தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971

தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெற்று, மு. கருணாநிதி இரண்டாவது முறை தமிழகத்தின் முதல்வரானார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971

← 1967 மார்ச் 1971 1977 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
  Flag DMK.svg 1931 Flag of India.svg
தலைவர் மு. கருணாநிதி காமராஜர்
கட்சி திமுக காங்கிரசு (ஓ)
தலைவரின் தொகுதி சைதாப்பேட்டை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 205 21
மாற்றம் +26 -50
மொத்த வாக்குகள் 8,506,078 5,579,039
விழுக்காடு 54.30% 37.94%
மாற்றம் +1.71% -3.16%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக

தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக

தொகுதிகள்தொகு

1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

கட்சிகள்தொகு

1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக கூட்டணியில் இருந்து விலகியது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், ஃபார்வார்டு ப்ளாக், சி. பா ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசுக் கட்சி, பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2][3][4][5]

அரசியல் நிலவரம்தொகு

திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே மு. கருணாநிதி அவர்கள் தான் வகித்து வந்த முதலைமைச்சர் பதவியில் இருந்து தாமாகவே விலகி தாம் மீது மக்களிடையே நம்பிக்கையை பெறுவதற்கு அதிகார பூர்வமாக தேர்தலை சந்தித்தார். திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவில் அண்ணா இருக்கும் வரை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அண்ணா இறப்பிற்க்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த மு. கருணாநிதி அவர்கள் தனது திமுக கொள்கைக்கும், திராவிட சித்தாந்ததிற்க்கும் எதிரான கொள்கை உடைய மத்திய காங்கிரஸ் உடன் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து காங்கிரசுக்கு 9 இடங்களில் போட்டியிட்டது. மேலும் அப்போது பெரியாரின் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலமான எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் பல விமர்சனங்களால் திமுக இம்முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.[2][3][5]

தேர்தல் முடிவுகள்தொகு

தேர்தல் தேதி – 03 ஜனவரி 1971 ; மொத்தம் 71 % வாக்குகள் பதிவாகின. கட்சிகள் பெற்ற வாக்குகளும் வென்ற இடங்களும்:[6]

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம்
முற்போக்கு முன்னணி
இடங்கள்: 205
மாற்றம்:+26
வாக்குகள்: 8,506,078
வாக்கு %: 54.30%
திமுக 7,654,935 48.58% 203 184 +47
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 364,803 2.32% 10 8 +6
ஃபார்வார்ட் ப்ளாக் 268,721 1.71% 9 7 +6
பிரஜா சோஷ்யலிஸ்ட் 147,985 0.94% 4 4
முஸ்லிம் லீக் 69,634 0.44% 2 2 -1
ஜனநாயக முன்னணி
இடங்கள்: 21
மாற்றம்: -50
வாக்குகள்: 6,016,530
வாக்கு %: 38.18%
நிறுவன காங்கிரசு 5,513,894 34.99% 201 15 -36
சுதந்திராக் கட்சி 465,145 2.95% 19 6 -14
சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி 37,491 0.24% 2 0
மற்றவர்கள்
இடங்கள்: 8
மாற்றம்:
வாக்குகள்: 1,234,193
வாக்கு %: 7.52%
சுயேட்சைகள் 965,379 6.13% 256 8
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 259,298 1.65% 37 0 -11
ஜன சங்கம் 9,516 0.06% 5 0
மொத்தம் 11 கட்சிகள் 15,756,801 100% 234

ஆட்சி அமைப்புதொகு

இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். 1971 இல் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள்.[7]

அமைச்சர் துறை
மு. கருணாநிதி முதல்வர்
இரா. நெடுஞ்செழியன் கல்வி, வருவாய்
கே. ராஜாராம் பிற்படுத்தப்பட்டோர்
க. அன்பழகன் சுகாதாரம்
அன்பில் தர்மலிங்கம் விவசாயம்
எஸ். ஜே. சாதிக் பாட்சா பொதுப்பணிகள்
சத்தியவாணி முத்து அரிஜனர் நலம்
எம். கண்ணப்பன் அற நிலையங்கள்
எஸ். மாதவன் தொழில்
என். வி. நடராஜன் தொழிலாளர் நலம்
ஓ. பி. ராமன் மின்சாரம்
சி. பா. ஆதித்தனார் கூட்டுறவு
பண்ருட்டி இராமச்சந்திரன் போக்குவரத்து

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புதொகு

1971 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்