வைக்கிங்
வைக்கிங் (Vikings) என்பவர்கள், முதலில் எசுக்காண்டினாவியா (இன்றைய டென்மார்க், நார்வே மற்றும் சுவீடன் )[1][2][3][4] இவர்கள் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஐரோப்பாவின் பல பகுதிகளைத் தாக்கி அங்கே தமது குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.[5][6][7] இவர்கள் நடுநிலக் கடல், வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, கிறீன்லாந்து மற்றும் வின்லாண்ட் ( கனடா,வட அமெரிக்காவில் இன்றைய நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் ) வரை பயணம் செய்தனர். இவர்களின் சொந்த நாடுகளிலும், இவர்கள் குடியேறிய சில நாடுகளிலும், இந்த காலம் பிரபலமாக வைக்கிங் காலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் "வைக்கிங்" என்ற சொல் பொதுவாக எசுக்காண்டினாவிய தாயகங்களில் வசிப்பவர்களையும் உள்ளடக்கியது. எசுக்காண்டினாவியா, பிரித்தானிய தீவுகள், பிரான்சு, எசுத்தோனியா மற்றும் கீவன் ரஸ் ஆகியவற்றின் ஆரம்பகால இடைக்கால வரலாற்றில் வைக்கிங்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினர்.[8]
தொடக்ககாலம்
தொகுவைக்கிங்குகள் கடற்கொள்ளையர்களாக மாறுவதற்கு முன்னர் வடஐரோப்பிவில் வசித்து வந்தனர். வடஐரோப்பாவின் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்த நிலப்பரப்பு ஸ்காண்டிநேவியா என்று அறியப்பட்டது. வைக்கிங்குகள் இந்நிலப்பரப்பின் பூர்வகுடி மக்களாவர். இவ்வினக்குழுவிற்கு நார்ஸ்மேன் எனும் பெயரும் உள்ளது. நார்ஸ்மேன் என்பதற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருளாகும். நார்வே மலைகளைக் கொண்ட நிலப்பரப்பாகும், சுவீடன் அடர்ந்த காடுகளைக்கொண்ட நிலப்பரப்பாகும், டென்மார்க் மணற்பரப்பு நிரம்பிய பகுதியாகும். விவசாயமும், காலநடைகள் வளர்ப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களாக இருந்தது. ஆடு, மாடு, பன்றி ஆகிய விலங்குகளை இவர்கள் வளர்த்துள்ளனர். மீன் பிடித்தலும் அதற்கான படகுகளைக்கட்டுவதும் இவர்களின் உப தொழில்களாகும். விவசாயத்தொழில் நலிவடைந்த காரணத்தினால் கடற்பயணம் மேற்கொண்டு கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.
டிராகன் படகுகள்
தொகுவைக்கிங்குகள் கொள்ளையடிக்க டிராகன் போன்ற வடிவத்திலிருந்த மரப்படகுகளை வடிவமைத்தனர். பெரிய அளவு டிராகன் படகுகள் முப்பது மீட்டர் நீளம் வரை இருந்துள்ளன. பக்கத்திற்கு பதினாறு எனும் அளவில் மொத்தம் முப்பத்து இரண்டு துடுப்புகளை பயன்படுத்தும் அளவு நீளமானதாகவும், மணிக்கு முப்பத்து இரண்டு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு திறன் வாய்ந்ததாகவும் வைக்கிங்குகளின் படகுகள் இருந்துள்ளன.[9] படகின் முன் பக்கம் டிராகனின் தலை உருவமும், பின் பக்கம் வாலின் உருவமும் இடம்பெற்றிருக்கும். துர்சக்திகளிடமிருந்து படகை காப்பற்ற இது போன்ற வடிவமைப்பை வைக்கிங்குகள் செய்துள்ளனர். வசதி நிறைந்த ஒரு வைக்கிங் இறந்துவிட்டால் அவருடன் சேர்த்து அவரின் படகையும் தீயிட்டு எரித்துள்ளனர்.
