1520கள்
பத்தாண்டு
1520கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1520ஆம் ஆண்டு துவங்கி 1529-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1520
- ஜனவரி 18 - டென்மார்க், மற்றும் நோர்வே இரண்டாம் கிறிஸ்டியன் மன்னன் அசுண்டே ஆறு அருகில் இடம்பெற்ற சமரில் சுவீடனைத் தோற்கடித்தான்.
- செப்டம்பர் 22 - முதலாம் சுலைமான் ஓட்டோமான் பேரரசின் மன்னனானான்.
- நவம்பர் 8 - டென்மார்க் படைகள் சுவீடனைத் தாக்கி 100 பேரைக் கொன்றனர்.
- நவம்பர் 28 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
1521
- மார்ச் 6 - பெர்டினென்ட் மகலன் பசிபிக் பெருங்கடலில் குவாம் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 16 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.
- ஏப்ரல் 7 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் செபூ தீவை அடைந்தான்.
- ஏப்ரல் 27 - மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டான்.
- மே - புனித ரோம் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்சிற்கும் பிரான்ஸ் மன்னனுக்கும் இடையில் போர் மூண்டது.
- மே 17 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை மன்னன் எட்வர்ட் ஸ்டஃபோர்ட் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகஸ்ட் 29 - ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
1522
- ஏப்ரல் 27 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
- செப்டம்பர் 6 - பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
தேதி அறியப்படாதவை
தொகு- சென்னையில் போர்த்துக்கீசர் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர்.
1523
- சனவரி 20 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- சூன் 6 - சுவீடனின் மன்னராக குஸ்தாவ் வாசா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சுவீடன் டென்மார்க்கிடம் இருந்து முழுமையான விடுதலை8 பெற்றது.
- ஆகத்து 13 – தாமஸ் மோர், இங்கிலாந்து பேரரசின் கீழவையின் அவைத்தலைவர் பதவியில் இருந்தார்.
- நவம்பர் 19 - ஆறாம் கிளெமென்டு 219வது திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.
தேதி அறியப்படாதவை
தொகு- போர்த்துகீசியர் புனித தோமா கல்லறை மீது பெரிய அளவில் சாந்தோம் தேவாலயத்தைக் கட்டி எழுப்பினார்கள்.
- சென்னை, புனித தோமையார் மலையில் போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் அழகியதொரு புனித தோமையார் மலை கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.
- மார்ட்டின் லூதர் செருமானியத்தில் மொழிபெயர்த்த தோரா வெளியிடப்பட்டது.
1524
- சனவரி 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜியோவான்னி ட வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கு மேற்குக்கரையூடான புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கும் முகமாக மதீராவில் இருந்து அமெரிக்கா நோக்கிப் பயணமானார்.
- ஏப்ரல் 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.[1][2]
- சூலை 8 - ஜியோவான்னி ட வெரசானோ தியப்பை வந்தடைந்தார்.
- டிசம்பர் 8 - நிக்கரகுவாவின் கிரனாடா நகரம் நிறுவப்பட்டது.
- மெக்சிக்கோ நகரத்தின் டேச்னோசிடலியன் என அழைக்கப்படும் மெக்சிகோ நகராட்சி நிறுவப்பட்டது.
- எசுப்பானியாவின் அல்மெரியா எனும் இடத்தில் அமைந்துள்ளது உரோமன் கத்தோலிக்கப் பேராலயமான அல்மெரியா பெருங்கோவிலின் கட்டிடத்தின் அடித்தளமிட்டது.
1525
- பிப்ரவரி 28 – கடைசி அஸ்டெக் பேரரசான குயோடெமொச்வை, எர்னான் கோட்டெஸ்சால் கொல்லப்பட்டார்.
- மார்ச் 20 - மறுமலர்ச்சிக் காலத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள், என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. [3]
- மே 15 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.
