முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித முதலாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 28, 418 முதல் செப்டம்பர் 4, 422 வரை பணியாற்றினார். இவர் புனித அகஸ்தீனுடைய சமகாலத்தவர். புனித அகுஸ்தீன், இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.

புனித முதலாம் போனிஃபாஸ்
42ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்டிசம்பர் 28, 418
ஆட்சி முடிவுசெப்டம்பர் 4, 422
முன்னிருந்தவர்சோசிமஸ்
பின்வந்தவர்முதலாம் செலஸ்தீன்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
???
இறப்பு(422-09-04)செப்டம்பர் 4, 422
???
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தைத் தேர்தலில் குழப்பம் தொகு

திருத்தந்தை சோசிமஸின் இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் யூலாலியுஸ் (Eulalius). இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோரி உரோமை ஆட்சியாளர் சிம்மாக்குஸ் என்பவர் இரவேன்னா நகரில் தங்கியிருந்த உரோமை மன்னன் ஹொனோரியசைக் Honorius கேட்டார். அவர், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யூலாலியுஸ் ஆதலால் அவருக்கே ஆதரவளித்தார்.

உரோமைப் பேரரசின் அரசி காலா பிலசிடியா (Galla Placidia) என்பவரும் அவருடைய கணவர் மூன்றாம் கொன்ஸ்தான்சியும் கூட யூலாலியுசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், யார் திருத்தந்தை என்னும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு வசதியாக போனிஃபாசும் யூலாலியுசும் உரோமைக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அச்சமயம் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா அண்மையில் நிகழவிருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு யூலாலியுசு அரச சட்டத்தை மீறி உரோமைக்குத் திரும்பினார். இது உரோமை ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹொனோரியசு மன்னன் 419, ஏப்ரல் 3ஆம் நாள் அன்று போனிஃபாசே முறைப்படி திருத்தந்தை ஆவார் என்று அறிவித்தார்.

போனிஃபாஸ் ஆட்சி தொகு

போனிஃபாஸ், பெலாஜியுஸ் (Pelagianism) என்பவர் போதித்த தவறான கொள்கையைக் கண்டித்தார்.மேலும், திருப்பீடத்துக்கு உள்ள உரிமைகளை இவர் நிலைநாட்டினார்.

வெளி இணைப்புகள் தொகு

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
சோசிமஸ்
திருத்தந்தை
418–422
பின்னர்
முதலாம் செலஸ்தீன்