அன்னையர் நாள்

அன்னையர்களை கௌரவிப்பதற்கான கொண்டாட்டம்


அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.[1] இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும்.

அன்னையர் நாள்
Mother's Day
Mothers Day card.png
அன்னையர் தின வாழ்த்து அட்டை
கடைபிடிப்போர்பல நாடுகள்
வகைவணிக
நாள்பிராந்தியரீதியாக மாறுபடும்
தொடர்புடையனதந்தையர் தினம், பெற்றோர் நாள், குழந்தைகள் நாள்

விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை "ஹால்மார்க் விடுமுறை தினம்" என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அன்னா தான் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[1][2]

வரலாற்று முன்நிகழ்வுகள்தொகு

லாம்பர்ட்ஸ்[யார்?] இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாகக் கருதினார். இது கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாகும். இந்த திருவிழாவானது ஆசியா மைனரில் சமஇரவு நாள் அன்றும், ரோமில் மார்ச் ஐடஸில் இருந்து (மார்ச் 15) மார்ச் 18 வரைக்குள் கொண்டாடப்படுகின்றது.

பண்டைய ரோமன் வேறொரு விடுமுறை தினமான மேட்ரோனலியாவையும் கொண்டுள்ளது. அது ஜூனோவுக்கு அரிப்பணிக்கப்பட்டது. இருப்பினும் அன்னையர்கள் இந்த நாளில் பரிசுப்பொருட்களை வழங்கினர்.

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் பல நீண்டகாலத்திய மரபுகள் இருந்தன. அங்கு குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது. தாய் ஞாயிறு கொண்டாட்டங்கள் ஆங்கிலிக்கர்கள் உட்பட கிறிஸ்துவப் பெரும்பான்மையுள்ள பல பகுதிகளில் கிறிஸ்துவ நாட்காட்டியின் பகுதியாகவே உள்ளன. மேலும் கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது. கன்னி மேரியையும் "மாதா தேவாலய"த்தையும் கௌரவிக்க லெண்ட்டில் நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. மரபு ரீதியாக இந்த நாளானது, அன்னைக்கு பரிசுகளை அளித்து சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பெண்களின் குறிப்பிட்ட மரபு ரீதியான வீட்டுவேலைகளை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்ட சைகையைக் கொண்டு பாராட்டுதலைக் குறிக்கின்றது.[சான்று தேவை]

அன்னையர் தினத்தில் இன்னமும் சிறப்பாக, பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகின்றது.

ஜூலியா வார்டு ஹோவே அவர்களால் வழங்கப்பட்ட "அன்னையர் தின அறிவிப்பானது" அமெரிக்காவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட முந்தைய அழைப்புகளில் ஒன்று. 1870 ஆம் ஆண்டில் எழுத்திலான ஹோவேயின் அன்னையர் தின அறிவிப்பானது, அமெரிக்க குடியுரிமைப் போர் மற்றும் பிராங்கோ-புரூஸ்சியன் போர் ஆகியவற்றின் படுகொலைக்கான எதிர் விளைவானது.அந்த அறிவிப்பானது, பெண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயங்களை அரசியல் அளவில் வடிவமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்ற ஹோவேயின் பெண்ணிய நம்பிக்கையுடன் பின்னப்பட்டது.

உச்சரிப்புதொகு

1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார்.[1][3]

"She was specific about the location of the apostrophe; it was to be a singular possessive, for each family to honour their mother, not a plural possessive commemorating all mothers in the world."[1]

இது உச்சரிப்பாக U.S. விடுமுறை தின சட்ட உருவாக்க அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்க ஒன்றிய அதிபர் உட்ரோ வில்சன் அவர்களாலும், அமெரிக்க ஒன்றிய காங்கிரஸ் அறிவிப்புக்களினாலும்,[4][5] மற்றும் பிற அமெரிக்க ஒன்றிய அதிபர்கள் அவர்களின் அறிவிப்புகளின் மூலமும் பயன்படுத்தப்பட்டது.[6]

ஆங்கில மொழியின் பொதுவான பயன்பாடானது, மேம்போக்காக "Mother's Day" என்று ஒருமையைக் குறிக்க உச்சரிக்கத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் "Mothers' Day" (பன்மைக்கு) கேட்டறியத் தேவையில்லை என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமான தேதிகள்தொகு

நெதர்லாந்தில் அன்னையர் தினம் (1925)

அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தை பிற நாடுகளும் கலாச்சாரமும் ஏற்றுக்கொண்டதால், ஐக்கிய இராச்சியத்தில் தாய் ஞாயிறு மற்றும் கிரீஸில் உள்ள கோயிலில் பாரம்பரிய இறை வழிபாடு போன்ற தாய்மையைப் பெருமைப்படுத்த ஏற்கனவே கொண்டாட ஏற்றதாக இருந்த தேதி மாறியது. சில நாடுகளில் இந்தத் தேதியானது கத்தோலிக்க நாடுகளில் உள்ள கன்னிமேரி தினம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் இறைத்தூதர் முகமதுநபியின் மகள் பிறந்ததினம், போன்று பெரும்பான்மையான மதத்தின் தனித்தன்மையாக இருந்த தேதிகளுக்கு மாற்றப்பட்டது. பிற நாடுகளில், பொலிவியாவில் அங்கு நடைபெற்ற குறிப்பிட்ட போரில் பங்குபெற்ற பெண்களின் பிறந்த தேதிகளைப் பயன்படுத்துவது போன்று வரலாற்றுத் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. முழுமையான பட்டியலுக்கு "சர்வதேச வரலாறும் பாரம்பரியமும்" பிரிவைக் காண்க.

