பிரௌத ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பிரௌத ராயன் அல்லது பிரௌத தேவ ராயன் என்று அழைக்கப்பட்டவன் 1485 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிபீடம் ஏறியவன். ஆனால் மிகக் குறுகிய காலமே ஆட்சியில் இருக்க முடிந்தது. இரண்டாம் தேவ ராயனுக்குப் பின்னர், இவனுக்கு முன்னிருந்த இரண்டு அரசர்களும் பேரரசை நிவகிப்பதற்கான திறமையைப் பெற்றிருக்கவில்லை. இதனால் உள்நாட்டிலும், வெளியிலிருந்தும் பேரரசுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பேரரசு இவற்றைச் சமாளிக்கும் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் பேரரசன் இரண்டாம் விருபக்ஷ ராயனின் மறைவைத் தொடர்ந்து அரசனான பிரௌத ராயன் மக்களால் மதிக்கப்படாத ஒரு அரசனாக இருந்தான். [1]
இந்நிலையில் சந்திரகிரிப் பகுதியில் ஆளுநராக இருந்த சாளுவ நரசிம்ம தேவ ராயன், துளுவ நரச நாயக்கன் என்பவனை விஜயநகரத்துக்கு அனுப்பி பிரௌத ராயனைப் பதவியில் இருந்து அகற்றினான். அரியணை ஏறிய அதே ஆண்டிலேயே அரசிழந்த இவனே விஜயநகரப் பேரரசை நிறுவிய சங்கம மரபின் கடைசி அரசனாவான். இவனுடைய வீழ்ச்சியுடன் விஜய நகரப் பேரரசில் சாளுவ மரபின் ஆட்சி தொடங்கியது.