இரா. நெடுஞ்செழியன்

தமிழ்நாட்டின் முன்னால் தற்காலிக முதல்வர்

இரா. நெடுஞ்செழியன் (R. Nedunchezhiyan; 11 சூலை 1920 – 12 சனவரி 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர். ஒரு பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

இரா. நெடுஞ்செழியன்
தற்காலிக தமிழக முதல்வர்
பதவியில்
24 டிசம்பர் 1987 மற்றும் 16 நவம்பர் 1984 – 7 ஜனவரி 1988 மற்றும் 9 பிப்ரவரி 1985
ஆளுநர்சுந்தர் லால் குரானா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
முன்னையவர்ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன்
பின்னவர்ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் வி. என். ஜானகி
தொகுதிஆத்தூர்
பதவியில்
3 பிப்ரவரி 1969 – 10 பிப்ரவரி 1969
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
முன்னையவர்சி. என். அண்ணாதுரை
பின்னவர்மு. கருணாநிதி
தொகுதிதிருவல்லிக்கேணி
நிதியமைச்சர்
பதவியில்
24 ஜூன் 1991 – 12 மே 1996
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
பதவியில்
9 ஜூன் 1980 – 24 டிசம்பர் 1987
முதலமைச்சர்ம. கோ. இராமச்சந்திரன்
பதவியில்
6 மார்ச் 1967 – 31 ஜனவரி 1976
முதலமைச்சர்கா. ந. அண்ணாதுரை,
மு. கருணாநிதி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்
பதவியில்
செப்டம்பர் 1977 – 23 ஜூன் 1978
இடைக்காலம்
பதவியில்
23 ஜூன் 1978 – 10 ஜூன் 1980
முன்னையவர்ம. கோ. இராமச்சந்திரன்
பின்னவர்ப. உ. சண்முகம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்
பதவியில்
4 பிப்ரவரி 1969 – 1977
முன்னையவர்கா. ந. அண்ணாதுரை
பின்னவர்க.அன்பழகன்
பதவியில்
1957–1962
முன்னையவர்கா. ந. அண்ணாதுரை
பின்னவர்கா. ந. அண்ணாதுரை
4வது மதராஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
29 மார்ச் 1962 – 28 பிப்ரவரி 1967
முதலமைச்சர்
முன்னையவர்வி. கே. ராமசாமி
பின்னவர்பி.ஜி. கருத்திருமன்
தொகுதிதிருவல்லிக்கேணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரா.கோ.நாராயணசாமி

(1920-07-11)சூலை 11, 1920
திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறப்புசனவரி 12, 2000(2000-01-12) (அகவை 79)
சென்னை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
திராவிடர் கழகம் (1949 வரை) திராவிட முன்னேற்றக் கழகம் (1949-1977) மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் (1977)
துணைவர்விசாலாட்சி நெடுஞ்செழியன்
பிள்ளைகள்மதிவாணன்
பெற்றோர்தந்தை : இராசகோபாலனார்
தாயார் : மீனாட்சிசுந்தரி
வாழிடம்சென்னை
கல்விமுதுகலைமானி தமிழ்
கையெழுத்து

குடும்பம்

தொகு

அன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி இராசகோபாலனார்-மீனாட்சிசுந்தரி இணையாருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் இரா.கோ.நாராயணசாமி. பின் நாட்களில் தந்தை பெரியாரின் திராவிட சித்தாந்த கருத்துகளாலும், தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றாலும் ஈர்க்கப்பட்டு இவர் தனது பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.[1] இவரது மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி நெடுஞ்செழியன். இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951)[2] என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர்.[3] நாடாளுமன்ற உறுப்பினரான இரா. செழியன், இவரின் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.

கல்வி

தொகு

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றார். அங்கு இவரோடு பயின்றவர் க. அன்பழகன். கல்வி முடிந்ததும், 1945ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில், அவிநாசி சாலையிலிருந்த, யூ.எம்.எஸ். விடுதியில் விடுதிக்காப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.[4]

அரசியல்

தொகு

சுயமரியாதை இயக்கத்தில்

தொகு

பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுதே, இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சியில் சேர்ந்தார்.

