புதுக்கோட்டை
புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974-ஆம் ஆண்டு சனவரி மாதம் 14-ஆம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.
புதுக்கோட்டை புதுகை | |
---|---|
தேர்வு நிலை நகராட்சி | |
![]() புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் | |
அடைபெயர்(கள்): தொண்டைமான் சீமை, புதிய கோட்டை | |
ஆள்கூறுகள்: 10°23′00″N 78°48′00″E / 10.383300°N 78.800100°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
பகுதி | பாண்டிய நாடு மற்றும் சோழ நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | புதுக்கோட்டை நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | சு. திருநாவுக்கரசர் |
• சட்டமன்ற உறுப்பினர் | மருத்துவர் முத்துராஜா |
• மாவட்ட ஆட்சியர் | கவிதா ராமு, இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 21.25 km2 (8.20 sq mi) |
ஏற்றம் | 116 m (381 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,17,630 |
• அடர்த்தி | 5,500/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 622 001 - 622 006 |
தொலைபேசி குறியீடு | 04322 |
வாகனப் பதிவு | TN-55 |
சென்னையிலிருந்து தொலைவு | 390 கி.மீ (242 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 58 கி.மீ (36 மைல்) |
தஞ்சாவூரிலிருந்து தொலைவு | 60 கி.மீ (37 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 111 கி.மீ (69 மைல்) |
இணையதளம் | Pudukkottai |
வரலாறு தொகு
முன்பு இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்திருக்கலாம் என்றும் பொ.ஊ. 1734-இல் நடைபெற்ற போரில் சந்தா சாகிப்பின் படைகளாலோ அல்லது தஞ்சாவூர் தளபதி ஆனந்தராவாலோ இந்தக் கோட்டை அழிவுற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. நகர் பகுதியில் பழைய கோட்டை இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை.பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இரகுநாதர் என்ற தொண்டைமான் மன்னரால் புதிதாக இங்கு கோட்டை கட்டப்பட்டதால் புதுக்கோட்டை என்று பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது. 1825-இல் பழைய ஊரை அழித்து புதிய நகரமானது விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1898-இல் மன்னர் மார்த்தாண்ட தொண்டைமான் ஐரோப்பா சென்று விக்டோரியா மகாராணியை சந்தித்து திரும்பியதன் நினைவாக நகரில் ஒரு நகரமண்டபமானது வடக்கு இராஜவீதியில் கட்டப்பட்டது.(புதுக்கோட்டைக்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் கிராமத்தில் சங்க கால கோட்டை இருந்த இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது போல அகழிகளுடன் கூடிய ஒரே கோட்டை இதுவாகும்) [1] பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது.[2] தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு (சமஸ்தானம்) மார்ச் 3, 1948-இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு தொகு
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1961 | 50,428 | — |
1971 | 66,384 | +31.6% |
1981 | 87,952 | +32.5% |
1991 | 99,058 | +12.6% |
2001 | 1,09,217 | +10.3% |
2011 | 1,17,630 | +7.7% |
Sources: |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 58,737 ஆண்கள், 58,893 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 91.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.53%, பெண்களின் கல்வியறிவு 87.21% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை மக்கள் தொகையில் 11,762 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, புதுக்கோட்டையில் இந்துக்கள் 79.40%, முஸ்லிம்கள் 15.14%, கிறிஸ்தவர்கள் 4.89%, சீக்கியர்கள் 0.02%, 0.04% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.50% பேர்களும் உள்ளனர்.[4]
சுற்றுலா தொகு
- அரசு அருங்காட்சியகம் (இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்).
- புதுக்குளம் (இது புதுக்கோட்டை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரிய குளம்)
இதையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ புதுமையைத் தாங்கி நிற்கும் கோட்டை (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். பக். 171-173.
- ↑ "என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி!". விகடன். http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488. பார்த்த நாள்: 25 சனவரி 2015.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ 4.0 4.1 4.2 "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". https://www.census2011.co.in/census/city/484-pudukkottai.html. பார்த்த நாள்: நவம்பர் 16, 2019.