேல் மிக்கொம்பெரோ புருண்டியின் மன்னராட்சியைக் கவிழ்த்து, தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.
- 1967 – வல்பெக்கூலா என்ற விண்மீன் குழாமின் முதலாவது துடிவிண்மீனை ஜோசெலின் பெல் பர்னல், அந்தோனி எவிழ்சு ஆகியோர் கண்டுபிடித்தனர்.
- 1971 – ஜோர்தான் பிரதமர் வாசுபி அல்-தால் பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் இயக்கத்தினரால் படுகொலை செயப்பட்டார்.
- 1972 – பாரிசு நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1975 – கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் உயிரிழந்தனர்.
- 1980 – ஈரான் – ஈராக் போர்: மொர்வாரிது நடவடிக்கையில் ஈராக்கியக் கடற்படை ஈராக் கடற்படையினால் அழிக்கப்பட்டது.
- 1987 – தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1989 – பனிப்போர்: செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
- 1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
- 1990 – லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
- 1991 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
- 2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
- 2014 – நைஜீரியாவின் கனோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
- 2016 – கொலம்பியாவின் மெதெயின் நகருக்கு அருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1293 – எசுன் தெமுர் கான், சீனப் பேரரசர் (இ. 1328)
- 1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1827)
- 1820 – பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1895)
- 1826 – மத்வேய் கூசெவ், உருசிய வானியலாளர் (இ. 1866)
- 1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கிலேய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1912)
- 1901 – எட்வினா மவுண்ட்பேட்டன், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி (இ. 1960)
- 1907 – ஆல்பர்டோ மொராவியா, இத்தாலிய எழுத்தாளர், இதழாளர் (இ. 1990)
- 1918 – வி. கே. வெள்ளையன், இலங்கை மலையகத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (இ. 1971)
- 1927 – சுல்தான் அப்துல் ஹாலிம், மலேசிய மன்னர் (இ. 2017)
- 1927 – எச். வி. ஹண்டே, தமிழக மருத்துவர், அரசியல்வாதி
- 1945 – அமர் கோசுவாமி, இந்திய எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
- 1961 – அல்போன்சா குயூரான், மெக்சிக்கோ இயக்குநர்
- 1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்
- 1966 – பு. ரவிசங்கர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1967 – ஆன்னா நிக்கோல் இசுமித், அமெரிக்க நடிகை (இ. 2007)
- 1976 – ரயன் குவான்டென், ஆத்திரேலிய நடிகர்
- 1984 – மேரி எலிசபெத் வின்ச்டீத், அமெரிக்க நடிகை
- 1985 – சித்தார்த் வேணுகோபால், தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1992 – ஆடம் ஹிக்ஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1694 – மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644)
- 1859 – வாசிங்டன் இர்விங், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1783)
- 1872 – மேரி சோமர்வில்லி, இசுக்கொட்லாந்து-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1780)
- 1873 – காத்தரினா சுகார்பெல்லினி, இத்தாலிய வானியலாளர் (பி. 1808)
- 1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1827)
- 1893 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1814)
- 1925 – ஆல்பிரட் பெரோ, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1863)
- 1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்ட விளையாட்டைக் கண்டுபிடித்த கனடியர் (பி. 1861)
- 1954 – என்ரிக்கோ பெர்மி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)
- 1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)
- 2009 – பொ. ம. இராசமணி, தமிழகத் தமிழறிஞர் (பி. 1936)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (அல்பேனியா, துருக்கியிடம் இருந்து 1912)
- விடுதலை நாள் (மூரித்தானியா, பிரான்சிடம் இருந்து 1960)
- விடுதலை நாள் (பனாமா, எசுப்பானியாவிடம் இருந்து 1821)
- குடியரசு நாள் (புருண்டி)
- குடியரசு நாள் (சாட்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 28 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்