குறிப்பு: சர்வதேச பெண்கள் தினத்தை அன்னையர் தினத்திற்குப் பதிலாகக் கொண்டாடும் நாடுகள் குத்துவாள் '†' குறியீட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

கிரெகொரியின் நாட்காட்டி
நிகழ்வு தினம் நாடு

பிப்ரவரி இரண்டாவது ஞாயிறு

பிப்ரவரி 14, 2022
பிப்ரவரி 13, 2023

பிப்ரவரி 12, 2024

  நோர்வே

3 மார்ச்சு

  சியார்சியா

8 மார்ச்சு

  ஆப்கானித்தான்
  அல்பேனியா
  கொசோவோ
  ஆர்மீனியா

  அசர்பைஜான்
  பெலருஸ்
  பொசுனியா எர்செகோவினா

  பல்கேரியா
  கசக்கஸ்தான்
  லாவோஸ்

  மாக்கடோனியக் குடியரசு
  மல்தோவா
  மொண்டெனேகுரோ
  உருமேனியா

  சுலோவீனியா
  செர்பியா
  தாஜிக்ஸ்தான்
  வியட்நாம்†*

நான்காவது ஞாயிறு Lent

மார் 27, 2022
மார் 19, 2023
மார் 10, 2024

  அயர்லாந்து
  நைஜீரியா

  ஐக்கிய இராச்சியம்

21 மார்ச்சு
(vernal equinox)

  பகுரைன்
  கொமொரோசு
  சீபூத்தீ
  எகிப்து
  ஈராக்
  யோர்தான்

  குவைத்
  லிபியா
  லெபனான்[7]
  மூரித்தானியா
  ஓமான்

  பலத்தீன்
  கத்தார்
  சவூதி அரேபியா
  சோமாலியா
  சூடான்

  சிரியா
  ஐக்கிய அரபு அமீரகம்
  யேமன்

25 மார்ச்சு

  சுலோவீனியா

7 ஏப்பிரல்

  ஆர்மீனியா

First Sunday in May

மே Expression error: Unexpected < operator., 2022
மே Expression error: Unexpected < operator., 2023
மே Expression error: Unexpected < operator., 2024

  அங்கேரி
  லித்துவேனியா

  மொசாம்பிக்
  போர்த்துகல்

  உருமேனியா
  எசுப்பானியா

8 மே

  தென் கொரியா (Parents' Day)

10 மே

  எல் சல்வடோர
  குவாத்தமாலா

  மெக்சிக்கோ

Second Sunday of May

May Expression error: Unexpected < operator., 2022
May Expression error: Unexpected < operator., 2023
May Expression error: Unexpected < operator., 2024

  அங்கியுலா
  அன்டிகுவா பர்புடா
  அரூபா
  ஆத்திரேலியா
  ஆஸ்திரியா
  பஹமாஸ்
  வங்காளதேசம்
  பார்படோசு
  பெல்ஜியம்
  பெலீசு
  பெர்முடா
  பொனெய்ர்
  போட்சுவானா
  பிரேசில்
  புரூணை

  கனடா
  கம்போடியா
  சிலி[8]
  சீனா[9]
  கொலம்பியா
  குரோவாசியா
  கியூபா[10]
  குராசோ
  சைப்பிரசு
  செக் குடியரசு[11]
  டென்மார்க்

  டொமினிக்கா
  எக்குவடோர்
  எசுத்தோனியா
  எதியோப்பியா
  பிஜி
  பின்லாந்து
  செருமனி
  கானா
  கிரேக்க நாடு
  கிரெனடா
  கயானா
  ஒண்டுராசு
  ஆங்காங்
  ஐசுலாந்து
  இந்தியா

  இத்தாலி
  ஜமேக்கா
  சப்பான்
  ஈராக்கிய குர்திஸ்தான்
  கென்யா
  லாத்வியா
  லைபீரியா
  லீக்கின்ஸ்டைன்
  மக்காவு
  மலேசியா
  மால்ட்டா
  மியான்மர்
  நெதர்லாந்து
  நியூசிலாந்து
  பாக்கித்தான்
  பப்புவா நியூ கினி
  பெரு[12]

  பிலிப்பீன்சு
  புவேர்ட்டோ ரிக்கோ
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
  செயிண்ட். லூசியா
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
  சமோவா
  சிங்கப்பூர்
  சின்டு மார்தின்
  சிலவாக்கியா[11]
  தென்னாப்பிரிக்கா[சான்று தேவை]
  இலங்கை
  சுரிநாம்

  சுவிட்சர்லாந்து
  சீனக் குடியரசு
  தங்கனீக்கா
  தொங்கா
  டிரினிடாட் மற்றும் டொபாகோ
  துருக்கி
  உகாண்டா
  உக்ரைன்
  ஐக்கிய அமெரிக்கா
  உருகுவை
  வியட்நாம்
  வெனிசுவேலா
  சாம்பியா
  சிம்பாப்வே

15 மே

  பரகுவை (same day as Día de la Patria)[13]

19 மே

  கிர்கிசுத்தான் (உருசியம்: День матери, கிர்கீசியம்: Энэ күнү)

26 மே

  போலந்து "Dzień Matki"

27 மே

  பொலிவியா[14]

Last Sunday of May (sometimes first Sunday of June if it's Pentecost)

May Expression error: Unexpected < operator., 2022
May Expression error: Unexpected < operator., 2023
May Expression error: Unexpected < operator., 2024

  அல்ஜீரியா
  டொமினிக்கன் குடியரசு

  பிரான்சு (First Sunday of June if Pentecost occurs on this day)
  French Antilles (First Sunday of June if Pentecost occurs on this day)
  மொரோக்கோ

  எயிட்டி[15]

  மொரிசியசு

  சுவீடன்
  தூனிசியா

30 மே

  நிக்கராகுவா[16]

1 சூன்

  மங்கோலியா† (Mothers' and Children's Day.)

Second Sunday of June

Jun Expression error: Unexpected < operator., 2022
Jun Expression error: Unexpected < operator., 2023
Jun Expression error: Unexpected < operator., 2024

  லக்சம்பர்க்

12 ஆகஸ்து

  தாய்லாந்து (birthday of Queen Sirikit)

15 August (Assumption of Mary)

  கோஸ்ட்டா ரிக்கா
ஆண்ட்வெர்ப் (Belgium)

Second Monday of October

Oct Expression error: Unexpected < operator., 2022
Oct Expression error: Unexpected < operator., 2023
Oct Expression error: Unexpected < operator., 2024

  மலாவி

14 அக்டோபர்

  பெலருஸ்

Third Sunday of October

Oct Expression error: Unexpected < operator., 2022
Oct Expression error: Unexpected < operator., 2023
Oct Expression error: Unexpected < operator., 2024

  அர்கெந்தீனா (Día de la Madre)[17]

Last Sunday of November

Nov Expression error: Unexpected < operator., 2022
Nov Expression error: Unexpected < operator., 2023
Nov Expression error: Unexpected < operator., 2024

