1757
1757 (MDCCLVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1757 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1757 MDCCLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1788 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2510 |
அர்மீனிய நாட்காட்டி | 1206 ԹՎ ՌՄԶ |
சீன நாட்காட்டி | 4453-4454 |
எபிரேய நாட்காட்டி | 5516-5517 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1812-1813 1679-1680 4858-4859 |
இரானிய நாட்காட்டி | 1135-1136 |
இசுலாமிய நாட்காட்டி | 1170 – 1171 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 7 (宝暦7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2007 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4090 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 2 - பிரித்தானியா கல்கத்தாவைக் கைப்பற்றியது.
- ஜனவரி 5 - பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினான்.
- மே 6 - பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
- ஜூன் 23 - இந்தியாவில் பலாஷி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
- நவம்பர் 5 - புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.