சாளுவ மரபு
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
விஜயநகரப் பேரரசு தொடர்பில் சாளுவ மரபு சாளுவர்களால் உருவாக்கப்பட்டது. [1]வரலாற்று மரபுகளின்படி சாளுவர் வடக்குக் கர்நாடகத்தில் உள்ள கல்யாணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கோரந்தலைக் கல்வெட்டு இவர்கள் மூலத்தை, மேலைச் சாளுக்கியர் மற்றும் கலச்சூரிகள் காலத்துக் கல்யாணிப் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இவர்கள் பின்னர் தற்கால ஆந்திராவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளுக்குப் பரவினர். இப் பரவல் குடிப் பெயர்வினாலோ அல்லது 14 ஆம் நூற்றாண்டில்[2] நிகழ்ந்த வியஜநகரப் படையெடுப்புக்களினாலோ ஏற்பட்டு இருக்கலாம்.
விஜயநகரக் காலத்துக் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் முதன்முதலாக அறியப்படுகின்ற சாளுவன் மங்கள்தேவா என்பவனாவான். இவன் சாளுவ நரசிம்ம தேவராயனின் முப்பாட்டன் ஆவான். மதுரை சுல்தானகத்துக்கு எதிராகப் முதலாவது புக்கா ராயன் நடத்திய போர்களில், மங்கள்தேவா முக்கிய பங்கு வகித்ததான். இவன் வழிவந்தவர்களே சாளுவ மரபைத் தோற்றுவித்து, விஜயநகரப் பேரரசின் அரசமரபுகளில் ஒன்றாகவும் விளங்கினர். கி.பி. 1485 முதல் 1505 வரையான காலப்பகுதியில் இம் மரபைச் சேர்ந்த மூவர் விஜயநகரப் பேரரசை ஆண்டனர். இவர்கள் ஏறத்தாள முழுத் தென்னிந்தியாவையுமே அடிப்படுத்தி ஆண்டனர். [3]இதன்பின்னர் துளுவ மரபினர் இவர்களிடமிருந்து ஆட்சி உரிமையைக் கைப்பற்றினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vijayanagara and Bamini Kingdom 2.37
- ↑ Durga Prasad , p219
- ↑ The Vijayanagar Empire: Saluva Dynasty
- WebPage by Dr. Jyothsna Kamat
- Durga Prasad, History of the Andhras Till 1565 A.D., P. G. Publishers, Guntur
- WebPage by Britannica