கே. என். நேரு

கே. என். நேரு (K. N. Nehru, பிறப்பு: நவம்பர் 9, 1952) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1] மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1986 முதல் பங்குபெற்று வருகின்றார்.

கே. என். நேரு
போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 May 2006 –  15 May 2011
உணவு துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 மே 1996  – 13 மே 2001
மின்துறை அமைச்சர் , தமிழ்நாடு
பதவியில்
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
புள்ளம்பாடி யூனியன் தலைவர்
பதவியில்
1986–1989
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 9, 1952 (1952-11-09) (அகவை 67)
நெய்குளம் , தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) சாந்தா
பிள்ளைகள் மூன்று

கே. என் .நேரு கடந்த 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம், பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். .[2] நெய்குளம் கிராமத்தில் 9 நவம்பர் 1952 ஆம் ஆண்டு பிறந்தார் .[3] ஆரம்ப காலத்தில் 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன்   தலைவராக இருந்துள்ளார் .[4] . சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல்  திருச்சி கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டினர் கே. என் .நேரு .[5] . இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.[6]

தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்தொகு

ஆண்டு தொகுதி முடிவு
1989 இலால்குடி வெற்றி
1991 இலால்குடி தோல்வி
1996 இலால்குடி வெற்றி
2001 இலால்குடி தோல்வி
2006 திருச்சிராப்பள்ளி மேற்கு வெற்றி
2011 திருச்சிராப்பள்ளி மேற்கு தோல்வி
2016 திருச்சிராப்பள்ளி மேற்கு வெற்றி

வெளி இணைப்புகள்தொகு

  • https://scroll.in/article/804887/whos-who-in-tamil-nadu-elections-kn-nehru
  • http://nammatrichyonline.com/exclusive-interview-k-n-neru-breaking-secret/
  • http://www.knnehru.com/about-us.htm
  • https://www.vikatan.com/anandavikatan/2010-jul-07/exclusive-/37458.html
  • http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=3677/
  • https://tamil.oneindia.com/news/2009/01/23/tn-azhagiri-nominated-to-dmk-high-level-committee.html
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._நேரு&oldid=2803695" இருந்து மீள்விக்கப்பட்டது