  உருசியா

3 நவம்பர்

  கிழக்குத் திமோர்

8 திசம்பர் (Feast of the Immaculate Conception)

  பனாமா[18]

22 திசம்பர்

  இந்தோனேசியா[19]

Other calendars
Occurrence Equivalent Gregorian dates Country

Shevat 30

Between 30 January and 1 March

  இசுரேல்[20]

Baisakh Amavasya (Mata Tirtha Aunsi)

Between 19 April and 19 May

  நேபாளம்

20 Jumada al-thani[n 1]

24 May 2011

12 May 2012
1 May 2013

  ஈரான்[21]

சர்வதேச வரலாறும் பாரம்பரியமும்தொகு

பெரும்பாலான நாடுகளில், அன்னையர் தினம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மதிப்பிடப்பட்ட விடுமுறை தினத்திலிருந்து வருவிக்கப்பட்டு சமீபத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இது பிற நாடுகள் மற்றும் கலாச்சாரங்களால் ஏற்கப்பட்ட பொழுது, அது வேறுபட்ட அர்த்தங்களை அளித்தது. வேறுபட்ட நிகழ்வுகளுடன் (மதங்கள், வரலாறு அல்லது புராணம்) தொடர்புடையதாக இருந்தது. மேலும் வேறுபட்ட தேதி அல்லது தேதிகளில் கொண்டாடப்பட்டது.

பல நாடுகளில் தாய்மையைப் போற்றும் கொண்டாட்டங்கள் ஏற்கனவே இருந்தன. அவற்றின் கொண்டாட்டங்கள் தங்கள் சொந்த அன்னைக்கு கார்னேஷன் மலர்கள் மற்றும் பிற பரிசுப்பொருட்களை வழங்குதல் போன்ற பல நீட்டிக்கப்பட்ட அம்சங்களை அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்திலிருந்து ஏற்றுக்கொண்டன.

கொண்டாட்டங்களின் நீட்சியானது பெரிதும் வேறுபடுகின்றது. சில நாடுகளில், தாயாக உள்ள ஒருவர் அன்னையர் தினத்தைக் கொண்டாடவில்லை எனில் அது குற்றமாகும். பிறவற்றில், இது நன்கறிந்த சிறிய விழாவாக முக்கியமாகக் குடியேறியவர்களால் கொண்டாடப்படுகின்றது அல்லது வெளிநாட்டு கலாச்சாரத்தின் (ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒப்பீடு) அம்சமாக ஊடகத்தால் வழங்கப்படுகின்றது.

மதம்தொகு

கத்தோலிக்கத் திருச்சபையில், விடுமுறை தினமானது கன்னி மேரியின் பெருமதிப்புடன் வலிமையான தொடர்புடையது.[22]

இந்து பாரம்பரியம், இதை "மாதா தீர்த்த ஆயுன்ஷி" அல்லது "தாய் அரைத்திங்கள் புனிதப் பயணம்" என்று அழைக்கின்றது. மேலும் இது இந்து மக்கள்தொகை அதிகமுள்ள, குறிப்பாக நேபாளத்தில் கொண்டாடப்படுகின்றது.

நாடுகள்தொகு

ஆப்பிரிக்க நாடுகள்தொகு

பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அன்னையர் தினக் கருத்தை பிரிட்டிஷ் பாரம்பரியத்திலிருந்து ஏற்றுக்கொண்டன. இருப்பினும் முன்னாளில் ஐரோப்பிய சக்திகளால் ஆப்பிரிக்கக் குடியேற்றத்தைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல வேறுபட்ட கலாச்சாரங்களிடையே அன்னைகளைப் போற்றும் பல திருவிழாக்களும் நிகழ்ச்சிகளும் உள்ளன.

வங்கதேசம்தொகு

வங்கதேசத்தில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளானது அரசாங்கம் மற்றும் அரசுசாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சிகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. வங்கதேச சமூகத்தில் அன்னையர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்ட ரத்னகர்வா மா விருதை சில அன்னையர்கள் வழங்குகின்றனர். அன்னைகள், அவர்களின் குழந்தைகள் பின்னாளில் நாட்டின் சிறந்த குடிமகன்களாக வர பாராட்டும்படி சிறப்பான முறையில் வளர்த்ததற்காக கிராண்ட் ஆசாத் ஹோட்டல் வழங்கிய விருதைப் பெற்றனர். மேலும், தலைநகரில் அந்த தினத்தைக் குறிக்க வரவேற்பு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேனல்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின மற்றும் செய்தித்தாள்கள் அந்த தினத்தைக் குறிக்க சிறப்பு அம்சங்களையும் பத்தியையும் வெளியிட்டன. வாழ்த்து அட்டைகள், மலர்கள் மற்றும் தாயின் சிறப்பை குழந்தைகளுக்கு காண்பிக்கும் பரிசுப்பொருட்கள் ஆகியவை கடைகளிலும் சந்தைகளிலும் இருந்தன.

பொலிவியாதொகு

பொலிவியாவில் அன்னையர் தினம் மே 27 அன்று கொண்டாடப்படுகின்றது. இது நவம்பர் 8, 1927 அன்று கரோனில்லா போரின் நினைவைக் கொண்டாட சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போரானது தற்போதைய நகரான கொக்ஹபம்பாவில் மே 27 1812 அன்று நடைபெற்றது. இந்தப் போரில், பெண்கள் நாட்டின் விடுதலைக்காகச் சண்டையிட்டு ஸ்பானிஷ் இராணுவத்தால் வதைக்கப்பட்டனர்.

கனடாதொகு

கனடாவில் பொது விடுமுறை தினம்#பிற சடங்குகள் என்பதைக் காண்க.

அன்னையர் தின விடுமுறை தினமானது, புனித காதலர் தினம், புனித பாட்ரிக் தினம், தந்தையர் தினம் மற்றும் ஹாலோவீன் போன்று கனடாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.[சான்று தேவை] பெரும்பாலும் அனைத்து அம்சங்களிலும் இது, அமெரிக்க ஒன்றிய அன்னையர் தினத்தை ஒத்திருக்கின்றது.

