மரியம் பிச்சை
மரியம் பிச்சை (M. Mariam Pichai) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். [1] இவர் திருச்சிராப்பள்ளியில் அதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், திருச்சி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியின் திமுக அமைச்சர் கே. என். நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்றார். அப்போது அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக மே 16, 2011 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று பதவியேற்றார். 60 வயதான மரியம் தான் பதவியேற்ற எட்டாம் நாளிலிலேயே 2011 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பாடலூர் அருகே ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.[2]
மரியம் பிச்சை | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 27, 1951 சங்கிலியாண்டபுரம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
இறப்பு | மே 23 2011 (அகவை 60) பெரம்பலூர் மாவட்டம், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | சாலை விபத்து |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை வரலாறு |
பணி | அரசியல்வாதி |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கைத் துணை | பாத்திமா கனி |
பிள்ளைகள் | ஆசிக் மீரா, ராஜ் முகமது, அமீர் முகமது |
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த மரியம் பிச்சை வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். திரைப்பட விவெளியீட்டாளராக இருந்த மரியம் பிச்சை, திரையரங்கு ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு சங்கிலியாண்டபுரம் 27 ஆவது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் வாழ்க்கையை துவக்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர் வாழ்கைவரலாறு
- ↑ அமைச்சர் மரியம் பிச்சை மரணம் : விபத்து நடந்தது எப்படி தினமலர் செய்தி, பார்க்கப்பட்ட நாள் 23 மே, 2011