முதன்மை பட்டியைத் திறக்கவும்

ராஜமன்றி

(ராஜமுந்திரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராசமன்றி அல்லது இராசமுந்திரி (Rajahmundry/rajamahendravaram) (தெலுங்கு: రాజమండ్రి) என்கிற நகரம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ஒரு முக்கிய நகரம். கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஐந்தாவது பெரிய நகரம். இது ஆந்திராவின் கலாச்சாரத் தலைநகர் என்று மதிக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 653987.

இராசமன்றி
—  நகரம்  —
இராசமன்றி
இருப்பிடம்: இராசமன்றி
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°59′N 81°47′E / 16.98°N 81.78°E / 16.98; 81.78ஆள்கூறுகள்: 16°59′N 81°47′E / 16.98°N 81.78°E / 16.98; 81.78
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கிழக்கு கோதாவரி மாவட்டம்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை

அடர்த்தி

9,00,000 (2009)

17,288/km2 (44,776/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

[[1_E+km2_மீ²|100 கிமீ2]] (39 சதுர மைல்)

14 மீட்டர்கள் (46 ft)

இணையதளம் www.rajahmundry.co.in
10.10.2015 அன்று நடைபெற்ற ஆந்திர அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வூரின் பெயரை ராஜமஹேன்திரவரம் என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

வரலாறுதொகு

இராசமகேந்திரி என்றும் இராசமகேந்திரவரம் என்றும் சரித்திரத்தில் நிலைபெற்றுள்ள இந்த நகரின் பெயர் நாளடைவில் மருவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராஜமன்றி என்றாகி இருக்கிறது. இந்த நகரின் பழமை, கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டில் (கி.பி.1022) சாளுக்கிய அரசன் இராசராச நரேந்திரனுடைய ஆளுகைக்கு உட்பட்ட முக்கிய நகராக இது இருந்ததற்கான ஆதாரங்களில் இருந்து தெரிகிறது.

தெலுங்கு மொழியின் ஆதாரத் தொட்டில்களில் ஒன்றாக இந்த நகரம் திகழ்ந்திருக்கிறது. தெலுங்கு மொழியின் ஆதிகவி நன்னையா இந்த ஊரைச் சேர்ந்தவர். இவரும் திக்கனா மற்றும் யர்ரனா ஆகிய மூவரும் சேர்ந்து மகாபாரதத்தினைத் தெலுங்கில் “ஜெயா” என்கிற பெயரில் மொழிபெயர்த்தனர். தெலுங்கு இலக்கியத்தின் முதல் படைப்பாக இது கருதப்படுகிறது. தெலுங்கு மொழியின் முதல் நாவல் ராஜசேகர சரித்திரம் எழுதிய கந்துகூரி வீரேசலிங்கம் பிறந்த ஊரும் இதுவே.

சனசங்கத்தின் தொடக்கத்துக்கு வித்திட்ட அவசரல ராமாராவும் இராசமுந்திரியைச் சேர்ந்தவரே. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த ஊர் முக்கியப்பங்கு வகித்திருக்கிறது.

நில அமைப்புதொகு

16°59′N 81°47′E16.98°N 81.78°E. என்கிற அட்சரேகை தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட இந்த நகரம், கடல்மட்டத்திலிருந்து சுமார் 45 அடி உயரத்தில் உள்ளது. நெல்லும் கரும்பும் முக்கிய வேளாண் விளைபொருட்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைகாலத்தில் 34 டிகிரி முதல் 48 டிகிரி வரையிலும் வெயில் கொளுத்தும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர் காலத்தில் 27 டிகிரி முதல் 30 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். பருவக்காற்றுகளாலும் வங்கக் கடலின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களாலும், புயல்காற்றுகளாலும் தாராளமாக மழை பெய்யும் பகுதியாக விளங்குகிறது.

முக்கிய நகரங்களுடன் இணைப்புதொகு

மக்கள்தொகு

2001-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகைக் கணக்கின் படி இங்கே மக்கள் தொகை சுமார் ஆறு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம். ஆண் பெண் விகிதாச்சாரம் ஏறக்குறைய 50 விழுக்காடு. படித்தவர் விழுக்காடு 70 சதம் (தேசிய சராசரி 59.5%). ஆண்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதம்; பெண்களில் 66 சதம்.

