1490கள்
பத்தாண்டு
1490கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1490ஆம் ஆண்டு துவங்கி 1499-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1490
- டிசம்பர் 19 – பிரித்தானியின் ஆன் புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனைத் திருமணம் புரிந்தார்.
- மிங் சீனாவில் எரிகல் பொழிவு இடம்பெற்றதில் பலர் உயிரிழந்தனர்.
- கத்தோலிக்க மதப்பரப்புனர் ஆப்பிரிக்க காங்கோ இராச்சியத்தில் தரையிறங்கினர்.
- செருமனியில் முதன்முறையாக அஞ்சல் சேவை அறிமுகமானது.
- லியொனார்டோ டா வின்சி நுண்புழை நுழைவை அவதானித்தார்.
- லியொனார்டோ டா வின்சி எண்ணெய் விளக்கை வடிவமைத்தார்.
- சீன அறிஞர் குவா சூயி வெண்கல-உலோக நகரும் அச்சு அச்சியந்திரத்தை கண்டுபிடித்தார்.
- காப்பியை வணிகர்கள் ஏமனில் இருந்து மக்காவுக்குக் கொண்டு சென்றனர்.
1491
- பெப்ரவரி 20 – புவிக்கு அருகே 873,784 மைல்கள் (1,406,219 km) தொலைவில் 1491ன் வால்நட்சத்திரம் வந்ததாக குறிப்புகள் உள்ளன.
- டிசம்பர் 21 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துகும் இடையே கோல்ட்ஸ்டிரீம் நகர டிருசி ஐந்தாண்டு அமைதி ஒப்பந்தமிட்டார்.
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கரகோவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
1492
- ஜனவரி 2 - கிரனாடாவின் மன்னர் போப்டில் பேர்டினண்ட் மற்றும் இசபெல்லாவின் இராணுவத்திடம் தனது நகருடன் சரணடைந்தார்.
- ஜூலை 31 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- ஆகஸ்ட் 3 - கொலம்பஸ் தனது முதலாவது அமெரிக்கப் பயணத்தை ஆரம்பித்தார்.
- அக்டோபர் 12 - கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.
- அக்டோபர் 28 - கொலம்பஸ் கியூபாவை அடைந்தார்.
- டிசம்பர் 31 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1493
- ஜனவரி - ரஷ்யாவின் மூன்றாம் ஐவன் அனைத்து ருசியர்களின் கடவுள் எனத் தன்னை அறிவித்தான்.
- ஜனவரி 4 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
- மார்ச் 15 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.
- மே 4 - திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
- ஜூலை 28 - மாஸ்கோவில் பெரும் தீ பரவியது.
- நவம்பர் 3 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.
- நவம்பர் 19 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (தற்போதைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.
1494
- ஜனவரி 25 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடி சூடினான்.
- மே 3 - கொலம்பஸ் முதற்தடவையாக ஜமெய்க்காவை கண்ணுற்றார்.
- மே 4 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
- மே 31 - ஆபிரிக்காவில் டெனரிஃப் தீவில் பழங்குடியினர் ஸ்பானிய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர்.
- ஜூன் 7 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.
1495
- பெப்ரவரி 22 – பிரான்சின் எட்டாம் சார்லசு நாபொலியை அடைந்து, அந்நகரின் ஆட்சியாளனாகத் தன்னை அறிவித்தான். சில மாதங்களின் பின்னர், தனது உறவினனான கில்பர்ட் என்பவரை நகரின் வைசிராயாக நியமித்து விட்டு, பிரான்சு திரும்பினான்.[1]
- மே 26 – பிரான்சியப் படைகளைத்துரத்தும் நோக்கோடு எசுப்பானிய இராணுவம் கலபிரியாவில் தரையிறங்கியது.
- சூன் 1 – ஸ்கொட்ச் விஸ்கி முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டது.
- அக்டோபர் 25 – முதலாம் மனுவேல் போர்த்துக்கலின் மன்னனாக முடிசூடினார்.
- நவம்பர் 30 – கரேலியா ஊடாக சுவீடனுக்குள் புகுந்திருந்த உருசியப் படைகள் வைபோர்க் அரண்மனையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அடுத்துப் பின்வாங்கின.
- அயர்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[2]
- மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர்கள் சென்றனர்.
1496
- பெப்ரவரி 24 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி வெனிசு, புளோரன்சு நகரங்களுடன் வணிக உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.[3]
- மார்ச் 5 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி ஜான் கபோட்டிற்கும் அவரது மகன்களுக்கும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிகாரத்தை அளித்தார்.[4]
- மார்ச் – சான்டோ டொமிங்கோ கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 10 – கொலம்பசு லா எசுப்பானியோலாவை விட்டு எசுப்பானியா நோக்கிப் புறப்பட்டார். மேற்கு அரைக்கோளத்திற்கான அவரது இரண்டாவது பயணம் முடிவுக்கு வந்தது.
