1471
1471 (MCDLXXI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1471 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1471 MCDLXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1502 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2224 |
அர்மீனிய நாட்காட்டி | 920 ԹՎ ՋԻ |
சீன நாட்காட்டி | 4167-4168 |
எபிரேய நாட்காட்டி | 5230-5231 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1526-1527 1393-1394 4572-4573 |
இரானிய நாட்காட்டி | 849-850 |
இசுலாமிய நாட்காட்டி | 875 – 876 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 3 (文明3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1721 |
யூலியன் நாட்காட்டி | 1471 MCDLXXI |
கொரிய நாட்காட்டி | 3804 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 1 – வியட்நாம் பேரரசர் லே தான் தொங் தலைநகர் சாம்பாவைக் கைப்பற்றி, வியட்நாமின் மத்திய பகுதியில் புதிய பகுதிகளை அமைத்தார்.
- மார்ச் – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் வம்ச அரசர் நான்காம் எட்வர்டு இங்கிலாந்து திரும்பி முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
- ஏப்ரல் 14 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு ரிச்சார்டு நெவில் கோமகன் தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தை தோற்கடித்தார். ரிச்சார்ட் நெவில் இதன் போது கொல்லப்பட்டார்.
- மே 4 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு மார்கரெட் மகாராணி மற்றும் அவரது மகன் வேல்சு இளவரசர் எட்வர்டு தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தார். இச்சமரில் இளவரசர் எட்வர்டு கொல்லப்பட்டார். பின்னர் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் என்றி கொல்லப்பட்டார்.
- ஆகத்து 9 – நான்காம் சிக்சுடசு 212வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- ஆகத்து 24 – போர்த்துகல் மன்னர் ஐந்தாம் அஃபொன்சோ மொரோக்கோ நகரமான அர்சீலாவைக் கைப்பற்றினார்.
- ஆகத்து 29 – மொரோக்கோவின் தாஞ்சியர்சு நகரில் இருந்து குடிமக்கள் வெளியேறியதை அடுத்து அதனை போத்துக்கீசர் கைப்பற்றினர்.
- அக்டோபர் 10 – சுவீடனின் அரசப் பிரதிநிதிகளின் படையினர் உழவர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன், டென்மார்க் மன்னர் முதலாம் கிறித்தியானின் தாக்குதலை சுவீடன் பிரங்கன்பர்க் நகரில் இடம்பெற்ற சமரில் முறியடித்தனர்.
- டிசம்பர் 21 – சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி தீவுகளை போர்த்துக்கீச மாலுமிகள் கண்டுபிடித்தனர்.[1]
பிறப்புகள்
தொகு- மே 21 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528)
- பெப்ரவரி 16 – கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Francisco, Albertino; Agostinho, Nujoma (2011). Exorcising Devils from the Throne: São Tomé and Príncipe in the Chaos of Democratization. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780875868486.