வைக்கிங்குளின் மத நம்பிக்கை
தொகுஅஸ்கார்ட் எனும் இடம் வைக்குங்களின் கடவுள்கள் வாழுமிடமாக கருதப்பட்டு வந்துள்ளது. ஓடின் என்பவர் போருக்குரிய கடவுளாவார். இவர் அனைத்து கடவுள்களுக்கும் தந்தையாகவும், எட்டு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் வலம் வருபவராகவும், நாய் வளர்ப்பவராகவும் வைக்கிங்குகளால் நம்பப்பட்டவர். ஓடினின் மகன் தோர் ஆவார். இவர் இடி, மின்னலின் கடவுளாக கருதப்பட்டவர். ஃபிரைஜா என்பவர் காதலுக்கான பெண்கடவுளாக நம்பப்பட்டவர். ஓடின், தோர், ஃபிரைஜா எனும் கடவுள்களின் பெயர்களே பின்னாலில் புதன்(Wednesday), வியாழன்(Thursday), வெள்ளி(Friday) ஆகிய கிழமைகளின் பெயர்களாக உருமாறியதாக நம்பப்படுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்துவ மதம் வைக்கிங்குகளின் மத்தியில் பரவ ஆரம்பித்தது. வைக்கிங் ஓலஃப் என்பவர் ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி கிபி 994 ஆம் ஆண்டு கிறித்துவராக மதம் மாறினார். பின்னர் மன்னரான அவர் தனது உடன் இருப்பவர்களையும் மதம்மாற்றியுள்ளார். தனது நாட்டில் வைக்கிங் கடவுள்களின் கோவில்களை இடித்துவிட்டு கிறித்துவ கோவில்களைக் கட்டியுள்ளார்.
கொள்ளைத்தொழில்
தொகுவிவசாயம் அழுகியதால் கொள்ளைத்தொழிலில் வைக்கிங்குகள் ஈடுபட ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் குறைவான படகுகளின் எண்ணிக்கையில் கொளையடிப்பதற்காக சென்றுவிட்டு திரும்ப தனது சொந்த நிலப்பரப்பிற்கு திரும்பி வந்துக்கொண்டிருந்த வைக்கிங்குகள் பின்னர் அதிகப்படியான படகுகளில் சென்று குடியேற்றங்களை உருவாக்க ஆரம்பித்தனர். தற்போதைய கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில நகரங்கள் வைக்குங்களின் குடியேற்றத்தினால் உருவான இடங்களாகும். வைக்கிங்குகள் முதன்முதலாக கி.பி 793 ஆம் வருடம் ஜனவரி எட்டாம் திகதி இங்கிலாந்தின் லின்டிஸ்ஃரேனே எனும் ஊரில் கொள்ளையடித்தாக வரலாறுகள் கூறுகின்றன. கார்டர் ஸ்வாவார்சன், நாடோடர், ஃப்லோகி வில்ஜெர்தர்சன் ஆகிய மூன்று வைக்கிங்குகளும் கி.பி 860 முதல் 870 இற்கு இடப்பட்ட காலங்களில் ஐஸ்லாந்திற்கு வந்து சென்றதாக ஐஸ்லாந்தின் இடைக்கால சரித்திர ஆவணமான லேண்ட்னமாபோக் குறிப்பிடுகின்றது. இதில் ஃப்லோகி வில்ஜெர்தர்சன் என்பவரே ஐஸ்லாந்து எனும் பெயர் வைத்ததாக நம்பப்படுகின்றது. ஐஸ்லாந்தில் குடியேற்றங்களை ஏற்படுத்திய வைக்கிங்குகள் இங்கோல்ஃபர் அர்னார்சன் மற்றும் ஜோர்லீஃப் ரோட்மார்ஸன் ஆவர். இவர்கள் ஐஸ்லாந்தின் தந்தை என அழைக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Margaryan, Ashot (September 2020). "Population genomics of the Viking world". Nature 585 (7825): 390–396. doi:10.1038/s41586-020-2688-8. பப்மெட்:32939067. Bibcode: 2020Natur.585..390M. https://www.nature.com/articles/s41586-020-2688-8. பார்த்த நாள்: 21 January 2021.
- ↑ Mawer, Allen (1913). The Vikings. Cambridge University Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 095173394X.
The term 'Viking'... came to be used more especially of those warriors who left their homes in Scandinavia and made raids on the chief European countries. This is the narrow, and technically the only correct use of the term 'Viking,' but in such expressions as 'Viking civilisation,' 'the Viking age,' 'the Viking movement,' 'Viking influence,' the word has come to have a wider significance and is used as a concise and convenient term for describing the whole of the civilisation, activity and influence of the Scandinavian peoples, at a particular period in their history, and to apply the term 'Viking' in its narrower sense to these movements would be as misleading as to write an account of the age of Elizabeth and label it 'The Buccaneers.'