- சூன் 13 - மார்ட்டின் லூதர் கத்தரீனா ஃபோன் போரா என்னும் கிறிஸ்துவப் பெண் துறவியை மணந்து கொண்டார். அதர்க்கு லூக்காஸ் கிரனாச் எல்டர் என்ற ஓவியர் ஒருவரே சாட்சிகள் ஆவர்.
- சூலை 29 - சாண்டா மார்த்தா, கொலொம்பியாவிலுள்ள முதல் நகரம் ஆகும். இதை எசுப்பானிய வெற்றியாளர் ரோட்ரிகோ டி பஸ்திதாஸ் என்பவர் மூலம் நிறுவப்பட்டது.
- டிசம்பர் 31 - தாமஸ் மோர், இங்கிலாந்து பேரரசின் லேன்காஸ்டர் மாவட்ட ஆளுநர் பதவியில் இருந்தார்.
தேதி அறியப்படாதவை
தொகு- அரையாப்பு பிளேக்கு என்னும் கொடிய நோயானது தெற்குப் பிரான்சுப் பகுதியில் பரவியது.
- முதல் முதலில் பிரான்சு நாட்டுத் தூதுவர் இஸ்தான்புலுக்கு வருகைத்தந்தார்.
- பானிப்பட்டில் டில்லியின் இப்ராகிம் லோடி மன்னருக்கும், தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாம் பானிப்பட் போர் துவக்கம்.
- வில்லியம் டென்டல், புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1526
- ஜனவரி 14 - புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்சிற்கும் பிரான்சின் முதலாம் பிரான்சிற்கும் இடையில் மாட்ரிட் நகரில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- ஏப்ரல் 21 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
- ஜூலை 24 - மிலான் நகர் இசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.
- ஆகஸ்ட் 29 - துருக்கிய இராணுவம் ஹங்கேரிய இராணுவத்தைத் தோற்கடித்ததில், ஹங்கேரியின் இரண்டாம் லூயி மன்னன் கொல்லப்பட்டான்.
1527
- மே 6 - எசுப்பானியாவும், செருமானியப் படைகளும் இணைந்து போர்போன் இளவரசர் தலைமையில் உரோமைத் தாக்கி வெற்றி கொண்டனர். திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசுவுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
- சூன் 17 - கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் சுவீடனில் ஆரம்பமானது.
- சூன் 22 - ஜகார்த்தா நகரம் ஜெயகர்த்தா என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
- ஆகத்து 3 - வட அமெரிக்காவில் இருந்து முதலாவது கடிதம் ஜோன் ரட் என்பவரால் நியூபின்லாந்து, செயிண்ட் யான்சு நகரில் இருந்து அனுப்பப்பட்டது.
- ஆகத்து 20 - டென்மார்க் மன்னர் முதலாம் பிரெடெரிக் லூதரனியத்தை அனுமதித்தார். பாதிரியார்கள் திருமணம் புரிவதற்கு அனுமதித்தார். திருச்சபை நியமனங்களை வழங்குவதற்கு திருத்தந்தையின் முன்னனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் தளர்த்தினார்.[4][5]
- செப்டம்பர் 27 - முதலாம் பெர்டினாண்டு அங்கேரியின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான்.
- எசுப்பானியர் குவாத்தமாலாவைக் கைப்பற்றினர். முதலாவது குவாத்தமாலா நகரம் அமைக்கப்பட்டது.
- எசுப்பானியர் பிரான்சிசுக்கோ டெ மொன்டேசோ யுகட்டானை ஊடுருவினான்.
1528
- சனவரி 12 - சுவீடனின் மன்னராக முதலாம் குஸ்தாவ் முடி சூடினார்.
- அக்டோபர் 3 - ஆல்வரோ டெ சாவெத்ரா செரோன் மலுக்கு தீவுகளை அடைந்தார்.
- நவம்பர் 6 - எசுப்பானியர் ஆல்வர் நூனெசு கபேசா டெ வாக்காவும் குழுவினரும் டெக்சசில் காலூன்றினர். இங்கு வந்த முதலாவது ஐரோப்பியர் இவர்களாவர்.