சீனாதொகு

சீனாவில் அன்னையர் தினம் மிகவும் பிரபலமாகி இருக்கின்றது. மேலும் கார்னேஷன்கள் என்பது மிகவும் பிரபலமான பரிசு மற்றும் அதிகம் விற்பனையாகும் மலர் வகையாக உள்ளன.[23] 1997 ஆம் ஆண்டில், இது ஏழைத் தாய்மார்களுக்கு, குறிப்பாக சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமப்புற ஏழைத் தாய்மார்களின் உதவும் நாளாக அமைக்கப்பட்டது.[23] சீனாவின் கம்யூனிஷக் கட்சியின் பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையில் ஒரு கட்டுரையானது, "அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும், சீனாவிலுள்ள மக்கள் எந்தவிதத் தயக்கமின்றி விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். ஏனெனில் இது தேசத்தின் பாரம்பரிய நன்னெறிகளுடன் சீராகச் செல்லுகின்றது -- பெற்றோர்களுக்கு மூத்தோர் மற்றும் மகளுக்குரிய பற்றுடன் மரியாதை செய்கின்றது" என்று விவரித்தது.[23]

சமீப காலத்தில் சீனாவின் கம்யூனிஷ கட்சியின் உறுப்பினர் லி ஹங்கியூ, மேங்க் ஸீயின் தாயான மேங்க் மூ அவர்களின் நினைவாக அன்னையர் தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு பரிந்துரைக்கின்றார். அவர் சீன அன்னையர் திருவிழா ஊக்குவிப்பு அமைப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பை 100 கன்ஃப்யூசியல் அறிஞர்கள் மற்றும் நன்னெறிகளின் விரிவுரையாளர்களின் ஆதரவைக் கொண்டு உருவாக்கினார்.[24][25] மேற்கத்திய கார்னேஷன் மலர்களைக் கொண்ட பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக, பண்டைய காலத்தில் குழந்தைகள் வீட்டில் விட்டுச்சென்ற பொழுது சீன தாய்மார்களால் வளர்க்கப்பட்ட லில்லி மலர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் கூறினர்.[25] இது குறைந்த எண்ணிக்கையிலான நகரங்கள் தவிர மீதி இடங்களில் இன்னமும் அதிகாரப்பூர்வமற்ற திருவிழாவாக உள்ளது.

கிரீஸ்தொகு

கிரீஸில் அன்னையர் தினமானது, ஆலயத்தில் இயேசு பற்றிய விளக்கக்காட்சியைக் கொண்ட கிழக்கத்திய பாரம்பரியம் திருவிழா தினத்தினை ஒத்திருக்கின்றது. இந்த திருவிழா தினத்தில் தியோடோகோஸ் (கடவுளின் தாய்) முக்கியமாகத் தோன்றியதிலிருந்து ஜெருசலேமிலுள்ள ஆலயத்திற்கு இயேசு கிறிஸ்துவை கொண்டுவருவது வரையில், இந்த திருவிழா தினமானது அன்னையர்கள் தொடர்புடையது.

இந்தியாதொகு

தேசிய அளவில் அன்னையர் தினம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.[26]

பத்தரே பிரபு திருவிழாவானது அதே நாளில் பம்பாய் மற்றும் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் (உறுதியாக கொங்கன் மற்றும் மேற்கத்திய மலைத்தொடர்களின் கீழே அமைந்துள்ள மாவட்டங்கள்) மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இது பிறந்து ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்து இறந்த குழந்தைகளின் தாய்மார்கள் பற்றிய புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது மிகவும் தகவல் தொடர்பற்ற தூரமான இடத்தில் தோன்றியது. இருந்த போதிலும் இதுவும் "அன்னையர் தினம்" என்றழைக்கப்படுகின்றது. இதற்கும் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து நகலாக வந்து நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவீன கொண்டாட்டத்திற்கு தொடர்பின்றி இருக்கின்றது. பத்தரே பிரபு பிரிவினர் இந்த விடுமுறையை எப்போதும் கொண்டாடுகின்றனர்.[26]

ஈரான்தொகு

20 ஜூமாடா அல்தானியில், முகமதுவின் மகள் பாத்திமாவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகின்றது.[27] இது பின்னர் ஈரானியப் புரட்சி தினமாக மாறியது. இதற்கான காரணம், பெண்ணிய நடவடிக்கைகளை குறைத்து குடும்பத்தின் பாரம்பரிய மாதிரிகளுக்கான முன்மாதிரியை வழங்க முயற்சிப்பதாகக் கொள்கைப்படுத்தப்பட்டுள்ளது.[28][29] இது முன்னதாக ஈரானிய நாட்காட்டியில் ஷா சகாப்தத்தில் 25 அசார் ஆக இருந்தது[சான்று தேவை]

ஜப்பான்தொகு

ஜப்பானில் அன்னையர் தினம் தொடக்கத்தில் ஷோவா காலம் நடைபெற்ற போது பேரரசி கோஜூன்வின் (பேரரசர் அக்கிஹிட்டோவின் தாயார்) பிறந்த தினமாக அனுசரிக்கப்பட்டது. தற்போது இது வணிகப்படுத்தப்பட்ட விடுமுறை தினமாக உள்ளது. மக்கள் வழக்கமாக கார்னேஷன் மற்றும் ரோஜா போன்ற மலர்களை பரிசாக அளிக்கின்றனர்.

மெக்சிகோதொகு

அல்வரோ அப்ரேகன் அரசாங்கம் 1922 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்து, அதே ஆண்டு எக்ஸெல்சியர் செய்தித்தாளைக் கொண்டு அதை பெரிதும் முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை உருவாக்கியது.[30] பழமை விரும்புகிற அரசாங்கமானது, குடும்பங்களில் அன்னைகளின் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்தை வலியுறுத்த இந்த விடுமுறையைப் பயன்படுத்த முயற்சித்தது. முன்னிலைப்படுத்தும் பெண்ணின் இந்த இயல்பற்ற உருவகம் இனப்பெருக்கத்தை விடவும் மிகுந்த மதிப்பு மிக்கதாக இல்லை என்று சமதர்மவாதிகளால் விமர்சிக்கப்பட்டது.[30]

