ரோசலின் யாலோ
ரோசலின் சுஸ்மன் யாலோ (Rosalyn Sussman Yalow, சூலை 19, 1921 - மே 30, 2011), ஓர் அமெரிக்க மருத்துவ இயற்பியலாளர் ஆவார். இவர் கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக 1977 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவர். கெர்டி கோரிக்குப் பின்னர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் இவராவார்.[2]
ரோசலின் சுஸ்மன் யாலோ Rosalyn Sussman Yalow | |
---|---|
ரோசலின் யாலோ (1977) | |
பிறப்பு | ரோசலின் யாலோ சூலை 19, 1921 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மே 30, 2011[1] பிரான்க்சு, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 89)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | மருத்துவ இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஹன்டர் கல்லூரி இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்) |
அறியப்படுவது | கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்பு (RIA) |
விருதுகள் | 1977 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு 1988 அறிவியலுக்கான தேசிய விருது |
துணைவர் | ஆரன் யாலோ (தி. 1943; 2 பிள்ளைகள்) |
பிள்ளைகள் | பெஞ்சமின், எலானா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுரோசலின் 1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் நாள் நியூயார்க் நகரில் இலினொய் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ரோசலின் பிரான்க்ஸ் அனுபவ நிர்வாக மருத்துவமனையில் சேர்ந்து , மவுண்ட் சினாய் மருத்துவப் பிரிவின் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஆப்ரிக்காவின் தலைமை பொறுப்பேற்றார். பெர்சன் என்பவருடன் இணைந்து அங்கு தொடர்ந்து உயிர் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
கண்டுபிடிப்புகள்
தொகுதைராய்டு சிகிச்சைக்கு அயோடின் பயன்படுத்தும் முன்னோடி என்று அவரை அழைக்கின்றனர். மனித உடலின் சீரம் புரதத்தின் விநியோகத்தை ஆராய்ந்து அவர் இன்சுலின் சார்ந்த உயிர் எதிர்பொருளைக் கண்டுபிடித்தார். மேலும் காஸ்ட்ரின், பாரா-தைராய்டு சுரப்பி, மனித வளர்ச்சி ஹார்மோன் என்று அழைக்கப்படும் கார்ட்டிகோட்ரோபின் ஆகியவற்றையும் ஆராய்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.ரேடியோ இம்யூனோ அஸ்சே என்று அழைக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான யாலோ 1977ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ரோஜர், கில்லிமன், ஆண்ட்ரூ ஆகியோருடன் இணைந்து பெற்றார். முன்னதாக நீரழிவு நோய்க்குக் காரணமான இன்சுலின் பற்றி பெர்சன் என்ற மருத்துவருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஹார்மோன்கள், வைட்டமின்கள், நொதிகள் என்று பல கூறுகளிலும் அவற்றின் அளவு சிறிதாக இருந்தபோதும், வணிக மதிப்பு பெரிய அளவில் இருந்தது. ஆயினும் இந்த ஆய்வுகள் மனித குலத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தங்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற மறுத்துவிட்டார்.
மறைவு
தொகு1992ல் தன் கணவர் ஆரான் யலோவின் மறைவுக்குப்பிறகு தன் ரிவர்டேல் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்ட ரோசலின் 2011ம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் மரணமடைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ எஆசு:10.1038/474580a
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ Obituary in The Telegraph