தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 45 அல்லது மாபெரும் தெற்கு வழித்தடம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். சென்னையின் தென்மேற்கு பகுதியில் கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் வழியாக தேனியில் முடிகிறது.[1] மொத்தத்தில் சென்னை முதல் தேனி வரை 501 கிமீ நீளம் ஆகும். சென்னை முதல் திண்டுக்கல் வரை நான்குவழிச் சாலை வசதி உள்ளது. திண்டுக்கல் முதல் தேனி வரை நான்குவழிச் சாலை பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் வரை தென்னக இரயில்வே சார்பில் தொடர்வண்டிப் பாதையும் இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 45 | ||||
---|---|---|---|---|
இந்திய தேசிய நெடுஞ்சாலை 45ன் போக்குவரத்து வரைபடம் ஊதா வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 472 km (293 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | சென்னை, தமிழ்நாடு | |||
தெற்கு முடிவு: | தேனி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | சென்னை - செங்கல்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் - உளுந்தூர்ப்பேட்டை - பெரம்பலூர் - திருச்சி - மணப்பாறை - திண்டுக்கல் - வத்தலகுண்டு - பெரியகுளம் - தேனி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
பெரம்பலூர் நகர் பகுதி முழுவதும் 6 வழிச்சாலை வசதி சிறப்பாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இந்த சாலைக்கு நடுவே பூங்கன்றுகள் பராமரிப்புகளுடன் பார்க்க அழகாக அமைந்துள்ளது.தமிழகத்தில் விபத்து/இறப்பு விகிதம் மிகையான பகுதி இந்த பெரம்பலூர்.
குறிப்பு
தொகு- மேலும் இந்த நான்கு வழி சாலையானது சென்னை-திருச்சி போக்குவரத்துக்கு மிகவும் சுலபமாக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வர மிகவும் வசதியாக உள்ளது. தென் தமிழகத்தில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று வரவும் இவ்வழி நான்கு வழிபாதை உதவியாக உள்ளது.
- மேலும் இந்த சாலையானது திருச்சி-சென்னை இடையேயான போக்குவரத்தானது சுமார் 320 கீமீ தூரத்தை 5 மணி நேரத்தில் விரைவாக செல்ல முடிகின்றது.
- இந்த தேசிய நெடுஞ்சாலையுடன் சேலம், தே. நெ. 68 உளுந்தூர்ப்பேட்டையில் இணைந்து சென்னை வரையிலும்.
- அதே போல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையான 45பி இந்த தேசிய நெடுஞ்சாலையுடன் விழுப்புரம், விக்கிரவாண்டியில் இணைந்து சென்னை வரையிலும். செல்ல போக்குவரத்துக்கு உதவியாக உள்ளது.
- மேலும் சென்னை - தேனி தேசிய நெடுஞ்சாலையானது சென்னையில் இருந்து பல தென் மாவட்டங்களுக்கு செல்ல திருச்சியில் இருந்து விராலிமலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அருப்புக்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் வரையிலும்.
- அதே போல் கீரனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, தொண்டி, தேவிபட்டினம், இராமநாதபுரம், ஏர்வாடி, இராமேசுவரம் வரையிலும்
- மேலும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு, கொடைக்கானல், பெரியகுளம், தேனி, போடி, கம்பம் மற்றும் இதர கேரள மாநிலம் வரையிலும்.
- திண்டுக்கல்லில் பிரிவு சாலையாக ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு, வழியே கொச்சி துறைமுகம் வரையிலும் சாலை அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.