1758
வரலாற்றில் ஒரு ஆண்டு
1758 (MDCCLVIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1758 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1758 MDCCLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1789 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2511 |
அர்மீனிய நாட்காட்டி | 1207 ԹՎ ՌՄԷ |
சீன நாட்காட்டி | 4454-4455 |
எபிரேய நாட்காட்டி | 5517-5518 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1813-1814 1680-1681 4859-4860 |
இரானிய நாட்காட்டி | 1136-1137 |
இசுலாமிய நாட்காட்டி | 1171 – 1172 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 8 (宝暦8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2008 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4091 |
நிகழ்வுகள்
தொகு- ஜூன் 23 - ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
- ஆகஸ்டு 25 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் மன்னன் சோண்டோர்ஃப் என்ற இடத்தில் ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடித்தான்.
- அக்டோபர் 14 - ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.
- நவம்பர் 25 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
- டிசம்பர் 25 - ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கத் திருமணங்களுக்கு டச்சு ஆட்சிக்காரரினால் வரி அறவிடப்பட்டது.
பிறப்புக்கள்
தொகு- ஏப்ரல் 28 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (இ. 1831)
- மே 17 - ஜார்ஜ் பெல்தம் (George Beldham) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- சூன் 27 - ஜான் ஃபிரீமேண்டில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1831)
- அக்டோபர் 11 - ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் (Henrich wilhelm Matthaus Olbers) ஜெர்மானிய நாட்டில் பிறந்த வானவியலாளர். (இ. 1840)
- ரிச்சர்ட் ஃபீல்டர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.