தெலுங்கர்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

தென் இந்தியாவின் ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்தி மற்றும் வங்காளம் மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு.[சான்று தேவை] ஏறத்தாழ எட்டரை கோடி பேர் தெலுங்கு பேசுவதாக இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான கருநாடகம், மகாராட்டிரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்கர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மொரீசியசு, மலேசியா, கனடா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.

தெலுங்கர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கருநாடகம், தமிழ் நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார்.
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து சமயம் கிறிஸ்தவம், இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழி

குறிப்பிடத் தக்கவர்கள்

தொகு

தொடர்புடைய இனக்குழுக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கர்&oldid=4034173" இலிருந்து மீள்விக்கப்பட்டது