மே 30
நாள்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 30 (May 30) கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர்.
- 1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது.
- 1416 – திரிபுக் கொள்கைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிராகா நாட்டு மெய்யியலாளர் ஜெரோமி காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தினால் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1431 – நூறாண்டுப் போர்: பிரான்சிய வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.
- 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
- 1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் எர்னாண்டோ டி சோட்டோ தனது 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
- 1574 – மூன்றாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தது.
- 1602 – முதலாவது இடச்சுக் கப்பல் (லா பிரேபிசு) இலங்கையில் தென்பட்டது.[1]
- 1631 – முதலாவது பிரெஞ்சு மொழிப் பத்திரிகை கசெட் டி பிரான்சு வெளிவந்தது.
- 1635 – முப்பதாண்டுப் போர்: பிராகா அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1642 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் வழங்கியிருந்த அனைத்து விருதுகளும் இந்நாளில் இருந்து செல்லுபடியாகாது என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.
- 1814 – நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரான்சிய எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.
- 1842 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பர்ட்டுடன் இலண்டனில் பயணம் செய்கையில் ஜோன் பிரான்சிசு என்பவன் அவரைக் கொலை செய்ய முயற்சித்தான்.
- 1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
- 1854 – கேன்சஸ், நெப்ராஸ்கா ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் பண்டலங்கள் ஆகின.
- 1876 – உதுமானிய சுல்தான் அப்துலசீசு பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மருமகன் ஐந்தாம் முராத் சுல்தானானார்.
- 1883 – நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
- 1913 – லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
- 1914 – அக்காலத்தின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அக்குவித்தானியா தனது முதல் பயணத்தி இங்கிலாந்து, லிவர்பூலில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி ஆரம்பித்தது.
- 1925 – மே 30 இயக்கம்: சாங்காய் காவல்துறை கிளர்ச்சியில் ஈடுபட்ட 13 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானியப் போர் விமானங்கள் செருமனியின் கோல்ன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
- 1958 – இலங்கை இனக்கலவரம், 1958: இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.[2]
- 1961 – நீண்ட காலம் டொமினிக்கன் குடியரசை ஆண்ட ரஃபாயெல் துருயீலோ சாந்தோ தொமிங்கோ நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
- 1967 – நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.
- 1968 – பிரான்சியத் தளபதி சார்லஸ் டி கோல் பிரான்சிய தேசியப் பேரவையைக் கலைத்தார். அவரது ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பாரிசு நகரில் கூடினர்.
- 1971 – மரைனர் திட்டம்: செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1972 – இசுரேலின் லொட் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படை தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
- 1974 – ஏர்பஸ் ஏ300 பயணிகள் வானூர்தி முதலாவது சேவையை ஆரம்பித்தது.
- 1975 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1982 – பனிப்போர்: எசுப்பானியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.
- 1987 – கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது.
- 1998 – வடக்கு ஆப்கானித்தானில் தக்கார் மாகாணத்தில் 6.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1998 – பாக்கித்தான் கரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
- 2003 – மியான்மரில் எதிர்க்கடி ஆதரவாளர்கள் 70 பேர் வரை அரசுப் படைகளினால் கொல்லப்பட்டனர். ஆங் சான் சூச்சி இவ்விடத்தை விட்டு வெளியேறினாலும், பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
- 2012 – லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்லசு டெய்லருக்கு சியேரா லியோனியின் உள்நாட்டுப் போரில் நிகழ்த்திய குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- 2013 – நைஜீரியாவில் ஒருபால் திருமணம் தடை செய்யப்பட்டது.
பிறப்புகள்
- 1423 – ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1461)
- 1814 – மிகைல் பக்கூனின், உருசிய மெய்யியலாளர் (இ. 1876)
- 1903 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் (இ. 1973)
- 1931 – சுந்தர ராமசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 2005)
- 1934 – அலெக்சி லியோனொவ், சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (இ. 2019)
- 1940 – ஜக்மோகன் டால்மியா, இந்தியத் துடுப்பாட்ட நிருவாகி (இ. 2015)
- 1947 – வி. நாராயணசாமி, இந்திய அரசியல்வாதி, புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சர்
- 1958 – கே. எஸ். ரவிகுமார், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1975 – மாரிசா மேயர், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், தொழிலதிபர்
இறப்புகள்
- 1431 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சியப் புனிதர் (பி. 1412)
- 1593 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564)
- 1606 – குரு அர்ஜன், சீக்கிய குரு (பி. 1563)
- 1640 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், செருமானிய-பெல்ஜிய ஓவியர் (பி. 1577)
- 1778 – வோல்ட்டயர், பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1694)
- 1912 – வில்பர் ரைட், அமெரிக்க விமானி, தொழிலதிபர் (பி. 1867)
- 1929 – பாம்பன் சுவாமிகள், தமிழகப் புலவர் (பி. 1850)
- 1949 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (பி. 1904)
- 1955 – என். எம். ஜோசி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1875)
- 1960 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1890)
- 1981 – பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், தென்னிந்திய மிருதங்கக் கலைஞர் (பி. 1912)
- 1995 – டெட் டிரேக், ஆங்கிலேயக் காற்பந்து வீரர் (பி. 1912)
- 2011 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1921)
- 2013 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை மருத்துவர், அரசியல்வாதி (பி. 1953)
சிறப்பு நாள்
- புரட்சி நாள் (அங்கியுலா)
- இந்தியர்களின் வருகை (டிரினிடாட் மற்றும் டொபாகோ)
- அன்னையர் நாள் (நிக்கராகுவா)