1930களின் இடைக்காலத்தில், லாசரோ கார்டேனஸ் அரசாங்கம் விடுமுறை தினத்தை "நாட்டுப்பற்றுத் திருவிழா"வாக வழங்கியது. கார்டேனஸ் அரசாங்கம் விடுமுறை தினத்தை வாகனமாகப் பயன்படுத்த முயற்சித்த பல்வேறு விளைவுகள்: குடும்பங்கள் தேசிய வளர்ச்சியில் பங்குபெறுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுதல், மெக்சிகர்கள் தங்களது தாய்களின் மீது கொண்டிருந்த பற்றுறுதியிலிருந்து நன்மையைப் பெறுதல், மெக்சிகன் பெண்களின் மூலமாக புதிய படிப்பினைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அவர்களின் மீது தேவாலயம் மற்றும் கத்தோலிக்க உரிமை கொண்டிருந்த தாக்கத்தைக் குறைத்தல்.[31] அரசாங்கம் பள்ளிகளுக்கு விடுமுறையை வழங்கியது.[31] இருப்பினும், திரையரங்க நாடகங்கள் அரசாங்கத்திடமிருந்து வந்த கண்டிப்பான வழிமுறைகளை தவிர்த்துவிட்டு, அவை மதம்சார்ந்த ஐகான்கள் மற்றும் தீம்களைக் கொண்டு நிரப்பின. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாறாக "தேசிய கொண்டாட்டங்கள்" "சமய விழாக்களாக" மாறின.[31].

அதிபர் மானுவேல் அவிலா காமக்கோ அவர்களின் மனைவி சோலேதத் ஓரோஸ்கோ கார்சியா, 1940களின் போது இந்த விடுமுறை தினத்தை பரப்பி, அதை முக்கியமான தேசம் வழங்கிய கொண்டாட்டமாக உருவாக்கினார்.[32] 1942 ஆம் ஆண்டில் கொண்டாட்டமானது வாரம் முழுவதும், அனைத்துப் பெண்களும் தங்களது அடகு வைக்கப்பட்ட தையல் எந்திரங்களை எந்தவித பணமும் செலுத்தாமல் மாண்டே டே பியாதத்திடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் கொண்டாடப்பட்டது.[32]

ஓரோஸ்கோவின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து, 1941 ஆம் ஆண்டில் விடுமுறை தின விழிப்புணர்வை ஏற்படுத்த கத்தோலிக்க தேசிய சைனர்கிஸ்ட் யூனியன் (UNS) தொடங்கப்பட்டது.[33] மெக்சிகன் புரட்சிக் கட்சியின் (தற்போது PRI) உறுப்பினர்கள், சொந்தமாக வைத்துள்ள கடைகளுக்கு அன்னையர் தினத்தில் செல்லும் ஒடுக்கப்பட்ட வர்க்கப் பெண்கள், அவர்களில் கடையிலிருந்து இலவசமாக எடுத்துச் சென்று அதை அவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கலாம். இது பொருள் நிலைக் கொள்கை மற்றும் அடித்தட்டு வர்க்கத்தின் இயலாமை இரண்டையும் வலியுறுத்துவதாகவும், நாட்டின் பரவியுள்ள சமுதாயப் பிரச்சினையை மீண்டும் வலுவூட்டும் படியாக உள்ளதாகவும் சைனர்கிஸ்ட்கள் கவலையடைந்தனர்.[34] தற்போது இந்த மாதிரியான விடுமுறை தினத்தை மிகவும் பழமையானதாக நாம் பார்க்கும் அதே வேளையில், 1940களில் UNS அமைப்பானது அந்த விடுமுறை தினத்தை அந்த நேரத்தில் நிகழ்ந்திருக்கின்ற நவீனமாக்கலின் மிகப்பெரிய தொடக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்த்தனர்.[35] இந்த பொருளாதார நவீனமயமாக்கல் அமெரிக்க ஒன்றிய மாதிரிகளை பாதிப்பாகக் கொண்டு இது தேசத்தால் வழங்கப்பட்டது. மெக்சிகன் சமுதாயத்தில் முதலாக்கம் மற்றும் பொருள் நிலைக் கொள்கையை விதிக்கும் முயற்சி என்பதற்கான மேலும் ஒரு ஆதாரமாகக் காணும் போது மட்டுமே இந்த விடுமுறை தினமானது அமெரிக்க ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதற்கான காரணம் விளங்குகின்றது.[35]

மேலும், UNS மற்றும் லியோன் நகரின் கிளர்க் ஆகியோர் விடுமுறை தினத்தை சமயச் சார்பின்மையாக மாற்றும் விளைவு மற்றும் வீட்டில் பாரம்பரியச் செயல்பாடுகளிலிருந்து ஆண்களின் அடக்குமுறைகளில் நீண்டகாலமாக இருக்கும் பெண்களை விடுவித்து, சமூகத்தில் பெண்களின் மிகுதியான செயல்பாட்டை ஊக்குவிக்கும் விளைவுகளைக் கண்டனர்.[35] அவர்கள் விடுமுறை தினமானது கன்னி மேரிக்குச் செய்யும் சமயச் சடங்குகளை சமயச் சார்பின்மையாக மாற்றும் முயற்சியை பல விடுமுறை தினங்களில் கிறிஸ்துவத்தை மாற்றும் மிகப்பெரிய முயற்சிகள் வாயிலாகக் கண்டனர். அவர்கள் இதை மறுக்க பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தின் மூலம் முயற்சித்தனர். சமயம் சார்ந்த பெண்களை தேசம் வழங்கிய நிகழ்ச்சிளுக்கு உதவிபுரிய கேட்டு அவற்றை "மறுவடிமைக்க" முயற்சித்தனர்.[36] 1942 ஆம் ஆண்டில், சோலேதத்தின் விடுமுறை தினத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நேரத்தில், கிளர்க் லியோன் நகரில் கன்னிமேரியின் 210 ஆவது கொண்டாட்டத்தை பெரிய அணிவகுப்புடன் ஏற்பாடு செய்தது.[36]

1940 களில் மெக்சிகன் அரசாங்கம் அன்னையர் தின தாக்கத்தின் விளைவுகள் உட்பட அதன் புரட்சியை விட்டுவிட்டது என்ற ஒருமித்த கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே நிலவியது.[33] இப்பொழுது மெக்சிகோவில் விடுமுறை தினமானது அன்னையர் மற்றும் கன்னி மேரி தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தற்போது "தியா டே லாஸ் மாட்ரேஸ்" என்பது மெக்சிகோவில் ஒவ்வொரு ஆண்டும் மே 10 அன்று அதிகாரப்பூர்வமற்ற விடுமுறை தினமாக உள்ளது.[37]

