அக்டோபர் 25
நாள்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 25 (October 25) கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார்.
- 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
- 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர்.
- 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர்.
- 1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் டேர்க் ஆர்ட்டொக் பெற்றார். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஆர்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
- 1760 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.
- 1900 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் குடியேற்றத்தை (இன்றைய தென்னாப்பிரிக்காவில்) இணைத்துக்கொண்டது.
- 1917 – உருசியாவில் அக்டோபர் புரட்சி (பழைய யூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
- 1918 – அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்கியதில் 353 பேர் உயிரிழந்தனர்.
- 1920 – இங்கிலாந்தின் பிரிக்சுடன் சிறையில் 74 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சின் பெயின் கோர்க் பிரபு டெரன்சு மெக்சுவீனி இறந்தார்.
- 1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- 1927 – இத்தாலியப் பயணிகள் கப்பல் பிரின்சிபெசா மபால்டா பிரேசிலில் மூழ்கியதில் 314 பேர் உயிரிழந்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கப்பலில் இருந்த நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் மூழ்கியது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.
- 1945 – சப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.
- 1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1973 – இசுரேல்-எகிப்து இடையிலான யோம் கிப்பூர்ப் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
- 1983 – கிரெனடா பிரதமரும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இராணுவப் புரட்சியை அடுத்துத் தூக்கிலிடப்பட்ட ஆறாவது நாள் ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
- 1995 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் தொடருந்து ஒன்று மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர்.
- 1995 – கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.
- 1997 – உள்நாட்டுப் போரை அடுத்து அரசுத்தலைவர் பாசுக்கால் லிசூபா பிராசவில்லி நகரை விட்டு வெளியேறியதை அடுத்து டெனிசு இங்குவேசோ காங்கோ குடியரசின் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
- 2000 – பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
- 2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக போட்டோ என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.
- 2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.
- 2009 – பகுதாது நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
- 2017 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19-வது தேசியப் பேராயத்தில் சீ சின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறப்புகள்
தொகு- 1789 – சாமுவேல் சுகுவாபே, செருமனிய வானியலாளர் (இ. 1875)
- 1806 – மக்சு இசுரேனர், செருமானிய மெய்யியலாளர் (இ. 1856)
- 1811 – எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1832)
- 1881 – பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர், சிற்பக் கலைஞர் (இ. 1973)
- 1912 – மதுரை மணி ஐயர், கருநாடக இசைப் பாடகர் (இ. 1968)
- 1929 – ஜார்ஜ் பீல்டு, அமெரிக்க வானியற்பியலாளர்
- 1939 – எம். வி. விஷ்ணு நம்பூதிரி, மலையாள நாட்டுப்புறவியலாளர்
- 1950 – ராமபத்ராச்சார்யா, இந்திய குரு, கல்வியாளர், சமற்கிருத அறிஞர், பன்மொழியாளர்
- 1955 – சுப்ரபாரதிமணியன், தமிழக எழுத்தாளர்
- 1975 – ஸேடி ஸ்மித், ஆங்கிலேய நூலாசிரியர்
- 1984 – திசியா காரா, அங்கேரிய சதுரங்க ஆட்ட வீரர்
- 1984 – கேட்டி பெர்ரி, அமெரிக்கப் பாடகி, நடிகை
- 1893 – செ. நாகலிங்கம், இலங்கை நீதிபதி (இ. 1958)
- 1953 – வதிரி. சி. ரவீந்திரன், இலங்கை எழுத்தாளர்
- 1972 – எஸ்தர் டுஃப்லோ, பிரான்சியப் பொருளாதார அறிஞர்
- 1973 – றசல் ஆர்னோல்ட், இலங்கை துடுப்பாட்ட வீரர்
- 1997 – துளசி நாயர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
தொகு- 1400 – ஜெஃப்ரி சாசர், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1343)
- 1949 – மேரி அக்வர்த் எவர்ழ்செடு, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1867)
- 1955 – சடாகோ சசாகி, அணுகுண்டினால் பாதிப்படைந்த சப்பானியர் (பி. 1943)
- 1958 – செ. நாகலிங்கம், இலங்கை நீதிபதி (பி. 1958)
- 1975 – காளிதாஸ் ராய், வங்காளக் கவிஞர் (பி. 1889)
- 1999 – எஸ். ராஜேஸ்வர ராவ், இந்திய இசையமைப்பாளர், பல்வாத்தியக் கலைஞர், பாடகர் (பி. 1922)
- 2012 – ஜஸ்பால் பட்டி, இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1955)
சிறப்பு நாள்
தொகு- முதலாம் போன்பாசு விழா
- இறைமை நாள் (சுலோவீனியா)
வெளி இணைப்புகள்
தொகு- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 25 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்