அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு

இந்திய அரசியல் கட்சி, சுபாசு சந்திர போசின் பற்று

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (All India Forward Bloc) இந்திய நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1939-ஆம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போசால் துவக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அரசால் 1942 இல் தடை செய்யப்பட்டது. 1939 இல் பார்வார்டு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை வெளிவந்தது. 1963 வரை அதன் தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருந்தார். இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது.

வரலாறு

தொகு

பார்வர்டு பிளாக் கட்சி உருவாக்கம் கோபால் தேவர் கோத்தப்புள்ளி

தொகு

சுபாஷ் சந்திர போஸ் ஏப்ரல் 29,1939 இல் மோகன்தாசு கரம்சந்த் காந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகினார். பின் அனைந்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியினை மே 3, 1939 இல் தோற்றுவித்தார். இந்தக் கட்சிக்கான அறிவிப்பினை அவர் கொல்கத்தாவில் நடந்த ஒரு பேரணியில் பொதுமக்களிடையே அறிவித்தார். இந்தக் கட்சியினை உருவாக்கி போஸ் அதன் தலைவரானார். மேலும் எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவரானார். சூன் மாதத்தின் இறுதியில் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு மும்பையில் நடந்தது. சூலை, 1939 இல் பார்வர்டு பிளாக் கட்சியின் குழு உறுப்பினர்களை சுபாஷ் சந்திர போஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவராகவும், புது தில்லியைச் சேர்ந்த லால் சங்கர்லால், பொதுச் செயலாளராகவும்,மும்பையைச் சேர்ந்த பி. திரிபாதி மற்றும் குர்செத் நரிமன் ஆகியோர் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அன்னபூர்னியா மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மும்பையைச் சார்ந்த சேனாபதி பாபத், ஹரி விஷ்னு கம்னாத் பீகாரைச் சார்ந்த ஷீல் பாத்ரா யாகீ ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். மேற்கு வங்காளத்தின் கட்சிச் செயலாளராக சத்யா ரஞ்சன் பக்‌ஷி நியமனம் செய்யப்பட்டார்.[1]

அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பார்வர்டு பிளாக் எனும் இதழை சுபாஷ் சந்திர போஸ் தொடங்கினார். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு தனது புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.[1]

முதல் மாநாடு

தொகு

சூன் 20- 22 1940 இல் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடந்தது. அனித்து உரிமைகளும் இந்திய மக்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில்சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், எச். வி. காம்நாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.[2]

கைது, வெளிநாடு சென்றது

தொகு

சூலை 2 சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 1941 இல் வீட்டுக் காவலில் இருந்து அவர் தப்பிச் சென்றார். ஆப்கானித்தான் வழியாக் சோவியத் ஒன்றியம் சென்றார். இந்திய விடுதலப் போராட்டத்திற்காக சோவியத் ஒன்றியத்தின் உதவியை நாடினார் போஸ். ஆனால் ஜோசப் ஸ்டாலின், போஸின் கோரிக்கையை நிராகரித்தார். எனவே போஸ் ஜெர்மனி சென்றார்.[3]

இரண்டாவது மாநாடு (அர்ரா மாநாடு)

தொகு

அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இரண்டாவது மாநாடு அர்ரா, பீகாரில் ஜனவரி 12-14 1947 இல் நடைபெற்றது. எஸ். எஸ். கேவ்ஷீர் தலைவராகவும், ஷீல் பத்ரா யாகீ பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.[4]

தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பற்றுறுதியதாளர் முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1963 இல் இறந்தார். இவரின் இறப்பினால் அதிகாரத்திற்கு வருவது யார் என்பதில் சசிவர்ன தேவர் மற்றும் பி. கே. மூக்கையா ஆகிய இருதலைவர்களிடையே பிரச்சினை எழுந்தது. இதில் பி. கே. மூக்கையா தேவர் வெற்றி பெற்றார். சசிவர்ன தேவர் கட்சியில் இருந்து விலகி சுப்பாசிஸ்ட் பார்வர்டு பிளாக் எனும் ஒரு புதிய கட்சியைத் துவங்கினார். முத்துராமலிங்கத் தேவரின் இறப்பினால் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.அதில் முதல் முறையாக பார்வர்டு பிளாக் கட்சி தோற்கடிக்கப்பட்டது.[5]

வெளி இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Misra, Chitta Ranjan (2012). "Forward Bloc". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Ghosh, Asok (ed.), A Short History of the All India Forward Bloc. Kolkata: Bengal Lokmat Printers Pvt Ltd., 2001. pp. 32–4, 55
  3. Ghosh, Asok (ed.), A Short History of the All India Forward Bloc. Kolkata: Bengal Lokmat Printers Pvt Ltd., 2001. pp. 36, 39
  4. Ghosh, Asok (ed.), A Short History of the All India Forward Bloc. Kolkata: Bengal Lokmat Printers Pvt Ltd., 2001. p. 55
  5. Velayudham Nayar was the Forward Bloc candidate. His candidature was supported by the Swatantra Party, the Dravida Munnetra Kazhagam and the Indian Union Muslim League. Nayar was defeated by the Congress candidate R.K. Dorai (brother of the Raja of Ramnad). Nayar got 131 281 votes, against 138 358 for Dorai. 2 independent candidates were also in the fray. ECI பரணிடப்பட்டது 2005-08-28 at the வந்தவழி இயந்திரம்