ஜான் கபோட்

இத்தாலிய நாடுகாண் பயணி

ஜான் கபோட் (John Cabot, இத்தாலியம்: Giovanni Caboto; c. 1450 – c. 1500) இத்தாலிய நாடுகாண் பயணியும் கடற்வழித் தேடலாளரும் ஆவார். 1497இல் இங்கிலாந்து மன்னர் என்றி VII ஆணைப்படி வட அமெரிக்கப் பகுதிகளை கண்டறிந்தார். பதினோராம் நூற்றாண்டில் நார்சு வைக்கிங் வைன்லாந்தில் இறங்கியதற்குப் பிறகு வட அமெரிக்கப் பகுதிகளை ஆராயந்த முதல் ஐரோப்பியர் என்று கருதப்படுகிறார். கனடிய அரசு மற்றும் பிரித்தானிய அரசு இரண்டும் இவர் நியூபவுண்டு லாந்தில் இறங்கியதாக அலுவல்முறையாக அறிவித்துள்ளன.

ஜான் கபோட் (கிவான்னி கபோட்)
பாரம்பரிய வெனிசிய உடையில் ஜான் கபோட்டின் ஓவியம் - ஜுஸ்டினோ மெனெஸ்கார்டி (1762).
பிறப்புc.1450
காஸ்ட்டிக்ளியோன் சியாவாரெசு, செனோவா குடியரசு
அல்லது கெய்தா, நேப்பிள்சு இராச்சியம்
காணாமல்போனதுc. 1500
தேசியம்இத்தாலியர்
மற்ற பெயர்கள்கிவான்னி கபோட், சுவான் கபோட்டோ, கிவான்னி சபோட்டெ, யுவான் கபோடோ, ழான் கபோடோ
பணிகடற்வழி தேடலாளர்கள்
அறியப்படுவதுவைக்கிங்களுக்குப் பிறகு வட அமெரிக்கக் கண்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியர்; வடமேற்குப் பெருவழியை முதலில் தேடியவர்.[1]
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வாழ்க்கைத்
துணை
மேட்டியா
பிள்ளைகள்லுடோவிகொ, செபாஸ்டியன் கபோட், சான்க்டோ[2]

மேற்சான்றுகள்

தொகு
  1. John CabotThinkQuest – Retrieved 10 February 2011.
  2. "Catholic Encyclopedia "John & Sebastian Cabot"". newadvent. 2007. பார்க்கப்பட்ட நாள் 17 May 2008.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜான் கபோட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கபோட்&oldid=3537435" இலிருந்து மீள்விக்கப்பட்டது