நேபாளம்தொகு

"மாதா தீர்த்த ஆயுன்ஷி" என்பது "தாய் புனிதயாத்திரை அரைத்திங்கள்" என மொழிமாற்றப்பட்டது. இது பைஷாக் மாதத்தின் இருண்ட அரைத்திங்களில் (ஏப்ரல்) வருகின்றது. இந்தத் திருவிழாவானது அமாவாசை நேரத்தில் வரும். இது, "மாதா தீர்த்த ஆயுன்ஷி" என அழைக்கப்படுகிறது, ஏனெனில்: “மாதா” என்பதன் பொருள் அன்னை; “தீர்த்தா” என்பதன் பொருள் புனிதயாத்திரை. இந்தத் திருவிழாவானது நினைவு தினமாக மற்றும் வாழும் அன்னையர்களை வணங்கியும் பரிசில் வழங்கியும் மரியாதை செய்யும் பொருட்டு அல்லது பேறு அடைந்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் அன்னையர்களை நினைவு கூரும் பொருட்டு கடைபிடிக்கப்படுகின்றது. காத்மண்டு பள்ளத்தாக்கினை நோக்கி கிழக்குப் பக்கமாக மாதா தீர்த்தக் கிராமத்தின் மேம்பாட்டுக் கமிட்டியின் புற எல்லையில் அமைந்துள்ள மாதா தீர்த்த யாத்திரைக்குச் செல்வது நேபாளத்தில் பொதுவாக உள்ள மற்றொரு பாரம்பரியம் ஆகும்.

இந்த புனித யாத்திரை சம்பந்தமான ஒரு புராணக்கதை உள்ளது. பழங்காலத்தில் கடவுள் கிருஷ்ணரின் தாய் தேவகி சுற்றிப்பார்க்க வீட்டைவிற்றுச் சென்றுவிட்டார். அவர் நிறைய இடங்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப வெகுநேரம் ஆனது. தனது தாய் அங்கு இல்லாததால் கிருஷ்ணர் மிகுந்த வருத்தமடைந்தார். எனவே அவர் வெளியே சென்று பல இடங்களில் அவரது தாயைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, அவர் "மாதா தீர்த்த குண்டா"வை அடைந்தபொழுது, அங்குள்ள குளத்தின் நீர்வெளியேறும் பகுதியில் அவரது தாய் குளித்துக் கொண்டிருப்பதைக் பார்த்தார். கிருஷ்ணர் தனது தாயைக் கண்டவுடன் மிகுந்த சந்தோஷமடைந்து, அவர் இல்லாததால் தனக்கு ஏற்பட்ட சோகங்களைப் பற்றி விளக்கினார். தாய் தேவகி கிருஷ்ணரிடம், "ஓ! மகனே கிருஷ்ணா கவனி, இனி இது சமயப்பற்றுள்ளவர்கள் ஏற்பாடு செய்து தங்களது இறந்த அன்னையர்களை சந்திக்கும் இடமாக இருக்கும்” என்று கூறினார். எனவே, அதிலிருந்து இந்த இடம் இறந்த அன்னையின் மீது பற்றுள்ளவர்கள் அவர்களைக் காண புனித யாத்திரை செய்யும் இடமாக இது குறிக்கப்பட்டதைப் புராணங்கள் நம்புகின்றன. பற்றாளர் அவரது தாயின் உருவத்தை குளத்தின் உள்ளே தெரிவதைக் கண்டு தானும் அங்கே வீழ்ந்து இறப்பதும் நிகழ்ந்துள்ளதாக புராணம் நம்புகின்றது. இன்னமும் அங்கு சிறிய குளம் உள்ளது. அதே போல் தற்போதும் அங்கு நடைபெறக் கூடாது என்பதற்காக குளத்தைச் சுற்றிலும் இரும்புக் கம்பியினால் ஆன வேலி இடப்பட்டுள்ளது. வழிபாட்டிற்குப் பின்னர், யாத்திரையில் அந்நாள் முழுவதும் திருவிழா கோலத்தில் பாடல் மற்றும் ஆடலுடன் கொண்டாடப்படுகின்றது. இந்தப் பழங்கதைகளைப் படித்த பெரியவர்கள் வழியில் வந்துள்ளது போன்று, இது நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

தாய்லாந்துதொகு

தாய்லாந்தில் அன்னையர் தினமானது தாய்லாந்தின் அரசியான ஸ்ரீகிட் பிறந்த நாளில் (12 ஆகஸ்ட்) கொண்டாடப்படுகின்றது.[38] இது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. தந்தையர் தினம் அரசனின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.[39]

ரோமானியாதொகு

ரோமானியாவில் இது, அன்னையர் தினம் மற்றும் மகளிர் தினம் என இரண்டு தனித்தனி விடுமுறை தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்துதொகு

பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில், தாய் ஞாயிறு லெண்ட் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் வருகின்றது. அதாவது மிகச்சரியாக பெரிய ஞாயிறுக்கு மூன்று வாரங்கள் முன்பு வருகின்றது (2009 இல் மார்ச் 22). இது வருடம் ஒருமுறை மாதா தேவாலயம் சென்றுவருதல் என்ற 16 ஆம் நூற்றாண்டு கிறிஸ்துவ நடைமுறையிலிருந்து தோன்றியதாக நம்ப்படுகின்றது. பெரும்பாலான அன்னையர் இந்த நாளில் அவர்களின் குழந்தைகளை ஒருங்கிணைக்கின்றனர் என்பது இதன் பொருளாகும். பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள், பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் அடிமைப்பணி செய்யும் இளம்பெண்கள் அவர்களின் எஜமானர்களால் அந்த வாரத்தில் அவர்களின் குடும்பங்களைக் காணும் பொருட்டு விடுவிக்கப்படுகின்றனர்.[40] சமயச்சார்பின்மையின் விளைவால், அது இப்பொழுது வேறொருவரின் அன்னைக்கு பாராட்டித் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அது இன்னமும் பல தேவாலயங்களால் வரலாற்று ரீதியில், இயேசு கிறிஸ்துவின் அன்னையான மேரியை வழிபடுதல், அதே போன்று பாரம்பரியக் கோட்பாடான 'மாதா தேவாலயம்' ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

தாய் ஞாயிறானது முன்னதாக 1 மார்ச் அன்றும் (பெரிய ஞாயிறு 22 மார்ச் அன்று வரும் வருடங்களில்), இறுதியாக 4 ஏப்ரல் அன்றும் (பெரிய ஞாயிறு 25 ஏப்ரல் அன்று வரும்பொழுது) வரலாம்.