Holman, Catherine (2003). Historical Dictionary of the Vikings. Scarecrow Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810865890.Viking is not merely another way of referring to a medieval Scandinavian. Technically, the word has a more specific meaning, and it was used (only infrequently by contemporaries of the Vikings) to refer to those Scandinavians, usually men, who attacked their contemporaries...
Simpson, Jacqueline (1980). The Viking World. Batsford. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0713407778. Archived from the original on 14 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.Strictly speaking, therefore, the term Viking should only be applied to men actually engaged in these violent pursuits, and not to every contemporary Scandinavian...
Davies, Norman (1999). The Isles: A History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198030737.The Viking appellation... refers to an activity, not to an ethnic group
- ↑ Campbell, Alistair (1973). "Viking". Encyclopaedia Britannica. Vol. 23. Encyclopaedia Britannica. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0852291736. Archived from the original on 14 April 2023. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
The term "Viking" is applied today to Scandinavians who left their homes intent on raiding or conquest, and their descendants, during a period extending roughly from 800 to 1050 CE.
Mawer, Allen (1922). "The Vikings". In Bury, J. B. (ed.). The Cambridge Medieval History. Vol. 3. Cambridge University Press. p. 309. Archived from the original on 14 April 2023. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.The term Viking... is now commonly applied to those Norsemen, Danes and Swedes who harried Europe from the eighth to the eleventh centuries...
"Viking". The Concise Oxford Dictionary of Archaeology (2 ed.). Oxford University Press. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191727139. Archived from the original on 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.Viking... Scandinavian words used to describe the seafaring raiders from Norway, Sweden, and Denmark who ravaged the coasts of Europe from about 800 ad onwards.
Crowcroft, Robert; Cannon, John, eds. (2015). "Viking". The Oxford Companion to British History (2 ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191757150. Archived from the original on 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.Viking is an Old Norse term, of disputed derivation, which only came into common usage in the 19th cent. to describe peoples of Scandinavian origin who, as raiders, settlers, and traders, had major and long-lasting effects on northern Europe and the Atlantic seaboards between the late 8th and 11th cents.
- ↑ Oxford Dictionaries (2011). Concise Oxford English Dictionary. OUP Oxford. p. 1612. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199601103. Archived from the original on 14 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
Vikings: Any of the Scandinavian seafaring pirates and traders who raided and settled in many parts of NW Europe in the 8th–11th centuries...
Random House Unabridged Dictionary (2019). "Vikings". Dictionary.com. Random House. Archived from the original on 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.Viking... Any of the Scandinavian pirates who plundered the coasts of Europe from the 8th to 10th centuries
COBUILD Advanced English Dictionary. "Viking". Collins Online Dictionary. HarperCollins. Archived from the original on 7 October 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.The Vikings were people who sailed from Scandinavia and attacked villages in most parts of north-western Europe from the 8th to the 11th centuries
Collins English Dictionary. "Viking". Collins Online Dictionary. HarperCollins. Archived from the original on 7 October 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.Viking... [A]ny of the Danes, Norwegians, and Swedes who raided by sea most of N and W Europe from the 8th to the 11th centuries, later often settling, as in parts of Britain.
Webster's New World Dictionary, 4th Edition (2010). "Viking". Collins Online Dictionary. Houghton Mifflin Harcourt. Archived from the original on 7 October 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.Viking... [A]ny of the Scandinavian sea rovers and pirates who ravaged the coasts of Europe from the 8th to the 10th cent.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) Cambridge Advanced Learner's Dictionary & Thesaurus. "Viking". Cambridge Dictionary. Cambridge University Press. Archived from the original on 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.Viking... [A] person belonging to a race of Scandinavian people who travelled by sea and attacked parts of northern and southern Europe between the 8th and 11th centuries, often staying to live.
- ↑ "Viking". Encyclopædia Britannica, Inc. Archived from the original on 5 May 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
Viking, also called Norseman or Northman, member of the Scandinavian seafaring warriors who raided and colonized wide areas of Europe from the 9th to the 11th century and whose disruptive influence profoundly affected European history. These pagan Danish, Norwegian, and Swedish warriors were...
- ↑ Linton, Michael I. A.; Nokkentved, Christian. "Denmark: The Viking Era". Encyclopædia Britannica, Inc. Archived from the original on 30 September 2018. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
Viking society, which had developed by the 9th century, included the peoples that lived in what are now Denmark, Norway, Sweden, and, from the 10th century, Iceland
- ↑ Roesdahl, pp. 9–22.
- ↑ Brink 2008
- ↑ Hadingham, Evan: Secrets of Viking Ships (05.09.00) NOVA science media.