1958
1958 (MCMLIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 4 – ஸ்புட்னிக் 1 பூமியில் வீழ்ந்தது.
- சனவரி 4 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
- சனவரி 31 – அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் I விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- பிப்ரவரி 5 – பிரிதந்தானிய அரசு முதன் முதலில் வாகனம் நிறுத்துவதற்கான மீட்டர்களை மேப்பர் வீதியில் பொருத்தி சோதனை செய்தது.
- மார்ச் 11 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.
- மார்ச் 27 – நிக்கித்தா குருசேவ் சோவியத்தின் பிரதமரானார்.
- ஏப்ரல் 3 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடர்ந்தது.
- சூலை 29 - உத்தியோகபூர்வமாக நாசா ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 9 - பாப்பாரசர் பன்னிரண்டாவது பயஸ் காலமானார்.
இலங்கை நிகழ்வுகள்
தொகு- மே 22 – இலங்கை இனக்கலவரம், 1958 ஆரம்பமானது. அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- மே 23 – மட்டக்களப்பில் தொடருந்து ஒன்று தடம் புரண்டது.[1]
- மே 24 – இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.[1]
- மே 25 – பொலன்னறுவைவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[1]
- மே 27 – இலங்கை முழுவதற்கும் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.[1]
- மே 27 – இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.[1]
- மே 27 – இலங்கையின் தெற்கே பாணந்துறையில் சிங்களக் காடையர்களால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[1]
- மே 28 – கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர்.[1]
- மே 28 – கல்கிசை, ஓட்டல் வீதியில் தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[1]
- மே 29 – யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு சிங்களவரும் கொல்லப்படவில்லை என அங்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் குணசேன டி சொய்சா பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கு அறிவித்தார். யாழ்ப்பாணம் நாக விகாரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.[1]
- மே 30 – இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.[1]
- சூன் 1 – யாழ்ப்பாண மாவட்டத்தில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் அனைவரும் அவற்றைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிடப்பட்டது.[1]
- சூன் 1 – கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து 2,100 சிங்களவர்கள் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டனர்.[1]
- சூன் 5 – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.[1]
- சூன் 6 – மேலும் 5,029 தமிழர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.[1]
- சூன் 8 – ஜாதிக விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் கே. எம். பி. ராஜரத்தினா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[1]
- சூன் 22 – பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தமிழ் மொழிக்கான சிறப்புச் சட்ட வரைபை தனது இலங்கை சுதந்திரக் கட்சியிடம் சமர்ப்பித்தார்.[1]
பிறப்புகள்
தொகு- ஆகஸ்ட் 29 - மைக்கல் ஜாக்சன், பாப் இசை உலகில் புகழ் பெற்ற ஆபிரிக்க அமெரிக்கப் பாடகர் (இ. 2009)
இறப்புகள்
தொகு- சூன் 5 - ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - பவெல் செரென்கோவ் (Pavel Alekseyevich Cherenkov), ஈல்யா பிராங்க் (Ilya Mikhailovich Frank), ஈகர் தம் (Igor Yevgenyevich Tamm)
- வேதியியல் - பிரெட்ரிக் சாங்கர் (Frederick Sanger)
- மருத்துவம் - ஜோர்ஜ் பீடில் (George Wells Beadle), எட்வர்ட் டாட்டம் (Edward Lawrie Tatum), ஜோசுவா லெடர்பேர்க் (Joshua Lederberg)
- இலக்கியம் - போரிஸ் பாஸ்ரர்நாக்
- சமாதானம் - ஜோர்ஜர்ஸ் பயர் (Georges Pire)