அலிய ராம ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
அலிய ராம ராயன் (கி.பி. 1542-1565) எனப் பரவலாக அறியப்படுகின்ற ராம ராயன் விஜயநகரப் பேரரசின் அரவிடு மரபைத் தோற்றுவித்தவன் ஆவான்.[1] அலிய ராம ராயன் இவர் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் .[2] [3] [4] அரவிடு மரபினர் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பெனுகொண்டா தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர் [5][6] . அரவிடு மரபினர் ஆட்சி காலத்தில் தென் இந்தியாவில் தெலுங்கு இனத்தவர்கள் அதிகாரம் மிக்கவர்கள் இருந்தனர் .[7] .
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
கிருஷ்ணதேவராயன் காலம்
தொகுஅலிய ராமராயனும், அலிய திருமலை ராயனும் விஜயநகரப் பேரரசனான கிருஷ்ணதேவராயனின் மருமக்கள் (sons-in-law) ஆவர். அரவிடு சகோதரர்களான இவர்களும், இவர்களுடைய இன்னொரு சகோதரன் வெங்கடாத்திரியும் கிருஷ்ணதேவராயனுடைய ஆட்சிக் காலத்தில் முன்னிலைக்கு வந்தனர். ராம ராயன் ஒரு வெற்றிகரமான போர்த் தளபதியும், சிறந்த நிர்வாகியும், திறமையான ராஜதந்திரியும் ஆவான். கிருஷ்ணதேவராயனின் கீழ் பல வெற்றிகரமான படையெடுப்புக்களை நடத்தியுள்ளான். புகழ் பெற்ற தனது மாமனாரின் இறப்புக்குப் பின், அவனது குடும்பத்தின் உறுப்பினன் என்ற வகையில், நாட்டின் அலுவல்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தக் கூடியவனாக இருந்தான்.
பதில் ஆளுநர் பதவி
தொகுகிருஷ்ணதேவராயன், காலமானதும், 1529 ஆம் ஆண்டில் அவனது தம்பியான அச்சுத ராயன் அரசனானான். 1542 ஆம் ஆண்டில் அவனும் இறக்க, வயதிற் குறைந்தவனான சதாசிவ ராயனுக்கு முடிசூட்டப்பட்டது. நாட்டு நிர்வாகத்தை சதாசிவ ராயனின் சார்பில் நடத்துவதற்காகத் தானே பதில் ஆளுநராகப் பதவி ஏற்றான். சதாசிவ ராயனுக்கு ஆளுவதற்கு ஏற்ற வயது வந்தபின்னரும் கூட அவனை ஒரு கைதி போலவே வைத்துக் கொண்டு ராம ராயன் தானே ஆட்சியை நடத்தினான்.
அரசுக்கு விசுவாசமாக இருந்த பல அதிகாரிகளை நீக்கிவிட்டுத் தனக்குச் சார்பானவர்களைப் பதவியில் அமர்த்திய இவன், முன்னர் விஜயநகரத்தின் பகைவனான சுல்தான் ஆதில் ஷாவின் படைத் தளபதிகளாக இருந்த இரு முஸ்லிம் தளபதிகள் இருவரையும் கூடத் தனது படையில் அதிகாரிகள் ஆக்கினான். இது பிற்காலத்தில் தலிகோட்டா சண்டையில் பேரரசின் தோல்விக்கு ஒரு காரமாயிற்று.