திராவிடர் கழகத்தில்

தொகு

இவ்வியக்கம், 'நீதிக்கட்சி'யோடு இணைக்கப்பட்டு, 'திராவிடர் கழகம்'(தி.க.) உருவான பொழுது, அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அக்காலகட்டத்தில், பெரியாரைப் போல இவருக்கும் தாடியிருந்ததால் 'இளந்தாடி' நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்

தொகு

பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு 'திராவிட முன்னேற்றக் கழகம்' தொடங்கிய பொழுது, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1956 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழுச் செயலாளராக இருந்தார்.1962 முதல் 1967 வரை எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார்.1956 முதல் 1962 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1977ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்

தொகு

1977ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து, க. இராசாராமோடு இணைந்து, 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டுத்தேர்தலில் 'அ.தி.மு.க.' அமைத்த கூட்டணியில், மக்கள் தி.மு.க. இடம்பெற்றது.1977ஆம் ஆண்டில், மக்கள் தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்

தொகு

1977-இல் அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். பின்னர், 1977 முதல் 1978ஆம் ஆண்டு வரை செயல் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 1978 முதல் 1980 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ. ஜெயலலிதாவை அஇஅதிமுகவின் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்பாடுபட்டார்.

அஇஅதிமுக (நால்வர் அணி)

தொகு

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், க.இராசாராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து, அஇஅதிமுக (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில், அதற்கு அடுத்த தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிது காலம், அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

மீண்டும் அஇஅதிமுகவில்

தொகு

பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து, 1989 இல் மீண்டும் அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், 1996இல் இருந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். 1991ல் ஜெயலலிதா 1991 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்தார். அந்த தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்று நிதித்துறை அமைச்சராக பதவியேற்றார். அந்த காலகட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல திட்டங்களையும் இட ஒதுக்கீடு, சமூக நீதி, போன்றவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக செயல்பட்டார்.

1996 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக பலமான தோல்வியை சந்தித்தபோதிலும் தான் ஊழல் வழக்கில் சிறை சென்ற போதிலும் அஇஅதிமுக கட்சியை வழி நடத்தி சென்று மீட்டெடுத்த பெருமை நாவலரையே சேரும் என்று ஜெயலலிதா கூறினார். பின்பு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரான கொள்கை உடைய பாரதிய ஜனதா கட்சியில் வாஜ்பாய் பிரதமராக ஆதரவு தரவேண்டும் என்று ஜெயலலிதாவிடம் ஆலோசனை கூறினார் நெடுஞ்செழியன்.[சான்று தேவை] அதே போல் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் வைகோ மதிமுக இணைவதற்கு காரணமாக இருந்தவரும் நெடுஞ்செழியனே.[சான்று தேவை]

ஜெயலலிதா மீது உள்ள ஊழல் குற்ற வழக்குகளை நடத்தி வந்த நீதிமன்ற விசாரணையை நீக்க வேண்டும், அதற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் பதவி சுப்ரமணியசாமிக்கும், மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி வாழப்பாடி ராமமூர்த்திக்கும் வழங்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் மீது இக்குற்ற ஊழல் வழக்குகளை தொடுத்த எதிர்க்கட்சி தலைவர் மு. கருணாநிதியின் அப்போது தமிழ்நாட்டில் நடந்து வந்த அவரது திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் மூலம் பிரதமர் வாஜ்பாய்க்கு கோரிக்கை வைப்பதற்கு காரணமாக இருந்தார்.[சான்று தேவை]

அமைச்சர்

தொகு
  • 1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார் (தி.மு.க.)
  • அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால், அதன்பின் பதவியேற்ற கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
  • 1969 முதல் 1975 வரை மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார் (தி.மு.க.).
  • 1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார் (அ.தி.மு.க.).
  • 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார் (அ.தி.மு.க.) .
  • இதுவரை தமிழ்நாடு அரசின் இடைக்கால முதலமைச்சராக இருந்த ஒரே நபர் இவர் மட்டுமே. 3 முறை இடைக்கால முதலமைச்சராக இருந்தவர் இந்தியாவில் இவர் ஒருவர் மட்டுமே. முதலமைச்சர் அறிஞர் அண்ணா இறந்த பொழுது 1969 பெப்ரவரி 3 முதல் 1969 பெப்ரவரி 10 வரையும், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுது 1984 நவம்பர் 16 முதல் 1985 பிப்ரவரி 9 வரைவும், எம்.ஜி.ஆர் இறந்த பொழுது 1987 திசம்பர் 24 முதல் 1988 சனவரி 7 வரையும் இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