அமெரிக்காதொகு

அமெரிக்கா மற்றும் கனடாவில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

வியட்நாம்தொகு

வியட்னாமில் அன்னையர் தினம் லே வூ-லான் என்றழைக்கப்படுகின்றது. அது lலூனார் நாள்காட்டியில் ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் கொண்டாடப்படுகின்றது. வாழும் அன்னையர்களைக் கொண்ட மக்கள் அவர்களுக்கு நன்றி செலுத்துவர், இறந்தவிட்ட அன்னையர்களைக் கொண்ட மக்கள் அவர்களின் ஆன்மாவிற்காகப் பிராத்திப்பார்கள்.[சான்று தேவை]

வணிகமயமாக்கல்தொகு

முதல் அதிகாரப்பூர்வ அன்னையர் தினத்திற்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து, அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தின் வணிகமயமாக்கலானது மிகவும் மலிவாகிவிட்டது. அன்னா ஜார்விஸ் அவராகவே வணிகமாக மாறிய அந்த விடுமுறை தினத்தின் முக்கிய எதிர்ப்பாளராக மாறினார். அவரின் பரம்பரை உடைமை மற்றும் மீதமுள்ள வாழ்க்கை அனைத்தையும் கொண்டாட்டத்தின் முறைகேடாகத் தான் கண்டதை எதிர்த்துப் போராட செலவளித்தார்.[1]

பின்னர் அன்னையர் தினப் பயன்பாட்டின் வணிக மற்றும் பிற வெளிப்பாடுகள் அன்னாவை சினமூட்டியது. அவர் தனது விமர்சனங்களை அவரது காலம் முழுமையும் வெளிப்படையாகத் தெரியும்படி வெளியிட்டார்.[1][2] அவர் தனிப்பட்ட கடிதங்களை எழுத மிகவும் சோம்பேறித் தனமாக்குகின்ற வாழ்த்து அட்டைகளை வாங்கும் நடைமுறையை விமர்சித்தார். 1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தின் வணிகமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியைச் சீர்குலைத்ததற்காக கைது செய்யப்பட்டார். "இதுமாதிரி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த நாளைத் தொடங்கியிருக்க மாட்டேன், ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது ..." என்று அவர் இறுதியாகத் தெரிவித்தார்.[2]

வணிக ரீதியில் மிகவும் வெற்றிபெற்ற அமெரிக்க ஒன்றிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர் தினம் தொடர்ந்து வருகின்றது. தேசிய உணவுவிடுதி கூட்டமைப்பு கணிப்பின் படி, அன்னையர் தினமானது இப்பொழுது அமெரிக்காவில் உணவுவிடுதியில் இரவு விருந்துக்கு ஆண்டின் மிகவும் பிரபலமான நாளாக இருக்கின்றது.[41]

எடுத்துக்காட்டாக, IBISWorld என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின் படி, அமெரிக்கர்கள் ஏறக்குறைய மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், ஸ்பா சிகிச்சைகள் போன்ற விரும்பிய பரிசுப் பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும் மற்றும் பிற வாழ்த்து அட்டைகளுக்கு 68 மில்லியன் டாலர்களும் செலவு செய்வர்.[42]

அன்னையர் தினமானது 2008 ஆம் ஆண்டில் அன்னையர்களுக்கான மோதிரங்கள் போன்ற பரிசுப் பொருட்களுடன் அமெரிக்க ஒன்றிய நகைத் தொழில்துறையின் ஆண்டு வருமானத்தின் 7.8% ஐ உருவாக்கியது.[43]

விடுமுறை தினமானது மலர் வழங்கும் துறை மற்றும் பிற வணிகத் தொழில்துறை ஆகியவற்றின் ஆதரவும் தொடர்ச்சியான முன்னெடுப்பும் இல்லை எனில் வாடிவிடும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வரும் குழந்தைகள் தினம் மற்றும் மதுஒழிப்பு தினம் போன்ற பிற புரோட்டஸ்டண்ட் விடுமுறை தினங்கள் அதே அளவிலான பிரபலத்தைக் கொண்டிருக்கவில்லை.[44]

குறிப்புகள்தொகு

  1. Since the Islamic Calendar uses the lunar year, which is shorter than the solar year, the day migrates through the seasons. Each year it falls a different day in the Gregorian Calendar, so it is listed separately.