சுல்தானகங்களில் தலையீடு
தொகுஇவனுடைய ஆட்சிக் காலத்தில் தக்காணத்துச் சுல்தான்கள் தங்களிடையே சண்டையில் ஈடுபட்டிருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் இவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ராம ராயனை நடுவராக அழைத்ததும் உண்டு. இச் சுல்தான்களின் ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி, கிருஷ்ணா ஆற்றுக்கு வடக்கேயும் பேரரசை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு ராமராயனுக்குக் கிடைத்தது. சில அறிஞர்கள், சுல்தானகங்களின் அலுவல்களில் அளவு மீறித் தலையிட்டதாக ராமராயனை விமர்சிப்பது உண்டு. எனினும், சுல்தான்கள் ஒருவரைவிட இன்னொருவர் வளர்ச்சியடையாமல் பார்த்துக் கொண்டது மூலம், விஜயநகரத்துக்கு அவர்களால் ஆபத்து ஏற்படாதபடி செய்தான் என்றும், விஜயநகரத்தின் பெருமையைக் கட்டிக் காப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் ராம ராயன் செய்தானென்றும் முனைவர் பி. பி தேசாய் போன்ற வேறு சிலர் வாதிடுகின்றனர்.
தலைக்கோட்டைப் போர்
தொகுராம ராயன், கடைசி வரையில், ஆட்சியிலிருந்த அரச மரபினருக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டான் எனப்படுகின்றது. 1565 ஆம் ஆண்டில், பேரரசின் முக்கிய தளபதி என்ற வகையில் தக்காணத்துச் சுல்தான்களான உசேன் நிசாம் ஷா, முதலாம் அலி அதில் ஷா, இப்ராகிம் குதுப் ஷா ஆகியோரின் கூட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தலைக்கோட்டைப் போரில் தானே தலைமை தாங்கினான். மிகப் பெரிய படை பலத்தைக் கொண்ட விஜயநகரப் பேரரசுக்கு இலகுவாக வெற்றி கிடைக்கும்போல் தோற்றிய இப் போர், எதிர்பாராத விதமாக, அலிய ராம ராயன் பிடிபட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்குப் பேரழிவாக முடிந்தது. இந்தத் தாக்கத்திலிருந்து விஜயநகரப் பேரரசு ஒருபோதும் மீளவே இல்லை. விஜயநகரம் எதிரிப் படைகளினால் பெரும் அழிவுக்குள்ளானது. நகர மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினரும் அழிக்கப்பட்டனர்.
அரவிடு மரபிடம் ஆட்சியுரிமை
தொகுஇந்த எதிர்பாராத நிகழ்வைத் தொடர்ந்து, போர் முனையிலிருந்து தப்பிச் சென்ற அலிய திருமலை ராயன், பேரரசின் செல்வத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொண்டு, பொம்மை அரசனான சதாசிவ ராயனுடன் பெனுகொண்டாவுக்குத் தப்பி ஓடினான். அங்கே இருந்தபடி பேரரசைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பின்னர் தலைநகரத்தையும் சந்திரகிரிக்கு மாற்றினான். ஆண்டுகொண்டிருந்த துளுவ அரச மரபைச் சேர்ந்த அனைவரும் எதிரிப் படைகளால் கொல்லப்பட்டதனாலும், ராம ராயன் அரச நிர்வாகத்தில் கொண்டிருந்த செல்வாக்குக் காரணமாகவும் அரசபதவி அரவிடு மரபினருக்குச் சேர்ந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.40
- ↑ Aryan Books Internationa, Sākkoṭṭai Krishṇaswāmi Aiyaṅgār (2000). Vijayanagara: History and Legacy (in ஆங்கிலம்). p. 186.
- ↑ MH, Karnatak Historical Research Society (1992). THE Karnatak Historical Review (in ஆங்கிலம்). p. 2.
- ↑ National Book Trust, India, Robert Sewell, Domingos Paes, Fernão Nunes, Vasundhara Filliozat (1999). Vijayanagar: As Seen by Domingos Paes and Fernao Nuniz (in ஆங்கிலம்). p. 51.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Britannica Educational Publishing, Kenneth Pletche (2010). The History of India (in ஆங்கிலம்). p. 147.
- ↑ CM, Claude Markovits (2002). A History of Modern India, 1480-1950 (in ஆங்கிலம்). p. 147.
- ↑ B.G.Paul & co., Henry Heras (1927). The Aravidu dynasty of Vijayanagara (in ஆங்கிலம்). p. 12.