- ஆகஸ்டு 5 – கொலம்பசின் சகோதரர் பார்த்தலோமியூ கொலம்பசு சான்டோ டொமிங்கோ நகரைக் கண்டுபிடித்தார். புதிய உலகத்தில் நிறுவப்பட்ட மிகப் பழமையான நிரந்தரமான ஐரோப்பிய நகரம் இதுவாகும்.
1497
- மே 10 - புதிய உலகத்துக்கான தனது கடற் பயணத்தை அமெரிகோ வெஸ்பூச்சி ஸ்பெயினில் இருந்து ஆரம்பித்தார்.
- மே 20 (அல்லது மே 2) - மேற்குலகிற்கான புதிய பாதையைக் கண்டறியும் பொருட்டு ஜோன் காபொட் பிறிஸ்டலில் இருந்து புறப்பட்டார்.
- ஜூன் 24 - ஜோன் காபொட் வட அமெரிக்காவை (இன்றைய நியூபவுண்லாந்தை அடைந்தார்.
- ஜூலை 8 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
- டிசம்பர் 5 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
1498
- ஜனவரி 25 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
- மே 17 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
- மே 23 - பாப்பரசரைக் குறை கூறியதற்காக புளோரன்ஸ் மன்னன் கிரலாமோ சவொனரோலா தூக்கிலிடப்பட்டான்.
- ஜூலை 31 - திரினிடாட் தீவை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
1499
- மே 19 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் பின்னாளைய மனைவியான 13-வயது கேத்தரீனுக்கும், அவரது தம்பி 12-வயது ஆர்த்தருக்கும் பதிலாள் (proxy) திருமணம் நடைபெற்றது.
- செப்டம்பர் 18 – வாஸ்கோ ட காமா இந்தியாவில் இருந்து லிஸ்பன் நகரை வந்தடைந்தார். போர்த்துகலின் மன்னர் மனுவேல் அவரை வரவேற்ரார்.
- செப்டம்பர் 22 – மாக்சிமீலியன் சுவிட்சர்லாந்துக்கு "நிகழ்நிலைப்படியான" விடுதலையை வழங்கினார்.
- நவம்பர் 23 – இங்கிலாந்தின் முடியாட்சியை ஏமாற்றிய குற்றத்திற்காக பெர்க்கின் வார்பெக் தூக்கிலிடப்பட்டார்.
- நவம்பர் 28 – இலண்டன் கோபுரத்தில் இருந்து தப்பமுயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு யோர்க் மாளிகையின் கடைசி ஆண் வாரிசான எட்வர்ட் பிளான்டஜெனெட் தூக்கிலிடப்பட்டார்.
- பன்னிரண்டாம் லூயியின் பிரான்சியப் படைகள் மிலன் நகரைக் கைப்பற்றின. லியொனார்டோ டா வின்சி வெனிசு நகருக்கு தப்பி ஓடினார்.
- மொண்டெனேகுரோ, உதுமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
- கேளடி நாயக்கர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் கர்நாடகாவில் ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகு1491
- ஜூன் 28: இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி (மறைவு 1547)
- டிசம்பர் 31: இழ்சாக் கார்ட்டியே, பிரஞ்சு ஆய்வாளர் (மறைவு 1557)
1496
- யாவோ டி பாரோசு, போர்த்துக்கீசிய வரலாற்றாளர் (இ. 1570)
1499
- டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1557)
இறப்புகள்
தொகு1491
- சாளுவ நரசிம்ம தேவ ராயன், விஜயநகரப் பேரரசன்
உலகத் தலைவர்கள்
தொகு- இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி (1485–1509)
- பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ் (1483–1498)
- பிரான்சின் பன்னிரண்டாம் லூயி (1498–1515)
- மூன்றாம் பிரெடெரிக், புனித ரோமப் பேரரசன் (1440–1493)
- முதலாம் மாக்சிமிலியன், புனித ரோமப் பேரரசன் (1493–1519)
- ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் (1488–1513)
- சாளுவ நரசிம்ம தேவ ராயன் (1485-1491)
- திம்ம பூபாலன் (1491)
- நரசிம்ம ராயன் II (1491-1505)
- துளுவ நரச நாயக்கன்: 1491-1503
மேற்கோள்கள்
தொகு- ↑ Farhi, David; Dupin, Nicolas (September–October 2010). "Origins of syphilis and management in the immunocompetent patient: facts and controversies". Clinics in Dermatology 28 (5): 533–8. doi:10.1016/j.clindermatol.2010.03.011. பப்மெட்:20797514. http://www.sciencedirect.com/science/article/pii/S0738081X10000350. பார்த்த நாள்: March 30, 2012.
- ↑ The Course of Irish History. Cork: Mercier Press. 1967. p. 370.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) - ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 189–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.