மல்லிகார்ஜுன ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மல்லிகார்ஜுன ராயன் விஜயநகரப் பேரரசின் பேரரசனாக இருந்தவன். சங்கம மரபைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் தேவராயனின் மறைவுக்குப் பின் ஆட்சிபீடம் ஏறினான். இரண்டாம் தேவராயன் ஒரு திறமையான பேரரசனாக விளங்கினான். இவனது காலம் சங்கம மரபினரின் பொற்காலம் எனலாம். எனினும், மல்லிகார்ஜுன ராயன் தனது தந்தையைப் போலன்றி திறமையற்றவனாகவும், ஊழல் நிறைந்தவனாகவும் இருந்தான். [1]
தொடக்கத்தில் பாமினி சுல்தானகம், ஒரிசாவின் அரசன் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்துப் பேரரசைக் காத்துக்கொண்டான் எனினும், பின்னர் அவனுக்குத் தொடர்ச்சியான பல தோல்விகள் ஏற்பட்டன. கஜபதிகள், ராஜமுந்திரியை 1454 ஆம் ஆண்டிலும், உதயகிரியையும், சந்திரகிரியையும் 1463 இலும் கைப்பற்றிக் கொண்டனர். 1450 இல் பஹமானி அரசுகள், பேரரசின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு தலைநகரத்தையும் அண்மித்தனர். இது ஒருபுறமிருக்கப் போத்துக்கேயர் தென்னிந்தியாவுக்குள் நுழைந்தனர். மேற்குக் கரையில் விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல துறைமுகங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந் நிகழ்வுகள் சங்கம மரபின் வீழ்ச்சிக்கு வித்திட்டன.
1465 ஆம் ஆண்டில் மல்லிகார்ஜுன ராயனின் ஒன்றுவிட்ட சகோதரனான இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான். எனினும், இவனும் முன்னவனை விடத் திறமையானவனாக இருக்கவில்லை.