தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977
தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ம. கோ. இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். அடுத்த பத்து ஆண்டுகள் அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தொகுதிகள் தொகு
1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
கட்சிகள் தொகு
1967 ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை இரண்டாடுகளுக்குள் 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவில் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். 1971 தேர்தலில் மீண்டும் திமுக வென்று கருணாநிதி இரண்டாம் முறை முதல்வரானார். 1972 இல் திமுக பிளவு பட்டது. எம். ஜி. ஆர் கட்சியைவிட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுகட்சியைத் தொடங்கினார். 1976 இல் காமராஜர் மறைவிற்குப் பின் அவரது நிறுவன காங்கிரசு நிலை குலைந்தது. ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் இணைந்தனர். மற்றொரு பிரிவினர் ஜனதா கட்சியில் இணைந்தனர். காமராஜர் உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் காலூன்ற முடியாத இந்திரா காங்கிரசு அவரது மறைவுக்குப் பின்னர் வலுவடைந்தது. 1972 இல் ராஜகோபாலாச்சாரி இறந்த பிறகு அவரது சுதந்திராக் கட்சியும் செயல்படுவது நின்று போனது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2][3][4][5][6][7]
அரசியல் நிலவரம் தொகு
- திமுக தனது ஐந்தாண்டு ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதி ஆட்சி காலத்தில் செய்த பல ஊழல் முறைகேடு வழக்கான சர்க்காரிய கமிஷன் மற்றும் வீராணம் ஏரிக்கு குழாய் வாங்கிய ஊழல் முறைகேடுகளை காரணம் காட்டியும், பிரதமர் இந்திரா காந்தி அப்போது அமல்படுத்தி இருந்த நெருக்கடி நிலையை எதிர்த்து கருணாநிதி அவர்கள் தீவிரமாக காங்கிரஸ் கட்சி எதிர்த்து தனது அரசியல் சகாக்களோடு போராடியதால். திமுக கூட்டணி கட்சி என்று கூட பாராமல் இந்திரா காந்தியின் மத்திய அரசால் 31.ஜனவரி.1976 அன்று திமுக அரசு கலைக்கப்பட்டு தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனபடுத்தபட்டது.
- மேலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஒராண்டு கழித்து 1977ல் நடத்தப்பட்டது.
- திமுக அரசு அதன் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தது.
- மேலும் நெருக்கடி நிலை காலத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி மற்றும் அவரது கட்சியை சார்ந்த அனைத்து தலைவர்களும் சிறை சென்ற நிகழ்வுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
- இதனால் அன்றைய அதிமுக பல இடைத்தேர்தல்களில் வென்றிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் சத்தியவாணி முத்து, இரா. நெடுஞ்செழியன், எஸ். மாதவன் போன்ற தலைவர்கள் திமுகவில் இருந்து வெளியேறி எதிர்கட்சியான அதிமுகவில் இணைந்தனர்.
- அதிமுக-இந்திரா காங்கிரசு கூட்டணி 1977 ஜனவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. மத்தியில் இந்திரா காந்தி தோற்று போனார்.
- ஆனால் எதிர்கட்சியான திமுக-ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் தோல்வி அடைந்தது. என்றாலும் மத்தியில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஜனதா கட்சி தலைமையில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்.
- நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்கு பிறகு கூட்டணிகள் மாறின. சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது.
- தமிழக மாநில கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தனித்தும். மத்திய கட்சிகளான இந்திரா காங்கிரசு, ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டனர்.
- அதிமுக, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வார்டு ப்ளாக், முஸ்லீம் லீக் ஓரணியாகவும் போட்டியிட்டனர்.
- திமுகவும், ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டனர்.
- இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் தொகு
தேர்தல் தேதி – 10 ஜூன் 1977 ; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[9]
அதிமுக | இடங்கள் | திமுக | இடங்கள் | காங்கிரசு | இடங்கள் | ஜனதா | இடங்கள் |
---|---|---|---|---|---|---|---|
அதிமுக | 130 | திமுக | 48 | காங்கிரசு | 27 | ஜனதா கட்சி | 10 |
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) | 12 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 5 | ||||
ஃபார்வார்ட் ப்ளாக் | 1 | ||||||
சுயேட்சை (முஸ்லிம் லீக்) | 1 | ||||||
மொத்தம் (1977) | 144 | மொத்தம் (1977) | 48 | மொத்தம் (1977) | 32 | மொத்தம் (1977) | 10 |
மொத்தம் (1971) | n/a | மொத்தம் (1971) | 184 | மொத்தம் (1971) | 35 | மொத்தம் (1971) | n/a |
ஆட்சி அமைப்பு தொகு
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் முதல் முதலில் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் எம். ஜி. ஆர் முதலாவது முறை தமிழகத்தின் முதல்வரானார். ஆனால் எதிர்கட்சியான திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்கள் எம். ஜி. ஆர் அன்னிய பிறப்பு இலங்கையர் முதலமைச்சர் பதவியில் நாடாள முடியாது என்று வழக்கு தொடுத்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் இந்தியா சுதந்திரத்திற்க்கு முன்பு இலங்கை தனிநாடாக அங்கிகரிக்கபடவில்லை. அதனால் எம். ஜி. ஆர் அன்னிய பிறப்பில்லை என்று கூறி முதல்வர் பதவியுடன் நாடாள முடியும் என்று தீர்ப்பு வழங்கபட்டு அந்த நீதி போரட்டத்திலும் வெற்றி பெற்று தான் ஒரு நீதிக்கட்சியின் வழி வந்த தலைவர் என்று எம். ஜி. ஆர் நிருபித்து முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தார். அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதற்கு இடையே வந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அவரே தமிழக நிரந்தர மக்கள் சக்தியாகவே திகழ்ந்து முதல்வராகப் பணியாற்றினார்.
மேலும் பார்க்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413233934/http://www.assembly.tn.gov.in/history/history.htm. பார்த்த நாள்: 27 November 2009.
- ↑ 2.0 2.1 Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545.
- ↑ 3.0 3.1 G.G. Mirchandani. 320 Million Judges. Abhinav publications. பக். 124–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:817017013.
- ↑ "G.K. Moopanar passes away". தி இந்து. 31 August 2001 இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040927101815/http://www.hindu.com/thehindu/2001/08/31/stories/01310003.htm. பார்த்த நாள்: 15 February 2010.
- ↑ 5.0 5.1 Atul Kohli (1990). Democracy and discontent: India's growing crisis of governability. Cambridge University Press. பக். 166–167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:052139161. https://archive.org/details/democracydiscont00kohl.
- ↑ Sanjeev Sabhlok (2008). Breaking free of Nehru: let's unleash India!. Anthem Press. பக். 33.
- ↑ Ramakrishnan, T. (25 December 2007). "Remembering a phenomenon". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071227091239/http://www.hindu.com/2007/12/25/stories/2007122555570900.htm. பார்த்த நாள்: 15 February 2010.
- ↑ "Moment of Truth for MGR". Economic and Political Weekly (Economic and Political Weekly) 15 (4): 141–142. 26 January 1980. http://www.jstor.org/pss/4368350. பார்த்த நாள்: 15 February 2010.
- ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் accessed April 19, 2009