- மொண்டெனேகுரோ துருக்கியின் கீழ் சுயாட்சி பெற்றது.
- மாயர்கள் யுகடானில் இருந்து எசுப்பானியரை விரட்டினர்.
- எசுப்பானியா அகபல்கோவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- அரையாப்பு கொள்ளைநோய் இங்கிலாந்தில் பரவியது.[6]
- வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் இங்கிலாந்தில் மீண்டும் பரவியது. இம்முறை இது வட ஐரோப்பாவிலும் பரவியது.
- சீனாவின் ஹெய்நான் மாகாணத்தில், மிங் அரசமரபு காலத்தில், பெரும் வறட்சி நிலவியது. பட்டினி, மற்றும் தன்னின உயிருண்ணி ஏராலமானோர் உயிரிழந்தனர்.[7]
1529
- ஏப்ரல் 22 - சரகோசாவில் இடம்பெற்ற ஒரு உடன்பாட்டின் படி கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியா மற்றும் போர்த்துக்கலுக்கிடையில் பிரிக்கப்பட்டது.
- மே 10 - துருக்கிய இராணுவம் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரியைக் கைப்பற்றும் நோக்கோடு சென்றது.
- சூலை 30 - ஆங்கிலேய வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் ஐரோப்பாவில் மேலும் பரவியது.[8]
- செப்டம்பர் 23 - வியன்னா முதலாம் சுலைமான் தலைமையிலான உதுமானியரால் முற்றுகையிடப்பட்டது.
- அக்டோபர் 15 - காலநிலை மாற்றம் காரணமாக சுலைமான் வியன்னாவைக் கைவிட்டு வெளியேறினான்.
- அக்டோபர் 26 - ஐரோப்பாவில் ஆப்சுபர்குகளின் பரவலைத் தடுக்க முடியாமல் போன காரணத்தால் தாமஸ் வோல்சி இங்கிலாந்தில் தனது உயராட்சித் தலைவர் பதவியை இழந்தார். தாமஸ் மோர் புதிய தலைவரானார்.[9]
- நவம்பர் 4-டிசம்பர் 17 - இங்கிலாந்தின் சீர்திருத்த நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.[9]
- அயூத்தியாவின் மன்னராக நான்காம் பொரோம்ராஜாதிரா முடி சூடினார்.
- கியூபாவில் அம்மை நோய் தாக்கியதில் உள்ளூர்ப் பழங்குடியினர் பெரும்பாலானோர் இறந்தனர்.[10]
பிறப்புகள்
தொகு1523
- சனவரி 29 ஏனேயா விக்கோ, இத்தாலிய செதுக்குப் பணியாள் (இ. 1567)
- பிப்ரவரி 1 – பிரான்சிஸ்கோ அப்பொன்டியோ கெஸ்திக்லியோனீ, கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. 1568)
- பிப்ரவரி 13 – வாலென்டின் நாபொத், செருமானிய வானியலாளர், கணிதயியலாளர் (இ. 1593)
- பிப்ரவரி 20 – ஜன் பிலாஹோஸ்லாவ், செக் எழுத்தாளர் (இ. 1571)
- மார்ச் 17 – ஜியோவன்னி பிரான்சிஸ்கோ கம்மென்டொனெ, கத்தோலிக்க திருச்சபையில் கர்தினால் (இ. 1584)
- மார்ச் 21 – காஸ்பர் ஏபெர்ஹார்ட், செருமானிய இறையியலாளர் (இ. 1575)
- ஏப்ரல் 5 – பிளேய்சு டி விகெனெரெ, பிரெஞ்சுத் தூதர், மறையீட்டியலாளர் (இ. 1596)
- சான்சோ டீ அவிலா, எசுப்பானிய இராணுவத் தலைவர் (இ. 1583)
- காப்ரியல் பெலோபியோ, இத்தாலிய உடற்கூறு வல்லுநர், மருத்துவர் (இ. 1562)
- கிரிஸ்பின் வான் டென் பிரோக், பிளெமிஸ் ஓவியர் (இ. 1591)
1524
- அக்டோபர் 5 - ராணி துர்காவதி, அன்றைய கோண்ட்வானா தேசத்தை ஆண்டவர் (இ. 1564)
- லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (இ. 1580)
1525
- சனவரி 6 – காஸ்பர் பேயூசிர், செருமானிய சீர்திருத்தவாதி (இ. 1602)
- சனவரி 29 – லெலியோ சோழினி, மனித இன இயற்பண்பாய்வாளர் மற்றும் சீர்திருத்தவாதி (இ. 1562)
- பிப்ரவரி 5 – சூராஜ் டீரஸ்கொவிச், கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. 1587)
- சூன் 29 – பீட்டர் அகிரிகோலா, செருமானிய மறுமலர்ச்சி மனித இன இயற்பண்பாய்வாளர், பயிற்றுநர், மரபார்ந்த அறிஞர், இறைமையியல் வல்லுநர், தூதர், ராஜதந்திரி (இ. 1585)
- செப்டம்பர் 1 – கிறிஸ்டோபர் வால்கென்டொர்ப், டென்மார்க் நாட்டு அரசியல்வாதி (இ. 1601)
- செப்டம்பர் 11 – ஜான் ஜார்ஜ், பிரான்டென்போர்க் வாக்காளர் குழு (இ. 1598)
- செப்டம்பர் 25 – ஸ்டீவன் பரோ, இங்கிலாந்து தேடலாய்வாளர், கப்பலோட்டி (இ. 1584)
- பீட்டர் புரூகல் - டச்சு மறுமலர்ச்சி ஓவியர் (இ 1569)
- எட்வர்ட் சட்டன், 4வது டுட்லி பிரபு, ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1586)
- கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா - இத்தாலிய சமயசார்பு மறுமலர்ச்சி இசைத் தொகுப்பாளர் (இ, 1594)
- முத்துத் தாண்டவர் - கருநாடக இசைப் பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி (இ, 1625)
1527
- மே 21 - எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் (இ. 1598)
- அமீதா பானு பேகம், முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவி, பேரரசர் அக்பரின் தாய் (இ. 1604)
இறப்புகள்
தொகு1521
- ஏப்ரல் 27 - பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)
1523
- பிப்ரவரி 4 – தாமசு ரூதால், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.[11]
- மே 7 – பிரான்ஸ் வொன் சிக்கிங்யின், ஜெர்மன் போர்வீரன். (பி. 1481)
- மே 23 – ஆஷிகாஃகா யோஷிடானெ, சப்பானின் இராணுவத் தளபதி (ஷோகன்) (பி. 1466)
- மே 24 – ஹென்றி மார்னெய், முதலாம் பேரன் மார்னெய். இங்கிலாந்து அரசியல்வாதி (பிறப்பு. 1447).
