வீரநரசிம்ம ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
விஜயநகரப் பேரரசின் ஆட்சியதிகாரத்தைத் தன் வசம் வைத்துக்கொண்டிருந்த துளுவ நரச நாயக்கனுக்குப் பின்னர் அப்பொறுப்பை 1503 ஆம் ஆண்டில், அவனது மகனான வீரநரசிம்ம ராயன் ஏற்றுக்கொண்டான். [1]சிறுவனாக இருந்த பேரரசன் இரண்டாம் நரசிம்ம ராயனுக்காக இவன் ஆட்சி நடத்தி வந்தார். இக் காலத்தில் இரண்டாம் நரசிம்ம ராயன் காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவே தெரிகிறது.
அரச பதவி
தொகு1505 ஆம் ஆண்டில் இரண்டாம் நரசிம்ம ராயன் காவலில் இருக்கும் போதே கொல்லப்பட்டான். இதனால், வீரநரசிம்ம ராயன் தானே பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். 1509 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த இவன் தன் ஆட்சிக் காலம் முழுவதையும், குழப்பம் விளைவித்துவந்த தலைவர்களுடன் சண்டை செய்வதிலேயே செலவிட்டான்.
போர்கள்
தொகுபீஜாப்பூர் சுல்தான் யூசுப் ஆதில் கான் தெற்கு நோக்கித் தனது அரசை விரிவுபடுத்த முயன்றான். அரவிடு குடும்பத்தைச் சேர்ந்த ராமராஜன், அவனது மகன் திம்மா ஆகியோரின் துணையுடன், யூசுப் ஆதில் கான் தோற்கடிக்கப்பட்டான். அடோனி மற்றும் குர்நூல் பகுதிகள் விஜயநகரப் பேரரசின் பகுதிகளாயின.
இக்காலத்தில் உம்மாத்தூர் தலைவன் மீண்டும் குழப்பம் விளைவித்தான். எனவே, வீரநரசிம்மன் அவனை அடக்குவதற்காகத் தெற்கு நோக்கிப் பயணமானான். அப்போது, தான் இல்லாதிருக்கும்போது ஆட்சியைக் கவனித்துக் கொள்வதற்காகத் தனது தம்பியான கிருஷ்ண தேவ ராயனைப் பதில் ஆட்சியாளனாக நியமித்தான். வீரநரசிம்மனின் இந்தத் தெற்கு நோக்கிய பயணம் வெற்றி தோல்விகளின் கலவையாகவே முடிந்தது. இப் படையெடுப்பின்போது போத்துக்கீசர் வீரநரசிம்மனுக்குக் குதிரைகள், பீரங்கிகள் முதலியவற்றைக் கொடுத்து உதவினர். இதற்காகப் பத்கல் துறைமுகத்தின் கட்டுப்பாட்டை அவர்கள் எதிர்பார்த்தனர்.
இறுதிக்காலம்
தொகுகதைகளின் படி, வீரநரசிம்ம ராயன் இறக்கும் தறுவாயில் இருந்தபோது, தனது அமைச்சனான சாளுவ திம்மராசன் என்பவனை அழைத்து, தனது எட்டுவயது மகனுக்கு அரசுரிமை கிடைக்கும் பொருட்டுத் தனது தம்பியாகிய கிருஷ்ண தேவ ராயனின் கண்களைப் பிடுங்கிவிடுமாறு கூறினானாம். திம்மராசன் அவ்வாறு செய்யாது, இரண்டு ஆட்டுக் கண்களைக் கொண்டுவந்து காட்டி, கிருஷ்ண தேவ ராயன் இறந்துவிட்டதாகக் கூறினானாம். எனினும் இரண்டு தாய்மாருக்குப் பிறந்த இந்த இரண்டு சகோதரர்களிடையே நட்புறவே நிலவியதாகத் தெரிகிறது. அத்துடன், கிருஷ்ண தேவ ராயனின் முடிசூட்டு விழாவும் சுமுகமாகவே நடைபெற்றது.