சு. திருநாவுக்கரசர்
சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[4]
சு. திருநாவுக்கரசர் | |
---|---|
![]() 2012 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர் | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
முன்னையவர் | ப. குமார் |
பின்னவர் | துரை வைகோ |
தொகுதி | திருச்சிராப்பள்ளி |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | ராஜா பரமசிவம் |
பின்னவர் | சே. இரகுபதி |
தொகுதி | புதுக்கோட்டை |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 30 சூன் 2004 – 26 சூன் 2010 | |
தொகுதி | மத்திய பிரதேசம் |
தலைவர், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி | |
பதவியில் 2016–2019 | |
முன்னையவர் | ஈ. வெ. கி. ச. இளங்கோவன் |
பின்னவர் | கே. எஸ். அழகிரி |
கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் | |
பதவியில் 2002–2003 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் | |
பதவியில் 2003–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
தொழில்துறை, வீட்டுவசதி வாரியம், கலால் மற்றும் கைத்தறி அமைச்சர் | |
பதவியில் 1980–1987 | |
துணை சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | கணபதி |
பின்னவர் | பி. எச். பாண்டியன் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977–1999 | |
தொகுதி | அறந்தாங்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சூலை 1949 தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | ![]() |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | அன்பு, ராமச்சந்திரன், சத்யா, அம்ருதா, சாய் விஷ்ணு |
பெற்றோர் | மு. சுப்பராமன் சு. காளியம்மாள் |
வாழிடம் | சென்னை |
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[5] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.[6][7]
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "S. Thirunavukkarasar leaves BJP to join Congress". The Hindu. 9 November 2009. http://www.thehindu.com/news/s-thirunavukkarasar-leaves-bjp-to-join-congress/article45810.ece. பார்த்த நாள்: 2017-05-06.
- ↑ "The king and his pocket borough". The Hindu. 14 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/the-king-and-his-pocket-borough/article8598426.ece. பார்த்த நாள்: 2017-05-06.
- ↑ "தலைவர் 11 தகவல்கள்: சு.திருநாவுக்கரசர்". இந்து தமிழ் திசை (21 செப்டம்பர் 2018)
- ↑ "Delhi confidential: Birthday Plans". The Indian EXPRESS (September 17, 2016)
- ↑ "பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு!". Oneindia Tamil (ஏப்ரல் 14, 2009)
- ↑ "தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்". 14 செப்டம்பர் 2016. Retrieved 14 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்!". Oneindia Tamil (பிப்ரவரி 10, 2018)
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ "திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி!". நக்கீரன் (மே 23, 2019)