- சூலை 1 – யொகான் எஸ்ச் மற்றும் ஹைன்ரிச் வோய்ச், லூதரனியம் கிறித்தவத்தைப் பரப்பும் பணியின் போது பிரசெல்சுவில்லுள்ள ரோமன் கத்தோலிக்க அதிகாரப் பட்டயங்களால் எரித்துக் கொலையுண்ட முதல் லூத்தரன் வேதசாட்சியாவார். [12]
- ஆகத்து 13 – ஜெரார்ட் டேவிட், பெல்ஜியம் நாட்டின் கலைஞர் (பி. 1455)
- ஆகத்து 29 – உல்ரிச் வொன் கூட்டன், லூதர்ன சமய சீர்திருத்தவாதி (பி. 1488)
- செப்டம்பர் 14 – திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன் (பி. 1459)
- அக்டோபர் - வில்லியம் கோர்னிய்ஷ். ஆங்கில மொழி இசையமைப்பாளர்
- வீஜெர்ட் ஜேலக்காம, பிரீஸ்லாந்தைச் சார்ந்த போராளி மற்றும் ராணுவ தலைவர் (பி, 1490)
- அலிசாண்ட்ரோ அலிசாண்ட்ரி, இத்தாலிய சட்ட இயல் வல்லுநர் (பி. 1461)
- பார்டோலோமியோ மோன்டக்னா, இத்தாலியத்தைச் சார்ந்த ஓவியர் (பி. 1450)
- அபி அக்மிட் சீலிபி, உதுமானியப் பேரரசுவின் முதன்மையான மருத்துவர் (பி. 1436)
1524
- டிசம்பர் 24 - போர்ச்சுகீசிய நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா மரணமடைந்தார்,
- டிசம்பர் 24 - வாஸ்கோ ட காமா, பொர்த்துக்கீச நாடுகாண் பயணி (பி. அ. 1469)
1525
- சனவரி 24 – பிரான்சியாபிகியோ, புளோரென்டினே ஓவியர் (பி. 1482)
- பிப்ரவரி 24 - குல்லாயுமி கோயுப்யிர், செகனேயூர் டெ போன்னிவெட், பிரான்சு படைவீரன் (பி. 1488)
- மே 27 – தாமஸ் முயின்டிசர், ஜெர்மனிய கிறித்தவப் பாதிரியார் மற்றும் போராளித் தலைவர் (பி. 1489)
- . டிசம்பர் 30 – ஜேக்கப் ஃபூக்கெர், ஜெர்மன் வங்கித்தொழிலர் (பி. 1459)
1526
- நவம்பர் 5 - டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)
1527
- சூன் 21 - நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய மெய்யியலாளர் (பி. 1469)
1528
- ஏப்ரல் 6 - ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமனிய எழுத்தாளர், ஓவியர் (பி. 1471)
- ரவிதாசர், இந்திய குரு
1529
- கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர்
- தெனாலி ராமன், விஜயநகரப் பேரரசின் அவைப் புலவர்களில் ஒருவர் (பி. 1509)
மேற்கோள்கள்
தொகு- ↑ Paine, Lincoln P. (2000). Ships of Discovery and Exploration. New York: Houghton Mifflin Harcourt. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-98415-7.
- ↑ Grun, Bernard (1991). The Timetables of History (3rd ed.). New York: Simon & Schuster. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-74919-6.
- ↑ Peter Blickle: Die Geschichte der Stadt Memmingen, von den Anfängen bis zum Ende der Reichsstadtzeit, Stuttgart 1997, S. 393.
- ↑ Steffensen, Kenneth (2007). Scandinavia After the Fall of the Kalmar Union: a Study of Scandinavian Relations, 1523-1536. Unpubl. M.A. Thesis, Brigham Young University.
- ↑ Fisher, George P (1873). The Reformation. Scribner.
- ↑ "Renaissance: The Reconstructed Libraries of European Scholars: 1450-1700". Archived from the original on 2008-07-20. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.
- ↑ உள்ளூர் கசெட்டியர்களில் பதியப்பட்டது.
- ↑ Christiansen, John (2009). "The English Sweat in Lübeck and North Germany, 1529". Medical History 53: 415–424. doi:10.1017/S0025727300004002.
- ↑ 9.0 9.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 204–210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ J. N. Hays (2005). Epidemics and Pandemics: Their Impacts on Human History. p.82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-658-2
- ↑ " [Ruthall,_Thomas_(DNB00)|ரூதால், தாமசு]". தேசிய வாழ்க்கை வரலாறு அகராதி - ஆங்கிலம். இலண்டன்: சுமித். எல்டர் & கோ. 1885–1900."
- ↑ Frick, C. J. Herman (1853). "Heinrich Voes and Johannes Esch:'They seem like roses to me' [Voes on the pyre]". Martyrs of the Evangelical-Lutheran Church (3rd ed.). Saint Louis: M. Neidner.