சங்கம மரபு
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
சங்கம மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட முதலாவது மரபு ஆகும்.
பேரரசுக்கான அடித்தளமும், தொடக்க வரலாறும்
தொகுசங்கம மரபு, முதலாம் ஹரிஹரர் (ஹக்கா), முதலாவது புக்கா ராயன் (புக்கா) ஆகியோரால் நிறுவப்பட்டது. எனினும் இம் மரபின் தோற்றம் பற்றிப் பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. ஒரு கோட்பாட்டின்படி, யாதவ / குருபா இனக்குழுவைச் சேர்ந்த புக்காவும், ஹக்காவும் வாரங்கல் அரசரின் படையில் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்கோடு நடந்த சண்டையில் இவர்கள் படை தோல்வியுறவே ஹக்காவும், புக்காவும் சிறைப்பிடிக்கப்பட்டு டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே இருவரையும் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டனர். எனினும், அவ்விடத்தை விட்டுத் தப்பிய இருவரும், தமது சமயமான இந்து சமயத்தைக் கைவிடாது, வித்யாரண்யர் என்னும் ரிஷியின் செல்வாக்குக்கு உட்பட்டு விஜயநகரப் பேரரசை நிறுவினர். [1]
இன்னொரு விளக்கத்தின்படி, ஹம்பிப் பகுதியில் பிறந்த இச் சகோதரர்கள் இருவரும், ஹொய்சலர்களுடன் தொடர்புபட்டிருந்தனர். இதனால் முறைப்படியே இவர்கள் ஹொய்சல நாட்டின் அரசுக்கு வாரிசு உரிமை பெற்றனர்.
இம் மரபைச் சேர்ந்த முதலாவது அரசரான முதலாம் ஹரிஹரர் விஜயநகரத்தின் எல்லைகளைக் காவிரியிலிருந்து கிருஷ்ணா வரை விரிவு படுத்தினார். எனினும், பஹமானி சுல்தான்களுடன் இவருக்குத் தொடர்ந்து முரண்பாடுகள் இருந்துவந்தது. இவருக்குப் பின்னர் இவர் தம்பியான புக்கா ராயன் அரசனானான். இவன் நாட்டை, தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் விரிவாக்கினான். இவன், மதுரையைக் கைப்பற்றித் தனது நாட்டு எல்லையைத் தெற்கே இராமேஸ்வரம் வரை கொண்டுசென்றான். சம்புவரையர்கள், ஆற்காட்டு அரசு, கொண்டவிடு ரெட்டிகள், ஆகியோரைத் தோற்கடித்ததுடன், கோவா, ஒரிஸ்ஸா ஆகிய அரசுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். இலங்கை, மலபார் ஆகியவற்றையும் தனக்குத் திறை செலுத்துமாறு செய்தான்.