1499
1499 (MCDXCIX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1499 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1499 MCDXCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1530 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2252 |
அர்மீனிய நாட்காட்டி | 948 ԹՎ ՋԽԸ |
சீன நாட்காட்டி | 4195-4196 |
எபிரேய நாட்காட்டி | 5258-5259 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1554-1555 1421-1422 4600-4601 |
இரானிய நாட்காட்டி | 877-878 |
இசுலாமிய நாட்காட்டி | 904 – 905 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 8 (明応8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1749 |
யூலியன் நாட்காட்டி | 1499 MCDXCIX |
கொரிய நாட்காட்டி | 3832 |
நிகழ்வுகள்
தொகு- மே 19 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் பின்னாளைய மனைவியான 13-வயது கேத்தரீனுக்கும், அவரது தம்பி 12-வயது ஆர்த்தருக்கும் பதிலாள் (proxy) திருமணம் நடைபெற்றது.
- செப்டம்பர் 18 – வாஸ்கோ ட காமா இந்தியாவில் இருந்து லிஸ்பன் நகரை வந்தடைந்தார். போர்த்துகலின் மன்னர் மனுவேல் அவரை வரவேற்ரார்.
- செப்டம்பர் 22 – மாக்சிமீலியன் சுவிட்சர்லாந்துக்கு "நிகழ்நிலைப்படியான" விடுதலையை வழங்கினார்.
- நவம்பர் 23 – இங்கிலாந்தின் முடியாட்சியை ஏமாற்றிய குற்றத்திற்காக பெர்க்கின் வார்பெக் தூக்கிலிடப்பட்டார்.
- நவம்பர் 28 – இலண்டன் கோபுரத்தில் இருந்து தப்பமுயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு யோர்க் மாளிகையின் கடைசி ஆண் வாரிசான எட்வர்ட் பிளான்டஜெனெட் தூக்கிலிடப்பட்டார்.
- பன்னிரண்டாம் லூயியின் பிரான்சியப் படைகள் மிலன் நகரைக் கைப்பற்றின. லியொனார்டோ டா வின்சி வெனிசு நகருக்கு தப்பி ஓடினார்.
- மொண்டெனேகுரோ, உதுமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
- கேளடி நாயக்கர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் கர்நாடகாவில் ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகு- டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1557)