குறிப்புதவிகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Louisa Taylor, Canwest News Service (2008-05-11). "Mother's Day creator likely 'spinning in her grave'". Vancouver Sun. Archived from the original on 2008-06-27. https://web.archive.org/web/20080627112442/http://www.canada.com/vancouversun/news/story.html?id=c942370c-cdbb-43b2-af59-71ad4b546854. பார்த்த நாள்: 2008-07-07. 
  2. 2.0 2.1 2.2 AP (2008-05-11). "Mother's Day reaches 100th anniversary, The woman who lobbied for this day would berate you for buying a card". MSNBC. Archived from the original on 2009-12-12. https://web.archive.org/web/20091212060518/http://www.msnbc.msn.com/id/24556903/. பார்த்த நாள்: 2008-07-07. 
  3. லரோஸ்ஸா, 1997, பக்கம் 72(அடிக்குறிப்பு 51)
  4. ஹவுஸ் வோட் #274 (மே 7, 2008) எச். ரெஸ். 1113: அமரிக்காவில் அன்னையரின் பங்கைக் கௌரவிக்கும் கொண்டாட்டம் மற்றும் அன்னையர் தினத்தின் குறிக்கோள்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை ஆதரித்தல் (பத்தியில் ஓட்டளிக்கவும்)
  5. ஹவுஸ் வோட் #275 (மே 7, 2008) மறுபரிசீலனைக்கான அட்டவணை இயக்கம்: எச். ரெஸ் 1113 அமரிக்காவில் அன்னையரின் பங்கைக் கௌரவிக்கும் கொண்டாட்டம் மற்றும் அன்னையர் தினத்தின் குறிக்கோள்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை ஆதரித்தல்
  6. அமெரிக்க அதிபரகத் திட்டத்திலிருந்து அதிபரக அறிவிப்புகள்:
  7. John MacIntyre (2005), The amazing mom book: real facts, tender tales, and thoughts from the heart about the most important person on Earth, Sourcebooks, p. 7, ISBN 9781402203558, Lebanon in the first day of Spring.
  8. "Días Nacionales en Chile". 8 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
  9. Xinhua from China Daily (16 May 2006). "It's Mother's Day". SCUEC online. 5 மார்ச் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 நவம்பர் 2009 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Principales efemérides. Mes Mayo". Unión de Periodistas de Cuba. 5 மே 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 June 2008 அன்று பார்க்கப்பட்டது.
  11. 11.0 11.1 Mixed emotions on Women's Day in Eastern Europe, euractiv.com, 9 March 2010, 11 மார்ச் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது, 26 மே 2013 அன்று பார்க்கப்பட்டது
  12. "Calendario Cívico Escolar". Dirección Regional de Educación de Lima Metropolitana. 9 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 June 2008 அன்று பார்க்கப்பட்டது.
  13. Ministerio de Educación y Cultura de Paraguay, Día de la Madre (Spanish), 2012-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2013-05-26 அன்று பார்க்கப்பட்டதுCS1 maint: Unrecognized language (link)
  14. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bolivia என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  15. Sources:
  16. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; nicaragua என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  17. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; argentina என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  18. editorial (8 December 2001), "Bendita Madre", Crítica (Spanish)CS1 maint: Unrecognized language (link)
  19. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; indonesia என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  20. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; israel என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  21. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; debano என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  22. Cordelia Candelaria, Peter J. García (2004). Encyclopedia of Latino popular culture (illustrated ). Greenwood Publishing Group. பக். 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:031333210X, 9780313332104. http://books.google.es/books?id=STjcB_f7CVcC&pg=PA375&dq=mother%27s+day+virgin+mary. 
  23. people.com.cn, sina.com.cn (2008-06-17). "Researchers and Experts Propose a Chinese Mother's Day". All-China Women's Federation. 2009-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  24. 25.0 25.1 "Do we need our own Mother's Day?". China Daily. 2007-05-16. http://www.chinadaily.com.cn/ezine/2007-05/16/content_873529.htm. 
  25. 26.0 26.1 W.E.G. Solomon (1991). Charm Of Indian Art. Asian Educational Services. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120602250, 9788120602250. http://books.google.com/books?id=y57Z63UNX18C&pg=PA130&dq=%22mother%27s+day%22+origin&lr=&as_brr=3&client=opera&hl=es#v=onepage&q=%22mother's%20day%22%20origin&f=false. 
  26. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; iranpresident என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  27. Shahin Gerami (1996). Women in Fundamentalism. New York: Garland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8153-0663-6. http://www.dhushara.com/book/zulu/islamp/wiff/wif.htm. "To this end, to counteract the Mother's Day of the previous regime, the state first moved it to December 16 [that was the date for that year?], to coincide with Fatemeh's birthday. Then it was expanded to a week with festivities, celebrations, speeches, gifts, prizes, and honors for achieving women."  ஆன்லைன் பதிப்பு
  28. Ali Akbar Mahdi (2003). "Iranian Women: Between Islamization and Globalization" (DOC). Iran Encountering Globalization: Problems and Prospects. Ali Mohammadi. London and New York: Routledge/Curzon. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415308275. Archived from the original on 2006-09-01. https://web.archive.org/web/20060901182436/http://go.owu.edu/~aamahdi/globalization-final.doc. பார்த்த நாள்: 2009-11-12. "Other role models for women often cited by the officials and ideologues of the IRI are Khadijah, the prophet Mohammad's wife, and Zaynab, daughter of the first Shi'i Imam Ali. In fact, the IRI replaced the universal Mother's Day with Fatima Zahar's birthday." 
  29. 30.0 30.1 புதுவரவு, பக்கம் 133
  30. 31.0 31.1 31.2 புதுவரவு, பக்கம் 44
  31. 32.0 32.1 புதுவரவு, பக்கம் 133-134
  32. 33.0 33.1 புதுவரவு, பக்கம் 134 பிழை காட்டு: Invalid <ref> tag; name "newcomer 134" defined multiple times with different content
  33. புதுவரவு, 134-135
  34. 35.0 35.1 35.2 புதுவரவு, 135-136
  35. 36.0 36.1 புதுவரவு, 136-139
  36. மரபுவழித் திட்டத்திலிருந்து அன்னையர் தின வரலாறு, மரபுவழி மையம் (கனடா) வலைத்தளம்
  37. Thai News Agency (August 10, 2009). "Police chief returns earlier for Mother's Day". MCOT news. Archived from the original on ஜூலை 23, 2011. https://web.archive.org/web/20110723203602/http://enews.mcot.net/view.php?id=11235. "(...) an audience with Her Majesty Queen Sirikit on Tuesday on the occasion of her birthday which is also observed as National Mother's Day." 
  38. Paul M. Handley (2006). The King Never Smiles: a biography of Thailand's Bhumibol Adulyadej. Yale University Press. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0300106823, 9780300106824.  (ஆன்லைன் பதிப்பு)
  39. "Mothering Sunday". Religion & Ethics (bbc.co.uk). http://www.bbc.co.uk/religion/religions/christianity/holydays/motheringsunday_1.shtml. பார்த்த நாள்: 2006-05-28. 
  40. பத்திரிக்கை வெளியீடுகள்:
  41. "ரெசெஸ்சன் ஆர் நாட்: மாம் கம் பர்ஸ்ட் (phillyBurbs.com) | உள்ளூர் வணிகம்". 2009-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  42. Barnett Helzberg (2003). John Wiley and Sons. ed. What I Learned Before I Sold to Warren Buffet. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471445398. http://books.google.com/books?id=Vq-UzfJhqYAC&pg=PA80&dq=%22mother%27s+ring%22&lr=&client=opera&hl=es. 
  43. லேயிக், பக்கம் 256

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னையர்_நாள்&oldid=3615475" இருந்து மீள்விக்கப்பட்டது