அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி (Arantangi Assembly constituency) புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அறந்தாங்கி தொகுதியில் அறந்தாங்கி நகராட்சியின் 27 வார்டுகளும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் உள்ளது. மேலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின்20 ஊராட்சிகளும், அரிமளம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகளும் உள்ளன.

அறந்தாங்கி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,37,024[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், முத்தரையர், உடையார், நாடார், யாதவர், வெள்ளாளர், நகரத்தார் மற்றும் இசுலாமியர் போன்ற சமூகத்தினர் கனிசமாக உள்ளனர். இத்தொகுதியில் ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவும் உள்ளது.

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகுகள் மூலமும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர். புதுப்பட்டினம், கோடியக்கரை, முத்துக்குடா உள்ளிட்ட 32 கிராமங்களில் நாட்டுபடகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவனி கிடைத்து வருகிறது.[2]

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்

தொகு

ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்யைல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊர்வணி, ஆலங்க்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்ட்கவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளுர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள்

அறந்தாங்கி (நகராட்சி)[3].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 முஹம்மது சாலிகு மரைக்காயர் காங்கிரசு 19064 52.81 இராமசாமி தேவர் சுயேச்சை 15335 42.48
1957 எசு. இராமசாமி தேவர் சுயேச்சை 17637 43.22 முத்துவேல அம்பலம் காங்கிரசு 14633 35.86
1962 எ. துரையரசன் திமுக 33781 55.25 இராமநாதன் சேர்வை காங்கிரசு 25112 41.07
1967 எ. துரையரசன் திமுக 42943 53.11 கே. பி. சேர்வைக்காரர் காங்கிரசு 36522 45.17
1971 எசு. இராமநாதன் திமுக 49322 55.81 இராமநாதன் சேர்வைக்காரர் நிறுவன காங்கிரசு 37289 42.19
1977 சு. திருநாவுக்கரசர் அதிமுக 35468 37.45 பி. அப்புகுட்டி இந்திய பொதுவுடமைக் கட்சி 24528 25.90
1980 சு. திருநாவுக்கரசர் அதிமுக 50792 49.50 எம். மொகமது மசூத் சுயேச்சை 36519 35.59
1984 சு. திருநாவுக்கரசர் அதிமுக 70101 62.68 எசு. இராமநாதன் திமுக 40197 35.94
1989 சு. திருநாவுக்கரசர் அதிமுக (ஜெ) 61730 47.58 சண்முகசுந்தரம் திமுக 40027 30.85
1991 சு. திருநாவுக்கரசர் தாயக மறுமலர்ச்சி கழகம் 73571 56.46 குழ. செல்லையா அதிமுக 52150 40.02
1996 சு. திருநாவுக்கரசர் அதிமுக 70260 50.10 எசு. சண்முகம் திமுக 56028 39.95
2001 பி. அரசன் எம். ஜி. ஆர். அதிமுக 58499 45.99 எ. சந்திரசேகரன் காங்கிரசு 38481 30.25
2006 உதயன் சண்முகம் திமுக 63333 --- ஒய். கார்த்திகேயன் அதிமுக 45873 ---
2011 எம். இராஜநாயகம் அதிமுக 67559 50.10 எசு. திருநாவுக்கரசு காங்கிரசு 50903 39.95
2016 ஏ. இரத்தினசபாபதி அதிமுக 69905 தி. இராமச்சந்திரன் காங்கிரசு 67614
2021 தி. இராமச்சந்திரன் காங்கிரசு 60,256 மு. இராஜநாயகம் அதிமுக 50,144
  • 1977ல் திமுகவின் எசு. இராமநாதன் 22052 (23.28%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக (ஜா) அணியின் வெங்கடாச்சலம் 13375 (10.31%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை முகமது அலி ஜின்னா 16620 (13.07%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் முகமது அலி ஜின்னா 15347 9153 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
775 %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
  2. 2021-இல் அறந்தாங்கி தொகுதி நிலவரம்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு