திக்கனா
திக்கன சோமயாஜி அல்லது திக்கனா (தெலுங்கு: తిక్కన్న) (1220 - 1300) பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதிய மூவருள் இரண்டாமவர்.[1] முதலில் எழுதிய நன்னய்யா முதல் இரண்டரைப் பருவங்களைத் தான் மொழிபெயர்த்திருந்தார். அதுவும் வடமொழி மிகுதியுடன் இருந்தது. திக்கனா மூன்றாம் பருவம் தொடங்கிப் பதினெட்டாம் பருவம் வரைக்கும் எழுதினார். மூன்றாமவரான எர்ரண்ணா முழு பாரதத்தையும் எழுதினார்.
திக்கன சோமயாஜி | |
---|---|
பிறப்பு | 1205 |
இறப்பு | 1288 |
புனைபெயர் | திக்கனா |
வகை | கவி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆந்திர மகாபாரதம் |
திக்கனா நெல்லூர் அரசரான மனுமசித்தியின் அரசவைக் கவியும் அமைச்சருமாவார். மகாபாரதம் எழுதும் முன்னர் சோமவேள்வியை நடத்தியவராதலால் சோமயாஜி என அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)". (1) 5. (1992). Ed. மோகன் லால். பக்கம் 4351: சாகித்ய அகாதமி. அணுகப்பட்டது அக்டோபர் 20, 2012.