ப. உ. சண்முகம்

ப. உ. சண்முகம் (P. U. Shanmugam) (15 ஆகத்து 1924 - 11 ஏப்ரல் 2007) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திருவண்ணாமலையில் உள்ள நகரவை உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.[2] 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1971 மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1977 களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._உ._சண்முகம்&oldid=2703737" இருந்து மீள்விக்கப்பட்டது