ஒருபால் திருமணம்
ஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கிடையே நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. முதன்முதலாக 2001 இல் நெதர்லாந்தில் ஒருபால் திருமணத்தை ஒப்புக்கொள்ளும் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜூலை, 2016 நிலைப்படி, அர்கெந்தீனா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க்,[nb 1] பிரான்சு, ஐசுலாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மெக்சிக்கோ,[nb 2] நெதர்லாந்து,[nb 3] நியூசிலாந்து,[nb 4] நோர்வே, போர்த்துகல், தென்னாப்பிரிக்கா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம்[nb 5] அமெரிக்க ஐக்கிய நாடு,[nb 6] உருகுவை ஆகிய நாடுகளில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு நிலைப்படி ஆப்பிரிக்க நாடுகளில் ஒருபால் திருமணத்தைச் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ள ஒரே நாடு தென் ஆப்பிரிக்கா மட்டுமேயாகும். ஆசியாவில் எந்த நாட்டிலும் இத்திருமணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இசுரேல் மட்டும் வெளிநாடுகளில் நடைற்ற ஒருபால் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறது.[1] பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் இத்திருமணத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதித்துள்ளன.
ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும்போதும் ஒரு பால் ஈடுபாடுள்ளோர் விஷயத்தில் ஆதரவா, எதிர்ப்பா என்னும் கேள்வி எழுந்துவிடுகிறது. இதற்குப் பதில் அளிப்பதே பெரும் பிரச்னையாகப் போய்விடுகிறது. மாறிவரும் இன்றைய சமூகத்தில் மனிதனின் தேவைகளும் சவால்களும்கூட பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பெறுவது, தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வது என்று இதற்குப் பல உள்நோக்கங்கள் இருக்கும்.[2]
"ஒரு பால் ஈர்ப்புடையோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!’"[3]
—அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
குறிப்புகள்
தொகு- ↑ Including Denmark proper and Greenland. Same-sex marriage is currently not lawful in the Faroe Islands.
- ↑ Campeche, [Chihuahua]], Coahuila, Colima, Jalisco, Michoacán, Morelos, [Nayarit]], Quintana Roo, மெக்சிக்கோ நகரம். Same-sex marriages performed in these jurisdictions are recognized throughout Mexico.
- ↑ The Netherlands proper. Same-sex marriages performed there are recognized in Aruba, Curaçao and Sint Maarten
- ↑ New Zealand proper.
- ↑ Legal in England and Wales and இசுக்கொட்லாந்து, notably not recognized in வட அயர்லாந்து. Legal in one of the three Crown dependencies; the Isle of Man. Legal in the overseas territories of the Pitcairn Islands and Ascension Island
- ↑ 50 states, the District of Columbia, Guam, the Northern Mariana Islands, Puerto Rico, the United States Virgin Islands and some tribal jurisdictions. Some tribal jurisdictions do not recognize same-sex marriage. In the United States, Congress (not the federal courts) has legal authority over Indian country. Thus, unless Congress passes a law regarding same-sex marriage for Indian tribes, federally recognized American Indian tribes have the legal right to form their own marriage laws.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gross, Aeyal (30 June 2015). "Why Gay Marriage Isn't Coming to Israel Any Time Soon". Haaretz Online. http://www.haaretz.com/opinion/.premium-1.663585. பார்த்த நாள்: 29 December 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-01.
- ↑ http://www.aazham.in/?p=1240
வெளி இணைப்புகள்
தொகு- ஒரு பால் ஈர்ப்பு உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம்! -கோபி சங்கர் பரணிடப்பட்டது 2013-09-17 at the வந்தவழி இயந்திரம்
- சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377 பரணிடப்பட்டது 2021-08-08 at the வந்தவழி இயந்திரம்