மதுரை மணி ஐயர்

மதுரை மணி ஐயர் (அக்டோபர் 25, 1912 - ஜூன் 8, 1968) கருநாடக இசையுலகில் புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர். சுவரம் பாடுவதில் வல்லுநராகக் கருதப்பட்டார்.

மதுரை மணி ஐயர்
Madurai Mani Iyer 1948.jpg
பிறப்புசுப்பிரமணியன்
அக்டோபர் 25, 1912(1912-10-25)
மதுரை, இந்தியா இந்தியா
இறப்பு8 சூன் 1968(1968-06-08) (அகவை 55)
பணிகருநாடக இசைப் பாடகர்
பெற்றோர்எம். எசு. ராமசுவாமி, சுப்புலட்சுமி

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. மதுரையில் எம். எஸ். இராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் இராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர்.

சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதருடைய மாணவர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன் தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார்.

மணி ஐயர் தம் பெருநோய் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நெருக்கமான உறவுள்ளவராக இருந்தார்.

சுவரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர்.

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 
  2. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 23 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_மணி_ஐயர்&oldid=3587818" இருந்து மீள்விக்கப்பட்டது