மாரிசா மேயர்
மாரிசா அன் மேயர் (Marissa Ann Mayer,பிறப்பு: மே 30, 1975) யாகூ!வின் தலைவராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் பணியாற்றும் அமெரிக்க வணிக செயல்பணியாளர் ஆவார். முன்னதாக,கூகுள் நிறுவனத்தில் நெடுங்கால செயல்பணியாளராகவும் முகனையான தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.[4][5][6] உலகளவில் முதல் 500 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள நிறுவனமொன்றில் மிகக் குறைந்த அகவையில் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றுபவர் என்ற பெருமை உடையவர்.[7]
மாரிசா மேயர் | |
---|---|
பிறப்பு | மாரிசா அன் மேயர் மே 30, 1975 வோசோ, விஸ்கொன்சின், ஐக்கிய அமெரிக்கா |
இருப்பிடம் | சான் பிரான்சிஸ்கோ, பாலோ ஆல்ட்டோ |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
பணி | தலைவர் & முதன்மை செயல் அதிகாரி, யாகூ![1] கணினி நிரலாக்கப் பயிற்சியாளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
பணியகம் | யாகூ! |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | கூப்பர்-ஹெவிட், தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகம் நியூயார்க் சிடி பாலே சான் பிரான்சிஸ்கோ பாலே சான் பிரான்சிஸ்கோ நவீனக் கலைகளுக்கான அருங்காட்சியகம் வால் மார்ட்[2] |
வாழ்க்கைத் துணை | சக்கரி போஃக் (2009–இன்றளவில்)[3] |
இளமையும் கல்வியும்
தொகுமேயர் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்திலுள்ள வோசோ என்ற நகரில் பின்லாந்திய வம்சாவளியினராகிய[8] ஓவிய ஆசிரியர் மார்கரெட் மேயருக்கும் பொறியாளர் மைக்கேல் மேயருக்கும் மகளாகப் பிறந்தவர்.[9][10] வோசோ மேற்கு உயர்நிலைப் பள்ளியில் 1993இல் படிப்பை முடித்தார்.[11] விஸ்கொன்சினிலிருந்து பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவராக மேற்கு வெர்ஜினியாவில் நடத்தப்பட்ட தேசிய இளைஞர் அறிவியல் முகாமில் பங்கேற்றார்.[12] தொடர்ந்து இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் குறியீட்டு அமைப்புகளில் இளங்கலை படமும் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவ்விரு கல்வித்திட்டங்களிலுமே மேயர் சிறப்புப் பாடமாக செயற்கை அறிவுத்திறன் எடுத்திருந்தார். 2009ஆம் ஆண்டில் தேடுதல் நெறிமுறைகளில் அவராற்றிய பணிக்காக இல்லினாய் தொழில்நுட்பக் கழகம் மேயருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Womack, Brian (October 12, 2010). "Google Executive Marissa Mayer Takes New Role in Location, Local Services". bloomberg.com. http://www.bloomberg.com/news/2010-10-12/google-s-marissa-mayer-takes-new-role-overseeing-location-local-services.html. பார்த்த நாள்: April 21, 2012.
- ↑ "Walmart Board of Directors Nominates New Candidate Marissa Mayer to stand for election at Walmart’s 2012 Annual Shareholders’ Meeting". Wal-Mart Stores, Inc.. April 16, 2012. http://investors.walmartstores.com/phoenix.zhtml?ID=1683310&c=112761&highlight=&p=irol-newsArticle. பார்த்த நாள்: April 21, 2012.
- ↑ "Vogue: The Bride Wore Snowflakes". Archived from the original on 2014-04-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
- ↑ Mayer, M. (2008). "Innovation, design, and simplicity at google". ACM SIGCSE Bulletin 40: 199. doi:10.1145/1352322.1352205.
- ↑ Holson, Laura (March 1, 2009). "Putting a Bolder Face on Google". The New York Times: p. BU-1. http://www.nytimes.com/2009/03/01/business/01marissa.html?th&emc=th.
- ↑ Stone, Brad (July 16, 2012). "Marissa Mayer Is Yahoo's New CEO". Bloomberg Businessweek. http://www.businessweek.com/articles/2012-07-16/marissa-mayer-is-the-new-yahoo-ceo.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
- ↑ "Google-johtaja vieraili Suomessa sukujuurillaan". Kauppalehti. November 9, 2011. Archived from the original on செப்டம்பர் 29, 2012. பார்க்கப்பட்ட நாள் July 16, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) English title: "Google vice president visits the land of her ancestors". - ↑ http://www.businessweek.com/stories/2006-06-18/marissa-mayer-the-talent-scout
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
- ↑ "Did You Know?" WSD Dialogue, Spring 2010, p. 11.
- ↑ Nalley, Steven (June 28, 2012). "Wang attends National Youth Science Camp". Starkville Daily News இம் மூலத்தில் இருந்து ஜூலை 20, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120720050728/http://www.starkvilledailynews.com/node/10393. பார்த்த நாள்: July 16, 2012.
- ↑ IIT (2009-03-25). "50. Marissa Mayer". Illinois Institute of Technology, IIT Media Room இம் மூலத்தில் இருந்து 2013-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929012115/http://www.iit.edu/departments/pr/mediaroom/article_viewer_db.php?articleID=360. பார்த்த நாள்: 2009-05-16.