பொதுவாக அரச கழகம் (Royal society) என்று அறியப்படும் தலைவர், அவை மற்றும் இயற்கை அறிவை மேம்படுத்துவதற்கான இலண்டன் அரச கழகத்தின் அறிஞர்கள் அமைப்பானது அறிவியலுக்கான கற்றோர் கழகம் ஆகும். இன்றும் செயற்படக்கூடிய இத்தகைய அமைப்புகளில் இதுவே பழமையானதாக இருக்கக்கூடும். இக்கழகம் 1660 இல் தொடங்கப்பட்டது. மன்னர் இரண்டாம் சார்லசு இக்கழகத்துக்கு அரசு ஏற்பு தந்து அரச கழகம் என அறியச்செய்தார். இன்று, இக்கழகம் பிரித்தானிய அரசுக்கான அறிவியல் ஆலோசகராகச் செயற்படுகிறது.

இலண்டனில் உள்ள அரச கழக வாயில்

இன்று வரை செயற்படக்கூடிய மிகப்பழைமையான கற்றோர் கழகமென செருமானிய லியோபோல்டின அறிவியில் கல்வி நிறுவனம் (German Academy of Sciences Leopoldina) ([1]) உரிமை கோருகின்றது. 1652ல் தொடங்கப்பட்ட அறிவியில் கல்வி நிறுவனத்தை (Academia Naturae Curiosorum) தன் மூலமாகக் கொண்டிருப்பினும் 1687 ஆம் ஆண்டு வரை அலுவல்முறையில் நிறுவப்படவில்லை, அரச கழகம் 1660 இல் ஐக்கிய ராச்சிய அரசரால் பட்டயமளிக்கப்பட்டு நிறுவப்பட்டது.

சான்றுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_கழகம்&oldid=3706802" இலிருந்து மீள்விக்கப்பட்டது