சுற்றுலாத் தளங்கள்தொகு

 
ராஜமுந்திரியின் தொடருந்து மற்றும் சாலை போக்குவரத்து பாலம்

இராசமுந்திரியின் முக்கியக் கவர்ச்சி கோதாவரி நதி.கோதாவரியின் குறுக்கே சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டுள்ள தௌலேசுவரம் நீர்த்தேக்கம் நான்கு(தௌலேசுவரம், ரியாலி, மட்டுரு, விசேசுவரம்) பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்தை ஒழுங்குபடுத்தி வளப்படுத்துகிறது.

கோதாவரியின் குறுக்கே முதல் ரயில் பாலம் 1897-ல் வால்டன் என்கிற ஆங்கில பொறியாளரின் மேற்பார்வையில் மூன்று கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது. அது இப்போது பலவீனமடைந்து விட்டதால் ஆசியாவின் மிகப் பெரிய இரட்டை வழிப்பாலம் (சாலைவழி, புகைவண்டி வழி) கோதாவரிக்குக் குறுக்கே கொவ்வூரையும் இராசமுந்திரியையும் இணைக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. இது தவிர மூன்றாவது இணைப்புப் பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

ரல்லபண்டி சுப்பாராவ் அருங்காட்சியகம் பனைஓலை இலக்கியப்பிரதிகள் உள்ளிட்ட அரிய பழங்காலப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.

பப்பிமலையில் பெரந்தல பள்ளி என்கிற இடத்தில் அழகிய அருவி ஒன்று உள்ளது. பாப்பிகொண்டலு என்கிற இடத்தில் படகுசவாரியும் இயற்கைக் காட்சிகளும் சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும்.

ஆன்மீகத் தொடர்புதொகு

கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள கோடிலிங்கலு (கோடி சிவலிங்கங்களைக் கொண்டது என்று பொருள்) என்கிற கோவில் உள்ளது. இசுகான் இயக்கத்தினர் கட்டியுள்ள மிகப்பெரிய கிருஷ்ணன் கோவில் நகரின் புதிய கவர்ச்சி. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 நாட்கள் கொண்டாடப்படும் புஷ்கரம் (கோதாவரி நதியில் அன்று மூழ்கி எழுந்தால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை) 2003-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது மூன்றரைக் கோடிப் பேர் கோதாவரியில் மூழ்கி எழுந்தார்களாம்.

பெட்ரோலிய, இயற்கை எரிவாயு வளம்தொகு

கொன்னசீமா என்கிற பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஏராளமான அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் எரிவாயு கார்ப்பொரேஷனின் (ONGC) தென்மண்டல கோதாவரி- கிருஷ்ணா படுகையின் தலைமையகம் ராஜமுந்திரி. தற்போது தினசரி சுமார் ஆயிரம் டன் பெட்ரோலியமும் பத்து மில்லியன் கனமீட்டர் எரிவாயுவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முக்கியத் தொழில்கள்தொகு

 • விவசாயம்
 • துணி
 • தங்கம்

முக்கிய தொழில் நிறுவனங்கள்தொகு

கல்வி நிறுவனங்கள்தொகு

 • 150 வருடப் பழைமை வாய்ந்த அரசு கலைக்கல்லூரி (முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் இங்கே பணியாற்றி இருக்கிறார்)
 • இரண்டு சட்டக் கல்லூரிகள்
 • ஒரு மருத்துவக் கல்லூரி
 • ஒரு பல் மருத்துவக் கல்லூரி
 • ஏராளமான அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்
 • ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி
 • நிறைய கலைக்கல்லூரிகள்

என்று ஏராளமான உயர்கல்வி வாய்ப்புகளுடன் நூற்றுக்கணக்கில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இராசமுந்திரியைக் கல்வியில் முக்கியமான நகரமாக்கி உள்ளன.

போக்குவரத்துதொகு

 • தேசிய நெடுஞ்சாலை-5ன் மீது அமைந்துள்ளது.
 • சென்னை – கொல்கத்தா ரயில் தடத்தில் இருக்கிறது.
 • சிறிய விமான நிலையம் இருக்கிறது. சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் தினசரி விமானப் போக்குவரத்து உள்ளது.

இராசமுந்திரியில் பிறந்த முக்கியஸ்தர்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

 • Rajahmundry in its entirety
 • A complete Information on Rajahmundry, Rajahmundry Yellow Pages
 • Rajahmundry profile

குறிப்புதவிதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜமன்றி&oldid=2758295" இருந்து மீள்விக்கப்பட்டது