1759
1759 (MDCCLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1759 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1759 MDCCLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1790 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2512 |
அர்மீனிய நாட்காட்டி | 1208 ԹՎ ՌՄԸ |
சீன நாட்காட்டி | 4455-4456 |
எபிரேய நாட்காட்டி | 5518-5519 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1814-1815 1681-1682 4860-4861 |
இரானிய நாட்காட்டி | 1137-1138 |
இசுலாமிய நாட்காட்டி | 1172 – 1173 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 9 (宝暦9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2009 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4092 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 15 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
- செப்டம்பர் 10 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
- செப்டம்பர் 13 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
- செப்டம்பர் 18 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- நவம்பர் 6 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
நாள் அறியப்படாதவை
தொகு- புகழ்பெற்ற கின்னஸ் வடிசாலை (Guinness Brewery) அயர்லாந்து, டப்ளினில் நிறுவப்பட்டது.
- சுவீடன், ஸ்டொக்ஹோல்ம் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 250 வீடுகள் எரிந்தன.
- வண. கிறிஸ்டியன் பிரெடெரிக் ஷ்வார்ட்ஸ் பாதிரியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவர் இலங்கை முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட்டார்.