நூல்கள்

தொகு

கட்டுரை

தொகு
  • கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது), 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1
  • சொல்லும் சுவையும் (குறுந்தொகை ஓவியம்), 1974, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை-8
  • பண்டைக் கிரேக்கம், 1954, திராவிடப்பண்ணை, திருச்சி
  • பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு
  • புதிய பாதை, 1948, ஞாயிறு நூற்பதிப்புக் கழகம், புதுச்சேரி. [5]
  • மதமும் மூடநம்பிக்கையும், திராவிடர் கழகம், சென்னை
  • மறைந்த திராவிடம், 1953 மன்றம் பதிப்பகம், சென்னை-1
  • மொழிப்போராட்டம், 1948 அக்டோபர் 18, திராவிடப்பண்ணை, திருச்சி.
  • திமுக
  • திருக்குறளும் மனுதர்மமும்
  • நீதிக்கட்சியின் வரலாறு
  • வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் (தன்வரலாற்று நூல்), நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.

சொற்பொழிவு

தொகு
  • எழுச்சி முரசு; 1946; திராவிட மாணவர் கழகம், பொன்மலை சொற்பொழிவு எழுச்சியும் அரசு 1946இல் திராவிடர் கழகம் சொற்பொழிவு எவ்வளவு. (பொன்மலை திராவிட மாணவர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை) [6]
  • சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்; 1949; மறுமலர்ச்சி நூல்நிலையம், சென்னை. (இரண்டாம் பதிப்பு: 2018, திராவிடர் கழகம், சென்னை.) (1949ஆம் ஆண்டில் சென்னை அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரை)
  • பகுத்தறிவு முழக்கம், திராவிடர் கழகம், சென்னை
  • தீண்டாமை (சென்னை அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரை)
  • திருக்குறள் தெளிவுரை, நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.

மொழிபெயர்ப்பு

தொகு
  • இங்கர்சால் நூலொன்றை மொழிபெயர்த்துள்ளார்

இதழாளர்

தொகு
  • மாலைமணி நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  • மன்றம் என்ற மாதம் இருமுறை இதழை 1-5-1953ஆம் நாள் தொடங்கினார்.
  • திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.

ஆளுமை

தொகு

நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2021 திசம்பர் 26 அன்று சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நெடுஞ்செழியனின் மார்பளவு சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார். அத்துடன், இரா. நெடுஞ்செழியனின் நூல்களை நாட்டுடமையாக்கி அதற்கான நூலுரிமைத் தொகையாக அவரின் வாரிசுகளுக்கு 25 இலட்சம் வழங்கினார்.[7] மன்றம் அச்சம் என்னும் பெயரில் ஓர் அச்சகத்தையும் மன்றம் பதிப்பகத்தையும் 26, நைனியப்பன் தெரு, மண்ணடி, சென்னை-1 என்னும் முகவரியில் 1953 மார்ச் மாதம் நிறுவினார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. சுகுணா திவாகர், ed. (18 ஜூலை 2019). நாவலர் ஆன நாராயணசாமி! நெடுஞ்செழியன் 100. விகடன் இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  2. திராவிடநாடு (இதழ்) நாள்:1-7-1951, பக்கம் 7
  3. [https://web.archive.org/web/20191101051730/https://www.eihassociatedhotels.in/investor_relations/notice-ad-08-07-2019-makkal-kural.pdf பரணிடப்பட்டது 2019-11-01 at the வந்தவழி இயந்திரம் மக்கள் குரல் 10-7-2019,பக்.3
  4. குடியரசு, 3-3-1945, பக்.9
  5. குடி அரசு, 10-4-1948, பக்.10
  6. குடி அரசு 14-12-1946 பக்.5
  7. "நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா : சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்". ThanthiTV.com. 2021-12-26. Archived from the original on 2021-12-28. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
  8. திராவிடநாடு (இதழ்) நாள்:22-3-1953, பக்கம் 1

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._நெடுஞ்செழியன்&oldid=4083344" இலிருந்து மீள்விக்கப்பட்டது