1536
ஆண்டு 1536 (MDXXXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1536 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1536 MDXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1567 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2289 |
அர்மீனிய நாட்காட்டி | 985 ԹՎ ՋՁԵ |
சீன நாட்காட்டி | 4232-4233 |
எபிரேய நாட்காட்டி | 5295-5296 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1591-1592 1458-1459 4637-4638 |
இரானிய நாட்காட்டி | 914-915 |
இசுலாமிய நாட்காட்டி | 942 – 943 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 5 (天文5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1786 |
யூலியன் நாட்காட்டி | 1536 MDXXXVI |
கொரிய நாட்காட்டி | 3869 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 7 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முதலாம் மனைவி அராகனின் கேத்தரின் இறந்தார்.
- பெப்ரவரி 2 - எசுப்பானியர் பெத்ரோ டெ மெண்டோசா புவெனஸ் ஐரிஸ் நகரக் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 30 - திரிபுக் கொள்கை விசாரணை போர்த்துகலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மே 2 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவி ஆன் பொலின் விபச்சாரம், தேசத்துரோகக் குற்றச்சாடுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.
- மே 17 - ஆன் பொலினுடன் விபசாரம் செய்த குற்றச்சாட்டுக்களுக்காக அவரது சொந்த சகோதரர் ஜோர்ஜ் பொலின் உட்பட ஐந்து பேர் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி ஆன் பொலின் இலண்டன் கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 30 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
- பிரான்சின் முதலாம் பிரான்சிசு மன்னருக்கும், புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசிற்கும் இடையில் போர் மீண்டும் ஆரம்பித்தது. பிரான்சிசு துரினைக் கைப்பற்றினான்.
- இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மடாலயங்களைக் கலைக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கிலாந்தின் பல சமயக் கட்டடங்கள் மூடப்பட்டன.
- சீர்திருத்தத் திருச்சபை டென்மார்க், நோர்வே நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது.
- இலங்கையின் முதலாவது ஆயர் ஜொவோ மொன்டெய்ரோ கொழும்பில் இறந்தார்.[1]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மே 19 - ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி (பி. 1501/1507)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 1