எபிரேய நாட்காட்டி

எபிரேய நாட்காட்டி (Hebrew Calendar) அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும். அண்மைய காலங்களில் சில கிறித்தவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இசுரேலில் யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது.

யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம்(intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும்.

பன்னிரு வழமையான மாதங்கள்:நிசன் (30 நாட்கள்), இயார் (29நாட்கள்), சிவன் (30 நாட்கள்), தம்முஸ் (29 நாட்கள்), அவ் (30 நாட்கள்), எலுல் (29 நாட்கள்), தீஸ்ரே (30 நாட்கள்), செஷ்வன் (29 அல்லது 30 நாட்கள்), கிஸ்லெவ் (29 அல்லது 30 நாட்கள்), தெவேத் (29 நாட்கள்), சேவத் (30 நாட்கள்) மற்றும் அதார் (29 நாட்கள்). நெட்டாண்டுகளில் இம்மாதம் அதார் II என வழங்கப்பட்டு இதற்கு முன்னர் (சேவத் மாதத்தின் பின்னர்) அதார் I (30 நாட்கள்) மாதம் சேர்க்கப்படுகிறது.

ஆண்டு நிசன் மாதத்தில் துவங்குகிறது. நிசன் 15 அன்று வரும் முழுநிலவு அன்று பார்லி அறுவடை பண்டிகை (நமது அறுவடை பண்டிகை பொங்கல் போன்று)ஆண்டு துவக்கத்தை வரவேற்கிறது. இந்த பண்டிகை எப்போதும் இளவேனில் காலத்தில் அமையுமாறு நெட்டாண்டுகளில் இடைச்செருகல் மாதம் சேர்க்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்

தொகு

நாள் மாற்றிகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிரேய_நாட்காட்டி&oldid=3485183" இலிருந்து மீள்விக்கப்பட்டது